அரைக்கீரை குழம்பு செய்முறை:
சத்து நிறைந்த கீரைகளில் அரைக்கீரையும் ஒன்று. குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் உகந்த கீரையாகும். இந்த கீரையை வேகவைத்து கடைந்து சாதத்துடன் மசித்து சிறிது நெய் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். சரிவாங்க சத்து நிறைந்த அரைக்கீரை குழம்பு எப்படி செய்வது என்று இவற்றில் நாம் காண்போம்.
தேவையான பொருட்கள்:
- அரைக்கீரை – ஒரு கட்டு
- கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை – சிறிதளவு
- எண்ணெய் – 1/4 குழிகரண்டி
- வெங்காயம் – 150 கிராம்
- தக்காளி – 150 கிராம் (பொடியாக நறுக்கிகொள்ளவும்)
- உப்பு – தேவையான அளவு
- துவரம்பருப்பு – 1/2 ஆழாக்கு (வறுத்து அரைக்கவும்)
- துவரம்பருப்பு – 2 டீஸ்பூன்
- தனியா – 2 டீஸ்பூன்
- வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
- மிளகு – 1 டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 8
செய்முறை:
துவரம்பருப்பை நன்கு வேகவைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.
அரைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொண்டு, பொடிதாக நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு கனமான பாத்திரத்தை எடுத்து கொள்ளவும்.அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றவும்.
எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அவற்றில் வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
நன்றாக வதங்கிய பின்பு அரைக்கீரையை சேர்த்து தேவையான அளவிற்கு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வேகவைக்க வேண்டும்.
அரைக்கீரை நன்றாக வெந்ததும் மசித்து, வேகவைத்த துவரம்பருப்பை சேர்க்க வேண்டும்.
கீரையை இறக்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் வறுத்து அரைத்த பருப்பு பொடியை தூவி இறக்கவும்.
அவ்வளவுதான் சுவையான அரைகீரை குழம்பு தயார்.
குறிப்பு:
இதை கெட்டியாக வைத்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம் மிகவும் சுவையாக இருக்கும். சிறிது நீர்க்க வைத்து டிபன் வகையறாக்களுக்கும் தொட்டு சாப்பிடலாம்.
மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல், குறிப்பு மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.