சிம்பிளான செட்டிநாடு இறால் குழம்பு செய்வது எப்படி ?

செட்டிநாடு இறால் குழம்பு

சிம்பிளான செட்டிநாடு இறால் குழம்பு செய்வது எப்படி ?

Chettinad prawn recipes in tamil :-

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ருசியான செட்டிநாடு இறால் குழம்பு செய்வது எப்படி (chettinad prawn recipes in tamil) என்று தெரிந்து கொள்வோம் வாங்க..!

சுவையான மினி பிட்சா செய்வது எப்படி !!!

செட்டிநாடு இறால் குழம்பு – தேவையான பொருட்கள்:

 1. இறால் – 400 கிராம்
 2. மிளகு – 1 டீஸ்பூன்
 3. சீரகம் – 1 டீஸ்பூன்
 4. வெந்தயம் – 1 டீஸ்பூன்
 5. கடுகு – 1 டீஸ்பூன்
 6. கசகசா – 1 டீஸ்பூன்
 7. வெங்காயம் – 1 (நறுக்கியது)
 8. தக்காளி – 1 (நறுக்கியது)
 9. பூண்டு – 5 பல் (அரைத்தது)
 10. பச்சை மிளகாய் – 5
 11. மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
 12. தேங்காய் – 1/2 கப் (துருவியது)
 13. எண்ணெய் – தேவையான அளவு

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுவையான வெஜ் நூடுல்ஸ் செய்முறை !!!

செட்டிநாடு இறால் குழம்பு செய்முறை (அ) செட்டிநாடு இறால் குழம்பு செய்வது எப்படி ?:-

செட்டிநாடு இறால் குழம்பு செய்ய முதலில் இறாலை நன்கு கழுவி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர், மஞ்சள் தூள் மற்றும் உப்பை சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க விட்டு, பின் அதில் உள்ள நீரை வடிகட்டி விடவும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம் மற்றும் கசகசா சேர்த்து, 2-3 நிமிடம் வறுக்கவும்.

பிறகு சூடு ஆறியதும், அதனை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு நைஸாக பேஸ்ட் போல் அரைக்கவும்.

பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தேங்காயை போட்டு 2-3 நிமிடம் வறுக்கவும்.

பின் அதனை எடுத்து ஆறியதும், மிக்ஸியில் வறுத்த தேங்காய், பச்சை மிளகாய் போட்டு, நன்கு நைஸாக பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்.

தேங்காயை வறுத்த அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும். பின் அதில் தக்காளி, பூண்டு மற்றும் உப்பு சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கவும்.

தக்காளி நன்கு வதங்கியதும், அதில் வறுத்து, அரைத்து வைத்துள்ள மசாலாவை போட்டு, 3-4 நிமிடம் வேக வைக்கவும்.

பின் அதில் தேங்காய் பேஸ்ட் சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி, வேக வைத்துள்ள இறாலைப் போட்டு, தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

இப்போது சுவையான செட்டிநாடு இறால் குழம்பு ரெடி!!! இதனை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

செட்டிநாடு இறால் குழம்பு செய்வது எப்படி (chettinad prawn recipes in tamil) என்று தெரிந்து கொண்டீர்களா வீட்டில் செய்து அசத்துங்கள்..!

இறால் வறுவல் (Prawn fry in tamil) செய்ய தேவையான பொருட்கள்.!

 1. இறால் – அரை கிலோ
 2. பச்சை மிளகாய் – 5
 3. இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்
 4. வெங்காயம் – 2
 5. மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
 6. மிளகுத்தூள் – 1 ஸ்பூன்
 7. மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
 8. கொத்தமல்லி – சிறிதளவு
 9. உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

இறால் வறுவல் செய்முறை (Prawn fry in tamil)..!

இறாலை நன்றாக கழுவி மஞ்சள் தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

கொத்தமல்லி, பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலையை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை மணம் மாறும் வரை நன்றாக வதக்கவும்.

அடுத்து அதில் ஊற வைத்த இறால் கலவையை வாணலியில் போட்டு நன்றாக பிரட்டவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விடவும். இறால் விரைவில் வெந்து விடும்.

இறால் வெந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

சூப்பரான இறால் வறுவல் (prawn fry in tamil) ரெடி.

இட்லி, தோசை, சாதம் உள்ளிட்டவைகளுடன் தொட்டு, பிரட்டி சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

சுவை மிகுந்த மாலை நேர சிற்றுண்டி – வெங்காய பஜ்ஜி செய்முறை !!!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள் , ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.