குழந்தை வளர்ப்பு முறைகள் பற்றிய முக்கிய குறிப்புகள் !!!
குழந்தை வளர்ப்பு முறைகள் என்பது, மிகப் பெரிய கலை. வாய் திறந்து பேசும் வரை, எதற்காக குழந்தை அழுகிறது என தெரியாமல், தாய்மார்கள் படும் அவஸ்தையை விளக்க வார்த்தைகள் இல்லை.
பிறந்த குழந்தையின் வளர்ச்சிப் படிநிலைகள்..! முழு வளர்ச்சி அட்டவணை
சரி வாங்க பிறந்த குழந்தை வளர்ப்பு முறைகள் (kulanthai valarpu) பற்றி சிலவற்றை இந்த பகுதில் நாம் படித்தறிவோம்
குழந்தை பராமரிப்பு குறிப்புகள்
குழந்தை வளர்ப்பு முறைகள் :1 – குழந்தையை தூக்கும் முறை:
குழந்தை பராமரிப்பு குறிப்புகள் :- குழந்தை வளர்ப்பு முறைகள் என்பது மிகவும் கடினமான ஒன்று அதுவும் பிறந்த சில மாதங்கள் வரை குழந்தைகளுக்கு தலை நேராக நிற்காமல் இருக்கும். குழந்தையை சரியாக தூக்காமல் இருந்தால் குழந்தையின் கழுத்தில் சுளுக்கு விழுந்துவிடும். இதன் காரணமாக குழந்தை வலியால் தொடர்ந்து அழுது கொண்டே இருக்கும்.
அப்போது குழந்தைக்கு உரம் விழாமல் இருப்பதற்காக சுய மருத்துவம் செய்ய கூடாது.
குழந்தையை தூக்கும்போது குழந்தையின் கழுத்து பகுதியையும், தலையையும் பிடிமானம் கொடுத்தே தூக்க வேண்டும். இவ்வாறு துக்கினால்தான் குழந்தைக்கு கழுத்தில் சுளுக்கு விழாமல் இருக்கும்.
குழந்தை வளர்ப்பு முறைகள் :2 – குழந்தையை குளிப்பாட்டும் முறை:
குழந்தை பராமரிப்பு குறிப்புகள் :- பிறந்த குழந்தையை தாயே பயமின்றி குளிப்பாட்டலாம். குழந்தையின் பேபி ஆயில் உடல் முழுவதும் தடவி வருடி விடவும்.
பின்பு நீங்கள் தரையில் அமர்ந்து கொண்டு குழந்தையின் தலை இடது கையில் வருவது போலத் தூக்கி பிடிக்க வேண்டும்.
குழந்தையின் உடலுக்கு பேபி சோப் போட்டு குளிப்பாட்டவும் தலை மற்றும் முகத்தை கழிவி விடவும்.
குழந்தையை தலைக்கு குளிப்பாட்டி விடும் போது உங்களது ஒரு கையை அகல விரித்து குழந்தையின் நெற்றி பகுதியைப் பிடித்த படி தண்ணீர் ஊற்ற வேண்டும்.
குளிப்பாட்டிய உடன் தலை, காது, மூக்கு, கழுத்துப் பகுதியை ஈரம் போகத் துவட்டுங்கள்.
குழந்தை வளர்ப்பு முறைகள் :3 – குழந்தைக்கு பால் கொடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும்:
குழந்தை பராமரிப்பு குறிப்புகள் :- குழந்தைக்கு பால் கொடுக்கும்போது எப்போதும் அமர்ந்த நிலையில் கொடுக்க வேண்டும்.படுத்துக்கொண்டே பால் கொடுத்தால், குழந்தையின் கழுத்து பகுதி ஒருபுறமாக சாய்ந்து, பால் குடிக்க குழந்தை சிரமம் படும்.
அதுமட்டும் இன்றி படுத்த நிலையில் குழந்தைக்கு பால் கொடுக்கும்போது குழந்தையின் மூக்கில் பால் ஏறி சில விபரீதங்கள் ஏற்படுகின்றன.
