சுவையான மினி பிட்சா செய்வது எப்படி !!!
வீட்டிலேயே பிட்சா உங்களுக்கு செய்ய தெரியுமா ? இல்லையெனில் தொடந்து படிக்கவும் ஏனெனில் இங்கு குழந்தைகளுக்கு பிடித்த பிட்சா செய்வது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது, குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி வாங்க பிட்சா செய்வது எப்படி என்று படித்தறிவோம்.
சுவை மிகுந்த மாலை நேர சிற்றுண்டி – வெங்காய பஜ்ஜி செய்முறை !!!
பிட்சா செய்வது எப்படி ? ( How to make pizza at home in tamil) – தேவையான பொருட்கள்:
- மைதா – 1/2 கப்
- கோதுமை மாவு – 1/4 கப்
- ஈஸ்ட் – 1/2 டீஸ்பூன்
- வெதுவெதுப்பான நீர் – 1/4 கப்
- சர்க்கரை – 1 டீஸ்பூன்
- உப்பு – 1/2 டீஸ்பூன்
- ஆலிவ் ஆயில் – 1 டேபிள் ஸ்பூன்
- பிட்சா சாஸ் – 1/4 கப்
- காய்கறிகள் 1/2 கப் (பேபி கார்ன், வெங்காயம் மற்றும் குடைமிளகாய் நீளமாக வெட்டியது)
- சீஸ் – 1/2 கப் (துருவியது)
- சில்லி ப்ளேக்ஸ் – தேவையான அளவு
- ஓரிகானோ – தேவையான அளவு
பிட்சா செய்வது எப்படி? (அ) பிட்சா செய்முறை ( How to make pizza at home in tamil):
பிட்சா செய்முறை (how to make pizza at home in tamil) முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தில் தண்ணீர், எண்ணெய், உப்பு மற்றும் ஈஸ்ட் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் மற்றொரு பாத்திரத்தில் மைதா மற்றும் கோதுமை மாவை ஒன்றாக கலந்து, எண்ணெயுடன் சேர்த்து பிசைந்து, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது மாவானது சற்று அதிகமாகி இருக்கும். பின் அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, 1/4 இன்ச் மொத்தமான சப்பாத்தி போன்று தேய்த்து, ஒரு வட்டமான டிபன் பாக்ஸ் கொண்டு துண்டுகளாக்கி, ஆங்காங்கே போர்க் கரண்டி கொண்டு ஓட்டைப் போட்டுக் கொள்ள வேண்டும்.
பின்பு பேக்கிங் ட்ரேயில் அலுமினியம் தாளை விரித்து, அதன் மேல் இந்த வட்டத் துண்டுகளை வைத்து, முதலில் அதன் மேல் பிட்சா சாஸ் ஊற்றி, பின் சிறிது சீஸ் பரப்பி, காய்கறிகளை வைத்து, இறுதியில் மீண்டும் சிறிது சீஸைத் தூவி, மைக்ரோ ஓவனில் 180 டிகிரியில் 20 நிமிடம் பேக் செய்து எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான மினி பிட்சா ரெடி! இதன் மேல் சிறிது சில்லி ப்ளேக்ஸ் மற்றும் ஓரிகானோ தூவி பரிமாறுங்கள்.
முட்டை பிட்சா செய்வது எப்படி (அ) பிட்சா செய்முறை ..!
பிட்சா செய்வது எப்படி (How to make pizza at home in tamil) – தேவையான பொருட்கள்:
- பிட்சா பேஸ் – 1.
- எண்ணெய் – 1 டீஸ்பூன்.
- வெங்காயம் – 1 (நறுக்கியது).
- தக்காளி – 1 (நறுக்கியது).
- பூண்டு – 2 பற்கள் (நறுக்கியது).
- முட்டை – 1 (வேக வைத்தது).
- தக்காளி கெட்சப் – 3 டேபிள் ஸ்பூன்.
- உப்பு – தேவையான அளவு.
- சில்லி ப்ளேக்ஸ் அல்லது மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்.
- உலர்ந்த கற்பூரவள்ளி இலைகள் – 1 டீஸ்பூன்.
- சீஸ் – தேவையான அளவு (துருவியது).
பிஸ்கட் லட்டு செய்வது எப்படி ..!
முட்டை பிட்சா செய்வது எப்படி (அ) பிட்சா செய்முறை (How to make pizza at home in tamil) ..!
பிட்சா செய்வது எப்படி முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.பின் அதில் தக்காளி கெட்சப் சேர்த்து கிளறி, உப்பு, மிளகாய் தூள், உலர்ந்த கற்பூரவள்ளி இலைகளைச் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பின்பு ஒரு மைக்ரோ ஓவனில் வைக்கும்படியான தட்டில், பிட்சா பேஸை வைத்து, அதன் மேல் வதக்கிய கலவையை பரப்பி வைத்து, முட்டைகளை நீளவாக்கில் நான்கு துண்டுகளாக்கி வைக்க வேண்டும்.
பிறகு அதன் மேல் சிறிது நறுக்கிய வெங்காயம், தக்காளியைத் தூவி விட வேண்டும்.
பின் துருவிய சீஸை தூவி, மேலே உலர்ந்த கற்பூரவள்ளி இலைகள் மற்றும் சில்லி ப்ளேக்ஸை தூவி மைக்ரோ ஓவனில் 1 நிமிடம் அல்லது தவா என்றால் மூடி வைத்து குறைவான தீயில் 2 நிமிடம் வேக வைத்து இறக்கி பரிமாறினால், முட்டை பிட்சா ரெடி!!!
வீட்டிலேயே பிட்சா செய்வது எப்படி (how to make pizza at home in tamil) என்று தெரிந்து கொண்டிர்களா வீட்டில் செய்து அசத்துங்கள் ..!
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுவையான வெஜ் நூடுல்ஸ் செய்முறை !!!
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.