பிஸ்கட் லட்டு செய்வது எப்படி ..!

பிஸ்கட் லட்டு செய்வது எப்படி

பிஸ்கட் லட்டு செய்வது எப்படி ..!

இன்ஸ்டேன்ட் ரெசிபி: பிஸ்கட் லட்டு செய்முறை மிகவும் எளிது மற்றும் உங்களுடைய உறவினர்கள் இதற்கு முன்னர் இதைப் போன்ற இனிப்புகளை கண்டிப்பாக ருசி பார்த்திருக்க மாட்டார்கள். மேலும் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பொரித்த உணவுகள் மிகவும் பிடிக்கும்.

வீட்டுலயே மிகச்சுவையான ஐஸ்கிரீம் செய்யலாம் அதுவும் கிரீம் இல்லாமல்

சரி வாங்க பிஸ்கட் லட்டு செய்வது எப்படி என்று இப்போது நாம் படித்தறிவோம்..!

பிஸ்கட் லட்டு செய்வது எப்படி – தேவையான பொருட்கள்:

  • மேரி பிஸ்கட் – 1 பாக்கெட்
  • கன்டென்ஸ்ட் மில்க் – அரைக் கப்
  • கோக்கோ பவுடர் – 4 தேக்கரண்டி
  • பால் – 2 தேக்கரண்டி
  • உலர் பழங்கள் – 2 டீஸ்பூன் (நறுக்கியது)

டிசைன் பண்ணுவதற்கு:

  • ரெயின்போ தெளிப்பு – 1 தேக்கரண்டி
  • சாக்லேட் – அரை கிண்ணம் (துறுவியது)
  • தேங்காய் பவுடர் – 4 தேக்கரண்டி

பிஸ்கட் லட்டு செய்முறை (அ) பிஸ்கட் லட்டு செய்வது எப்படி :-

இப்பொழுது மிக்ஸியை எடுத்துக்கொள்ளவும் அவற்றில் பிஸ்கட் போட்டு தூளாக அரைத்துக்கொள்ளவும்.

பின்பு ஒரு பவுலை எடுத்து கொண்டு அவற்றில் 2-3 கரண்டி கன்டென்ஸ்ட் பாலை ஊற்றவும், அதனுடன் கோக்கோ தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.

இப்பொழுது கலவையானது கெட்டியான பதத்தில் கிடைக்கும்.

இந்த கலவையுடன் பிஸ்கட் தூளை சேர்க்கவும்.

இதனுடன் உலர் பழங்களையும் சேர்க்கவும்.

உங்களது விருப்பத்திற்கு ஏற்ப இந்த கலவையுடன் மேலும் கன்டென்ஸ்ட் பாலும் மற்றும் கோக்கோ பவுடரையும் சேர்க்கலாம். இவ்வாறு சேர்ப்பதினால் லட்டுவிற்கு மேழும் அதிகமான வழவழப்பைத் தரும்.

இதன் பிறகு மீண்டும் ஒரு முறை கலவையை நன்றாக கலக்கவேண்டும்.

கலவையானது உலர்ந்த நிலையில் இருக்க வேண்டும்.

ஸ்பெஷலான முட்டை சாண்ட்விச் மற்றும் ப்ரெஷ்ஷான புதினா சட்னியும் ரெசிபி !!!

இப்பொழுது நீங்கள் லட்டு பிடிக்க தயாராக வேண்டியதுதான்.

இப்பொழுது நெய் எடுத்துக்கொண்டு உள்ளங்கையில் தடவிக்கொள்ளவும். பின்பு கலவையை சிறிய வடிவில் பிடிக்க வேண்டும்.

பிடித்து வைத்துள்ள லட்டுவை எடுத்து தட்டில் தனியாக வைக்கவும்.

பின்பு அந்த லட்டுவில் துறுவிய சாக்லேட், தேங்காய் பவுடர் மற்றும் வானவில் தெளிப்பு கொண்டு அலங்கரிக்கவும்.

பின்பு லட்டுவை பிரிட்ஜில் 10-12 நிமிடங்கள் வைத்து குளிரவைக்க வேண்டும்.

இப்பொழுது சுவையான பிஸ்கட் லட்டு தயார் இந்த ரெசிபியை அனைத்து விசேஷங்களுக்கும் செய்து மகிழலாம்.

பிஸ்கட் லட்டு செய்வது எப்படி என்று தெரிந்து கொண்டீர்களா வீட்டில் செய்து அசத்துங்கள்..!

ரொம்ப டேஸ்ட்டான கோதுமை ஸ்வீட்..! அப்பறம் குலாப் ஜாமுனை மறந்துடுவீங்க..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள் , ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.