கோதுமை மாவில் போண்டா செய்வது எப்படி..! Wheat Bonda In Tamil..!
Wheat Flour Bonda Recipe In Tamil: பொதுநலம்.காம் பதிவில் வீட்டில் இருக்கும் கோதுமை மாவை வைத்து சூப்பராக போண்டா எப்படி செய்யலாம்னு பார்க்கலாம். பெரும்பாலும் கடலை மாவில் மட்டும்தான் போண்டா செய்யலாம் என்று பலரும் நினைத்து இருப்பார்கள். ஆனால் கோதுமை மாவிலும் சூப்பராக போண்டா செய்யலாம் என்பது சிலருக்கு தெரியாமல் இருக்கும். சரி வாங்க இப்போது கோதுமை மாவில் அனைவருக்கும் பிடித்த வகையில் இருக்கும் சுவையான கோதுமை மாவு போண்டா எப்படி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க..!
![]() |
கோதுமை மாவு போண்டா செய்ய – தேவையான பொருட்கள்:
- கோதுமை மாவு – 1 கப்
- அரிசி மாவு – 1/2 கப்
- உப்பு – தேவையான அளவு
- தயிர் – 1 கப்
- பெரிய வெங்காயம் – (பொடியாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
- கருவேப்பிலை – சிறிதளவு
- கொத்தமல்லி – சிறிதளவு
- தண்ணீர் – தேவையான அளவு
கோதுமை மாவில் சூப்பரான கோதுமை போண்டா செய்வது எப்படி செய்முறை விளக்கம் 1:
ஒரு சுத்தமான பவுலில் கோதுமை மாவு 1 கப் அளவிற்கு எடுத்துக்கொள்ளவும். கோதுமை மாவுடன் 1/2 கப் அரிசி மாவு சிறிதளவு உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கோதுமை மாவில் போண்டா செய்வது எப்படி செய்முறை விளக்கம் 2:
அரிசி மாவு, உப்பு சேர்த்த பிறகு 1 கப் அளவிற்கு தயிர் எடுத்து சேர்க்கவும். தயிருடன் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை கையால் நன்றாக உதிர்த்து விட்டு சேர்க்கவும். அடுத்து நறுக்கிய பச்சை மிளகாயை சேர்க்கவும்.
![]() |
கோதுமை மாவு போண்டா செய்முறை விளக்கம் 3:
பச்சை மிளகாய் சேர்த்த பிறகு கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சிறிதளவு சேர்த்துக்கொள்ள வேண்டும். இப்போது அனைத்தையும் மிக்ஸ் செய்துகொள்ள வேண்டும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிதமான அளவிற்கு வரும் வரை மாவை ரெடி செய்துக்கொள்ளவும். ரெடி செய்த மாவை 1 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
கோதுமை மாவில் போண்டா எப்படி செய்வது செய்முறை விளக்கம் 4:
கடாயில் எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு 1 மணிநேரம் ஊறவைத்த மாவினை எடுத்துக்கொள்ளவும். இப்போது எண்ணெயில் மாவினை சிறிய சிறிய உருண்டையாக போடவும். எண்ணெயில் போட்டதும் 20 நிமிடம் கழித்துபோண்டாவை திருப்பிவிட வேண்டும்.
நன்றாக வெந்தபிறகு போண்டாவை அடுப்பில் இருந்து எடுத்துவிடலாம். அவ்ளோதாங்க இந்த கோதுமை மாவு போண்டா ரெடி. வீட்ல கண்டிப்பா எல்லாரும் ட்ரை பண்ணி பாருங்க..!
![]() |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal |