வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கேரளா ஸ்டைல் அவியல் ரெசிபி செய்வது எப்படி..! Kerala Aviyal Recipe In Tamil..!

Updated On: August 12, 2023 8:36 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

சுவையான அவியல் செய்வது எப்படி..! How To Make Avial In Kerala Style..!

நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம் சூப்பரான ஒரு டிஷ் பார்க்க போகிறோம். வீட்டில் இருந்தே சுவையான கேரளா ஸ்டைலில் அவியல்(Avial Recipe In Tamil) எப்படி செய்யலாம்னு பார்க்கலாம். சிலருக்கு இந்த ரெசிபி செய்ய தெரியாமல் கூட இருக்கலாம். அந்த கவலையை போக்க இதோ உங்களுக்காகவே ஈஸியான முறையில் அவியல் செய்முறை விளக்கத்தை கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள். சரி வாங்க இப்போ இந்த ரெசிபியை எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்..!

newபூண்டு ஃப்ரைட் ரைஸ் (Garlic fried rice ) & காளான் கிரேவி செய்முறை..!

அவியல் செய்ய – தேவையான பொருட்கள்:

  1. கேரட் – 1/4 கப் (நீட்ட வடிவில் நறுக்கியது)
  2. பீன்ஸ் – 10 நறுக்கியது (நீட்ட வடிவில் நறுக்கியது)
  3. முருங்கைக்காய் – 1 (நீட்ட வடிவில் நறுக்கியது)
  4. அவரைக்காய் – 10 நறுக்கியது 
  5. கத்தரிக்காய் – 3 நறுக்கியது 
  6. சேனை கிழங்கு – 1/4 கப் 
  7. உருளை கிழங்கு – 1 (தோல் சீவி நறுக்கியது)
  8. தேங்காய் துருவல் – 1/4 கப் 
  9. தயிர் – 1/4 கப் 
  10. சீரகம் – 1 டீஸ்பூன் 
  11. பச்சை மிளகாய் – 4 அல்லது 5
  12. உளுந்து – 1 டீஸ்பூன் 
  13. மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் 
  14. கடுகு – 1/2 டீஸ்பூன் 
  15. கருவேப்பில்லை – சிறிதளவு
  16. தண்ணீர் – 1 டம்ளர் 
  17. உப்பு – தேவையான அளவு 
  18. தேங்காய் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்  

அவியல் செய்முறை விளக்கம் 1:

முதலில் குக்கரில் நறுக்கிய கேரட்டை சேர்க்கவும். அதன் பிறகு நறுக்கி வைத்த பீன்ஸை சேர்த்து கொள்ளவும். அதன் பிறகு நறுக்கிய அனைத்தையும் முருங்கைக்காய், அவரைக்காய், கத்தரிக்காய், சேனை கிழங்கு, உருளை கிழங்கு, எல்லாவற்றையும் சேர்த்து விட்டு 1 டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும்.

அவியல் ரெசிபி செய்வது எப்படி செய்முறை விளக்கம் 2:

தண்ணீர் சேர்த்த பிறகு உப்பு தேவையான அளவிற்கு சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனுடன் மஞ்சள் தூள் சிறிதளவு சேர்க்கவும். மஞ்சள் தூளை சேர்த்த பின் நன்றாக கலந்து விட வேண்டும். கலந்த பிறகு குக்கரை மூடி 1 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.

கேரளா ஸ்டைல் அவியல் ரெசிபி செய்முறை விளக்கம் 3:

இப்போது மசாலா செய்ய மிக்ஸியில் தேங்காய் துருவலை எடுத்து கொள்ளவும். அதனுடன் சீரகம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து மிதமான பதத்திற்கு அரைத்து வைத்து கொள்ள வேண்டும். குக்கரில் காய்கறி வெந்த பிறகு மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள தேங்காயை இதில் ஊற்றிக்கொள்ளவும்.

newகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுவையான வெஜ் நூடுல்ஸ் செய்முறை !!!

