ஹோட்டல் ஸ்டைல் எக் ரைஸ் செய்வது எப்படி? Recipe Of Egg Fried Rice..!

Egg Rice In Tamil At Home

முட்டை சாதம் செய்வது எப்படி..! How To Make Egg Fried Recipe..!

நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.com பதிவில் அனைவருக்கும் பிடித்தமான ஹோட்டல் ஸ்டைல் எக் ரைஸ்(Muttai Fried Rice) வீட்டில் இருந்தபடியே எப்படி செய்யலாம்னு இன்று நாம் பார்ப்போம். முட்டை சாதம் என்றாலே அனைவருக்கும் பிடித்த ஒன்று. அதை சுவையோடு எப்படி செய்யலாம் என்ற முழு விவரங்களோடு கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை படித்து தெரிந்து கொள்ளலாம் நண்பர்களே வாங்க..!

newஉருளைக்கிழங்கு முட்டை ரெசிபி..! potato omelette receipes..! Evening Snacks..!

எக் ரைஸ் பண்ணுவது எப்படி / How To Make Egg Fried Recipe:

தேவையான பொருட்கள்:

 1. முட்டை – 5
 2. உப்பு – சிறிதளவு 
 3. மஞ்சள் தூள் – சிறிதளவு 
 4. தண்ணீர் – தேவையான அளவு 
 5. கான் ஃப்ளவர் மாவு – 2 ஸ்பூன் 
 6. அரிசி மாவு – 1 ஸ்பூன் 
 7. மிளகாய் தூள் – சிறிதளவு 
 8. பாஸ்மதி அரிசி – 2 கப் 
 9. கர மசாலா – சிறிதளவு 
 10. பெரிய வெங்காயம் – 1 (தட்டை வடிவில் நறுக்கியது)
 11. பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
 12. பூண்டு – 10 (பொடியாக நறுக்கியது)
 13. இஞ்சி – சிறிதளவு சீவியது 
 14. முட்டைகோஸ் – 50 கிராம் (பொடியாக நறுக்கியது)
 15. கேரட் – 1 (பொடியாக நறுக்கியது)
 16. பெரிய குடை மிளகாய் – 1 (தட்டை வடிவில் நறுக்கியது)
 17. பெப்பர் தூள் – சிறிதளவு 
 18. கொத்தமல்லி – தேவையான அளவு 

Step 1:

முதலில் ஒரு பவுலில் 5 முட்டையை உடைத்து எடுத்துக்கொள்ளவும். இதிலேயே சிறிதளவு உப்புவை சேர்த்துக்கொள்ள வேண்டும். மஞ்சள் தூள் கொஞ்சமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இவற்றை எல்லாம் நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். நன்றாக மிக்ஸ் செய்த பிறகு தனியாக ஒரு பவுலில் சிறிதளவு எண்ணெயை தடவி கொள்ளவும்.

எண்ணெய் தடவிய பவுலில் கலந்த முட்டையை சேர்க்கவேண்டும். அடுத்து இட்லி பாத்திரம் அல்லது தனியாக பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் வைத்து அடியில் பிளேட் வைத்துக்கொள்ளவும்.

Step 2:

அந்த தட்டின் மேல் எண்ணெய் தடவிய பாத்திரத்தில் கலந்த முட்டையை இதன் மேல் வைக்கவும். அதை மூடி 10 நிமிடம் வேகவைக்க வேண்டும். நன்றாக வெந்த பிறகு ஆறவைக்க வேண்டும்.

ஆறிய பிறகு தனியாக எடுத்து வைத்து உங்களுக்கு எந்த வடிவில் தேவையோ அதுபோன்று கட் செய்து கொள்ளலாம். எல்லாவற்றையும் பிடித்த வடிவில் கட் செய்தபிறகு தனியாக ஒரு பவுலில் கான் ஃப்ளவர் மாவு 2 ஸ்பூன், அரிசி மாவு 1 ஸ்பூன், மிளகாய் தூள் சிறிதளவு, கர மசாலா சிறிதளவு, உப்பு தேவையான அளவிற்கு சேர்த்து அதன்பிறகு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து திக்காக கலந்துகொள்ளவும்.

