ஸ்பெஷலான முட்டை சாண்ட்விச் மற்றும் ப்ரெஷ்ஷான புதினா சட்னியும் ரெசிபி !!!

முட்டை சாண்ட்விச்

முட்டை சாண்ட்விச் செய்முறை ..!

காலையில் வேலைக்கு செல்வோருக்கு எளிமையான ஒரு ரெசிபி வேண்டுமானால், முட்டை சாண்ட்விச் (egg sandwich recipes in tamil) செய்யுங்கள். இது நல்ல ஆரோக்கியமான மற்றும் எளிதில் செய்யக்கூடியவாறு இருக்கும் ஒரு காலை உணவு. மேலும் இது மதியம் சாப்பிடுவதற்கும் ஏற்றவாறு இருக்கும்.

இங்கு அந்த முட்டை சாண்ட்விச் செய்முறை (egg sandwich recipes in tamil) மற்றும் ப்ரெஷ்ஷான புதினா சட்னியும் எப்படி செய்ய வேண்டும் என்ற செய்முறை விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

சுவையான மதுரை கறி தோசை செய்வது எப்படி ..!

புதினா சட்னிக்கு தேவையான பொருட்கள்:

 1. புதினா இலைகள் – 2 கையளவு
 2. கொத்துமல்லி தழை – 1 கையளவு
 3. பச்சை மிளகாய் – 2
 4. பூண்டு – 2 பற்கள்
 5. இஞ்சி – ½ இஞ்ச் பீஸ்
 6. லெமன் ஜூஸ் – 1 டீ ஸ்பூன்
 7. சர்க்கரை – 1 டீ ஸ்பூன்
 8. உப்பு – சுவைக்கேற்ப
 9. தண்ணீர் – ½ கப்

முட்டை சாண்ட்விச் செய்ய (Egg sandwich recipes in tamil)…

 1. ரொட்டி துண்டுகள் – 3
 2. பாலாடைக்கட்டி (சீஸ்) துண்டுகள் – 2
 3. புதினா சட்னி – 1 டேபிள் ஸ்பூன்
 4. முட்டை – 4
 5. உப்பு – சுவைக்கேற்ப
 6. மிளகு – சுவைக்கேற்ப

முட்டை சாண்ட்விச் செய்முறை (Egg sandwich recipes in tamil):புதினா சட்னி

முதலில் முட்டை சாண்ட்விச் ஏற்ற புதினா சட்னி எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்..!

தந்தூரி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

புதினா சட்னி செய்முறை :

இப்போது மிக்சி ஜாரை எடுத்துக்கொள்ளவும்.

அவற்றில் புதினா சட்னிக்கு  கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்க்கவும்.

பின்பு அவற்றை மிக்சியில் போட்டு மைபோன்று அரைத்து கொள்ளவும்.

ஒருவேளை, சட்னி மீதமிருந்தால், அதனை சேமித்து மற்ற சிற்றுண்டிகளுக்கு பரிமாறி மகிழலாம்.

அந்த சட்னியை இரண்டு நாட்களுக்கு கூட நாம் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

முட்டை சாண்ட்விச்சும் ப்ரெஷ்ஷான புதினா சட்னிமுட்டை சாண்ட்விச் செய்முறை (Egg sandwich recipes in tamil):

ஒரு பௌலை எடுத்துகொண்டு, அதில் முட்டையை உடைத்து ஊற்றிகொள்ளுங்கள். அத்துடன் உப்பு மற்றும் மிளகை சேர்த்து கொள்ளுங்கள். அனைத்தையும் நன்றாக கலக்கி பஞ்சு போன்ற மென்மையானதாக முட்டை அடித்து வைத்துக்கொள்ளவும்.

இப்பொழுது பொரிப்பதற்கான கடாயை எடுத்துகொள்ளுங்கள். அதன்பிறகு, முழு கரண்டியை கொண்டு அந்த முட்டை கலவையை எடுத்து கடாயில் ஊற்ற வேண்டும்.

கடாயை சாய்த்து, முட்டை எல்லா இடங்களிலும்… கடாயில் பரவுமாறு செய்ய வேண்டும்.

முட்டையானது அடிப்பாகத்தில் வேகவேண்டியது அவசியம். அவ்வாறு வெந்த பின்பு , ஆம்லெட்டின் மேலே ரொட்டி துண்டினை வைக்க வேண்டும்.

அந்த ஆம்லெட்டின் பக்கங்களை மடித்து, அந்த ரொட்டி துண்டினை கொண்டு எல்லா பக்கங்களிலும் மூட வேண்டும்.

மேலும் இரண்டு நிமிடங்களுக்கு வெந்ததும், அந்த ரொட்டியை ஒரு தட்டில் எடுத்து வைக்க வேண்டும்

பாலாடைக்கட்டி துண்டுகளை ரொட்டிமீது வைக்கவேண்டும் பின்பு மடிப்புகள் கொண்ட பக்கத்தில் அவற்றை வேகவிடவேண்டும்.

அதன் பிறகு மற்ற இரண்டு பிரட் துண்டுகளை எடுத்துக்கொள்ளவும்.

பின்பு அரைத்து வைத்துள்ள கிரீன் சட்னியை, ஸ்பூனால் ரொட்டி முழுவதும் தடவ வேண்டும்.

இந்த ரொட்டி துண்டை முட்டை ஆம்லெட் உள்ள சாண்ட்விச்சுக்கு பயன்படுத்திகொள்ளலாம்.

பின்பு அவற்றை மூன்று துண்டுகளாக அதாவது முக்கோண வடிவில் வெட்டி கொள்ளவேண்டும்.

ஸ்பெஷலான முட்டை சாண்ட்விச் (egg sandwich recipes in tamil) மற்றும் ப்ரெஷ்ஷான புதினா சட்னியும் தயாராகிவிட்டது இவற்றை கெட்ச் அப்புடனோ அல்லது புதினா சட்னியுடனோ தொட்டு சாப்பிடலாம்.

பெங்களூர் ஸ்பெசல் சிக்கன் தம் பிரியாணி செய்வது எப்படி ..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.