எனவே தாயானவள் குழந்தைக்கு பால் புகட்டும்போது அமர்ந்த நிலையில் தான் கொடுக்க வேண்டும்.
குழந்தைக்கு தடுப்பூசி அட்டவணை ..!
குழந்தை வளர்ப்பு முறைகள் :4 – உர மருந்து:
குழந்தை பராமரிப்பு குறிப்புகள் :- பிறந்த குழந்தைகளுக்கு உர மருந்து கொடுப்பது மிகவும் அவசியமான ஒன்று.
அதாவது உர மருந்து என்னவென்றால் சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, அதிமதுரம், சீரகம், கருஞ்சீரகம், காட்டுச்சீரகம், வால்மிளகு, வெள்ளை மிளகு இதனுடன் மூலிகைச்சாறு, கற்பூரவல்லிச்சாறு, வெற்றிலைச்சாறு, துளசிச்சாறு, திருநீற்றுபச்சிலைச்சாறு இவற்றையெல்லாம் சேர்த்து அரைத்து சாக்பீஸ் மாதிரி உருட்டி ஒவ்வொரு வீட்டிலும் ஒரு டப்பாவில் போட்டு வைத்திருப்பார்கள்.
குழந்தைக்கு முதலில் ஏற்பட கூடிய நோய் என்னவென்றால் மாந்தம் என்று சொல்லுவோம். இந்த மாந்தத்திற்கு தடுப்பூசி ஒன்றும் கிடையாது. இதற்கு அந்த காலத்தில் உர மருந்து ஒன்றே மருந்தாகும்.
பிறந்த குழந்தைகளுக்கு உரமருந்து கொடுப்பது எப்படி?
குழந்தை வளர்ப்பு முறைகள் :5 – குழந்தை தூங்கும் நேரம்:
குழந்தை வளர்ப்பு டிப்ஸ் :- குழந்தை பிறந்த முதல் இரண்டு மாதங்களுக்கு ஒரு நாளைக்கு 16 மணிநேர தூக்கம் அவசியம். ஒவ்வொரு தூக்க நேரமும் 2-4 மணிநேரங்கள் இருக்கலாம்.
அவ்வாறு தூங்கவில்லை என்றால் பயப்பட அவசியம் இல்லை. உங்கள் குழந்தை பசியாக இருக்கலாம், டையப்பரை மாற்ற வேண்டியதாக அல்லது செறிமான பிரச்சனையாக இருக்கலாம்.
அதே போல் குழந்தைக்கு 3 மணிநேரத்திற்கு ஒரு முறை பால் தரவேண்டியதும் அவசியம். குழந்தை தூங்கிக்கொண்டு இருந்தாலும் எழுப்பி பால் தர வேண்டும்.
குழந்தை வளர்ப்பு முறைகள் :6 – குழந்தையை குலுக்காதீர்கள்:
குழந்தை வளர்ப்பு டிப்ஸ் :- பிறந்த குழந்தையை விளையாட்டாகவும், கொஞ்சுவதற்காகவும் குலுக்குவது கூடாது. இது குழந்தையின் உட்பகுதிகளில் இரத்த கசிவை ஏற்படுத்தும்.
அதே போல் குழந்தைக்கு பால் கொடுத்து முடித்தவுடன் கொஞ்சுவதன் பெயரில் குலுக்கினாள், குழந்தை குடித்த பாலை வாந்தி எடுத்துவிடும்.
குழந்தை வளர்ப்பு முறைகள் :7 – நகங்களை வெட்டிவிட வேண்டும்:
குழந்தை வளர்ப்பு டிப்ஸ் :- குழந்தைக்கு நகங்கள் மிகவும் வேகமாக வளர்ந்து விடும். குழந்தை சாதாரணமாக கை, கால்களை அசைக்கும்போது நகங்களால் கீறல்களை உண்டாக்கும்.
எனவே வாரத்தில் ஒரு முறையாவது குழந்தைக்கு நகங்களை வெட்டி விடுவது மிகவும் நல்லது.
குழந்தை வளர்க்க சிரமப்படுகிறீர்களா? – கவலை வேண்டாம்… இந்தாங்க சில குழந்தை வளர்ப்பு டிப்ஸ்
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.