இந்த கலவையில் நறுக்கிய முட்டையை இதில் சேர்த்து மிக்ஸ் செய்துகொள்ளவும். அடுத்து தனியாக ஒரு கடாயில் நறுக்கிய முட்டை கலவையை பொரித்து எடுக்க தேவையான அளவிற்கு எண்ணெய் ஹீட் செய்துகொள்ளவும்.

Step 3:

எண்ணெயில் முட்டையை ஒவ்வொன்றாக போட்டு சிவந்து வந்தவுடன் எடுக்க வேண்டும். அடுத்ததாக தனியாக ஒரு கடாயை ஹீட் செய்து 3 ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்த்துக்கொள்ளவும்.

பெரிய வெங்காயம் 1 தட்டை வடிவில் நறுக்கியதை எண்ணெயில் சேர்த்து கொள்ளவும். அடுத்து பச்சை மிளகாய் 2 நறுக்கியதை சேர்த்துக்கொள்ளவும். இதை நன்றாக வதக்கி கொள்ளவும்.

இதனுடன் பூண்டு 10 பொடியாக நறுக்கியதை சேர்த்து கொள்ளவும். இதனுடன் இஞ்சி சிறிதளவு சீவியதை சேர்க்கவேண்டும்.

new15 நிமிடத்தில் மொறு மொறு முட்டை பிங்கர்ஸ்..! Egg recipes in tamil..!

Step 4:

அடுத்ததாக முட்டைகோஸ் 50 கிராம் பொடியாக நறுக்கியதை சேர்த்துக்கொள்ளவும். இதை எல்லாம் வதக்கி கொள்ளவும். நன்றாக வதங்கிய பிறகு கேரட் 1 பொடியாக நறுக்கியதை சேர்த்துக்கொள்ளவும்.

அடுத்து பெரிய குடை மிளகாய் 1 தட்டை வடிவில் நறுக்கியதை இதனுடன் சேர்த்து வதக்கிக்கொள்ளவும். இப்போது அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொள்ளவும்.

அடுத்து 2 முட்டையை உடைத்து இதில் சேர்க்கவும். முட்டை சேர்த்தபிறகு பெப்பர் தூள் சிறிதளவு சேர்த்து முட்டை வெந்தபிறகு கரண்டியால் முட்டையை கிளறிவிட வேண்டும்.

Step 5:

இதை அனைத்தையும் நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். இதனுடன் மிளகாய் தூள் 1/2 ஸ்பூன், கரமசாலா 1/2 ஸ்பூன், பெப்பர் தூள் 1/2 ஸ்பூன், உப்பு தேவையான அளவிற்கு சேர்த்து மிக்ஸ் செய்துகொள்ளவும்.

2 கப் அளவிற்கு பாஸ்மதி அரிசி வடித்துவைத்து கொள்ளவும். சாதம் வடிக்கும் போதே தண்ணீரில் 1 ஸ்பூன் எண்ணெய், உப்பு சேர்த்துக் கொள்ளவேண்டும்.

Step 6:

அதன்பிறகு வடித்த சாதத்தை கடாயில் இருக்கும் மசாலாவில் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்துகொள்ளவும். அடுத்து சாதத்தில் முதலில் கட் செய்து பொரித்த முட்டையை சாதத்தில் சேர்க்கவும்.

இதையும் நன்றாக கலந்து கொள்ளவும். பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லியை சாதம் மேல் தூவி கிளறவேண்டும்.

அவ்ளோதாங்க சுவையான எக் ரைஸ் ரெடி. இதை கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க. எல்லாருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இந்த டிப்ஸை மிஸ் பண்ணிடாதீங்க ஃப்ரண்ட்ஸ்.

நன்றி வணக்கம்..!

newசுவையான முட்டை மஞ்சூரியன் எப்படி செய்வது? Egg Manchurian Recipe..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal