ரோட்டுக்கடை சிக்கன் ரைஸ் செய்வது எப்படி? Chicken fried rice..!

chicken fried rice

ரோட்டுக்கடை சிக்கன் ரைஸ் செய்வது எப்படி? Chicken fried rice..!

சிக்கன் ரைஸ் செய்வது எப்படி: அசைவ பிரியர்களுக்கு சிக்கன் மிகவும் பிடித்த ஒரு உணவு, சிக்கனில் பல வகையான உணவுகளை செய்யலாம் மிகவும் சுவையாக இருக்கும். உங்கள் சுவையை தூண்டும் சிக்கன் ப்ரைடு ரைஸ் சமையல்… அதாவது இந்த பதிவில் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான ரோட்டுக்கடை சிக்கன் ப்ரைடு ரைஸ் (chicken fried rice) ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

தந்தூரி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி..?

சிக்கன் ரைஸ் செய்ய தேவையான பொருட்கள்:

 1. பொடிதாக நறுக்கிய வெங்காயம் – ஒன்று
 2. பொடிதாக நறுக்கிய பச்சைமிளகாய் – மூன்று
 3. இஞ்சி பூண்டு விழுது – கால் தேக்கரண்டி
 4. கருவேப்பிலை சிறிதளவு
 5. எண்ணெய் – தேவையான அளவு
 6. முட்டை – ஒன்று
 7. சிக்கன் 65 – தேவையான அளவு
 8. உப்பு – தேவையான அளவு
 9. மிளகு தூள் – ஒரு ஸ்பூன்
 10. டொமேடோ சாஸ் – ஒரு ஸ்பூன்
 11. சோயா சாஸ் – 1/2 ஸ்பூன்
 12. வடித்த சாதம் – ஒரு கப்
 13. கொத்தமல்லி இலை – சிறிதளவு
செட்டிநாடு மீன் வறுவல் செய்முறை (Chettinad Fish Fry In Tamil)..!

சிக்கன் ரைஸ் செய்வது எப்படி?

chicken fried rice

சிக்கன் ரைஸ் செய்யும் முறை விளக்கம் – How to make chicken fried rice step: 1

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.

எண்ணெய் நன்கு சூடேறியதும் பொடிதாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.

சிக்கன் ரைஸ் செய்யும் முறை விளக்கம் – How to make chicken fried rice step: 2

வெங்காயம் நன்கு வதங்கியதும், கருவேப்பிலையை சேர்த்து வதக்க வேண்டும்.

பின் கால் தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுதினை சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை நன்கு வதக்குங்கள்.

சிக்கன் ரைஸ் செய்யும் முறை விளக்கம் – How to make chicken fried rice step: 3

பின் அதனுடன் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அடுப்பை மிதமான சூட்டில் வைத்து 5 நிமிடங்கள் நன்றாக கிளறிவிட வேண்டும்.

அதன் பிறகு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய சிக்கன் 65-ஐ சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

சிக்கன் ரைஸ் செய்யும் முறை விளக்கம் – How to make chicken fried rice step: 4

பின் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிடுங்கள், பின் தொடர்ந்து ஒரு ஸ்பூன் டொமேடோ சாஸ் மற்றும் 1/2 ஸ்பூன் சோயா சாய் ஆகியவற்றை சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக கிளறிவிடுங்கள்.

பிறகு வடித்து வைத்துள்ள ஒரு கப் சாதத்தினை சேர்த்து கிளறுங்கள், இதனுடன் ஒரு ஸ்பூன் மிளகு தூள் சேர்த்து கிளற வேண்டும்.

சிக்கன் ரைஸ் செய்யும் முறை விளக்கம் – How to make chicken fried rice step: 5

இறுதியாக இதனுடன் பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி இலையினை தூவி இறக்கினால் சுவையான ரோட்டுக்கடை சிக்கன் ரைஸ் தயார் அனைவருக்கும் அன்புடன் பரிமாறுங்கள் நன்றி வணக்கம்.

ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் 65 ரெசிபி இதோ..!

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>சமையல் குறிப்புகள்