சுவையான அவியல் செய்வது எப்படி செய்முறை விளக்கம் 4:

அரைத்த தேங்காய் துருவல் சேர்த்த பிறகு தயிரை சேர்க்கவும். இப்போது தயிர் சேர்த்த பிறகு பொறுமையாக கிளறிவிட வேண்டும். அடுத்து 1/2 டீஸ்பூன் உப்புவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அடுத்ததாக 5 நிமிடம் இதனை கொதிக்க விட வேண்டும்.

ஈஸியான முறையில் அவியல் செய்முறை விளக்கம் 5:

நன்றாக கொதித்த பின் அடுப்பை நிறுத்தி கொள்ளலாம். இப்போது தாளிக்கும் கடாயில் 3 டேபிள் ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெயை எடுத்து கொள்ளவும். எண்ணெய் காய்ந்த பின் கடுகு சிறிதளவு சேர்த்துக்கொள்ளவும். கடுகு நன்றாக பொரிந்த பிறகு 1 டீஸ்பூன் உளுந்து சேர்த்து கொள்ளவும்.

கேரளா அவியல் செய்வது எப்படி செய்முறை விளக்கம் 6:

உளுந்து நன்றாக பழுப்பு நிறத்தில் வரவேண்டும். அடுத்ததாக சிறிதளவு கருவேப்பில்லை சேர்த்து தாளித்து கொள்ளவும். இப்போது தாளித்ததை குக்கரில் இருக்கும் அவியலில் சேர்க்கவும். சேர்த்த பிறகு கிளற வேண்டும். அவ்ளோதாங்க இந்த சுவையான கேரளா ஸ்டைல் அவியல் ரெசிபி ரெடி. இந்த ரெசிபியை எல்லாரும் உங்க வீட்டில மறக்காம ட்ரை பண்ணி பாருங்க.

நன்றி வணக்கம்..!

newகுழந்தைகளுக்கு பிடித்த மால்புவா செய்வது எப்படி? Malpua recipe in tamil..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement

Santhiya Annadurai

வணக்கம் என் பேர் சந்தியா, எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும், Pothunalam.com இல் எனக்கு பிடித்த சமையல் குறிப்பு, தமிழ் சார்ந்த தகவல், தொழில் சார்ந்த தகவல்கள், ஆரோக்கியம் மற்றும் அழகு குறிப்பு போன்ற செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

paruppu sadam in cooker tamil

பக்கத்து தெரு வரைக்கும் மணக்கும் ஐயர் வீட்டு பருப்பு சாதம் செய்வது எப்படி.?

Food To Boost Child Memory in Tamil

குழந்தைகளுக்கு ஞாபக மறதி நீங்கி ஞாபகசக்தி அதிகரிக்க இதை மட்டும் செய்து கொடுங்கள்..!

அடிக்கிற வெயிலுக்கு வீட்டிலேயே கேரட் ஐஸ் கிரீம் இந்த மாதிரி செஞ்சி சாப்பிட்டு பாருங்க..! டேஸ்ட் வேற லெவல இருக்கும்..!

mutton murtabak recipe in tamil

வாட்டர் பாட்டில் இருந்தால் ருசியான ஜாலர் முர்தபா செய்து பாருங்கள்

Mutton Fry Recipe  

பக்ரீத் ஸ்பெஷல் செட்டிநாடு மட்டன் பொரிச்ச கறி

Homemade Ice Cream Recipe in Tamil

இந்த 2 பொருட்கள் இருந்தால் போதும் வீட்டிலே 4 வகையான ஐஸ்கிரீம் செய்யலாம்..!

பஞ்சாபி லஸ்ஸி செய்வது எப்படி | Sweet Lassi Recipe in Tamil

முருகருக்கு பிடித்த திருப்பாகம் செய்வது எப்படி.?

இதை சாப்பிட்ட ஒரே வாரத்தில் உடலில் உள்ள கொழுப்பு சரசரவென்று குறையும்.!