குழந்தை உடம்பை முறுக்கி அழுவது ஏன்? | Why Baby Twist Their Body in Tamil Language
குழந்தைகளை பெற்று எடுப்பதை விட மிக பெரிய காரியம் குழந்தையை வளர்ப்பது தான். ஒவ்வொரு குழந்தையையுமே பெற்றோர்கள் பார்த்து பார்த்து தான் வளர்ப்பார்கள். ஒரு சில பெண்கள் குழந்தையை பெரியவர்களின் துணையில்லாமல் வளர்ப்பார்கள், அப்படிப்பட்ட தாய்மார்களுக்கு குழந்தை அழுகும்போது, உடலை முறுக்கும்போது, பால் கக்கும் போது மனதில் பல விதமான கேள்விகள் எழும். எதனால் இப்படி செய்கிறது என்று பலரும் பயப்படுவார்கள். அதுவே வீட்டில் பெரியவர்கள் வீட்டில் இருந்தால் குழந்தை இதுக்காக தான் அழுகிறது என்று கூறுவார்கள். வீட்டில் பெரியவர்கள் இல்லாத போது ஒவ்வொரு விஷயத்தையும் மொபைலில் போட்டு தான் தெரிந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் இந்த பதிவில் பிறந்த குழந்தை உடலை முறுக்குவதற்கான காரணத்தை தெரிந்து கொள்வோம் வாங்க.
| குழந்தை ஏன் அழுகிறது என்று தெரியுமா? |
பிறந்த குழந்தை உடலை முறுக்குவது ஏன்?

- குழந்தை உடம்பை முறுக்கி அழுவது ஏன்: குழந்தை உடலை முறுக்குவதற்கு முதல் காரணம் பிள்ளை முதலில் தாயின் கருவில் இருக்கும். பின் கருவில் இருந்து வெளிவரும் போது இந்த சுற்று சூழல் குழந்தைக்கு மாறுபட்டதாக இருக்கும். இந்த சூழலை குழந்தை ஏற்றுக்கொள்ளும் வரை உடலை முறுக்கி அழுகும்.
- குழந்தைகளின் துணியை துவைக்கும் போது குறைவான அளவு சோப்பை பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அதில் உள்ள வேதிப்பொருட்கள் பிள்ளையின் சருமத்திற்கு ஒத்து கொள்ளாமல் உடலை முறுக்கி அழுவதற்கான வாய்ப்பு உள்ளது.
- குழந்தையின் துணியை அதிக நேரம் வெயிலில் போட்டாலோ அல்லது துணியை முறுக்கினாலோ குழந்தை உடலை முறுக்கி அழலாம் என்று நம் முன்னோர்கள் சொல்வது வழக்கம்.
Pirantha Kulanthai Udalai Murukuvathu Yen:

- தொட்டிலை முறுக்கினால் அல்லது பெரிய பிள்ளைகள் பிறந்த குழந்தையின் தொட்டிலில் உட்கார்ந்து ஊஞ்சல் ஆடினாலோ குழந்தை உடலை முறுக்கும்.
- குழந்தையை தூக்கும்போது பக்குவமாக தூக்க வேண்டும், குழந்தையை தூக்க தெரியாமல் தூக்கினாலும் அழுவதற்கான வாய்ப்பு உள்ளது.
- வயிறு வலித்தாலும் இப்படி தான் அழுவார்கள்.
- குழந்தை உடலை அடிக்கடி முறுக்கி அழுதால் கரு நொச்சி இலை எடுத்து அதில் உள்ள நரம்புகளை நீக்கி விட்டு, அந்த இலையை வாணலியில் போட்டு வதக்கி கொள்ளவும். பின் அதை ஆற வைத்து மிதமான சூடு இருக்கும்போது குழந்தை படுக்கும் இடத்தில் போட்டால் உடலை முறுக்கி அழாமல் இருக்கும்.
- இதை ஒருநாள் விட்டு ஒருநாள் தொடர்ந்து செய்து வந்தால் உடனடியாக சரி ஆகி விடும்.
பிறந்த குழந்தை பால் கக்குவது ஏன்?

- குழந்தை அடிக்கடி பால் கக்கினால் இரைப்பை குடல் அழற்சி நோய் (GERD) ஆக இருக்கலாம். குழந்தை அடிக்கடி வாந்தி எடுத்தால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும்.
- மேலும் குழந்தையின் உடல் எடை அதிகரிக்காமல் இருந்தால் அல்லது மூச்சு விடுவதற்கு சிரமம் இருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
குழந்தை உடலை முறுக்கி அழுவது ஏன்?
தாயின் கருவில் இருக்கும் போது குழந்தைகளுக்கு உணவு ஆனது தாயின் மூலம் கிடைக்கும். இதன் மூலம் குழந்தையின் உடல் உறுப்பு ஆனது இயங்காது. ஆனால் குழந்தை பிறந்த பிறகு அவை சாப்பிடும் தாய்ப்பால் ஆனது செரிமானம் ஆக்குவதற்கு வ குழந்தையின் உடல் உறுப்புகள் ஆனது வேலை செய்யும். இதன் மூலம் குழந்தை ஆனது சில அசெளகரியத்தை உணர் செய்யும். இதனால் தான் குழந்தைகள் உடலை முறுக்கி கொண்டு அழுகிறது.
| குழந்தை குளிக்கும் போது ஏன் அழுகிறது தெரியுமா..? |
| இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |














