ஐந்தே நிமிடத்தில் தோசை மாவு இல்லாமல் மொறுமொறு தோசை..! Instant Dosa Recipe In Tamil..!

instant dosa in tamil

 தோசை மாவில்லாமல் உடனடியாக மொறுமொறு தோசை எப்படி செய்வது..! Instant Dosa Recipe..!

Instant Dosa In Tamil: வணக்கம் நண்பர்களே..! இன்று பொதுநலம்.காம் பதிவில் வீட்டில் எப்போதும் அரிசி மாவினால் செய்த தோசையினை தான் பெரும்பாலும் நாம் சாப்பிட்டுக்கொண்டு வருகிறோம். ஒரே வகையான மாவில் செய்த தோசையை சாப்பிடுவதும் சிலருக்கு அலுத்து போய்விடும். தோசை மாவு பயன்படுத்தாமல் மிக சுலபமான முறையில் வீட்டில் இன்ஸ்டன்ட் தோசை எப்படி செய்யலாம்னு இந்த பதிவில் பார்க்கலாம். இந்த இன்ஸ்டன்ட் தோசையானது வீட்டில் இருக்கக்கூடிய அனைவருக்கும் மிகவும் பிடித்த வகையில் இருக்கும். சரி வாங்க நண்பர்களே தோசை மாவில்லாமல் உடனடியாக சூப்பரான தோசை செய்முறையின் விளக்கங்களை விரிவாக படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!

newHotel dosa recipe in tamil ..!ஹோட்டல் தோசை போல மொறு மொறுன்னு வேண்டுமா அப்ப இதை செய்ங்க

மொறுமொறுனு இன்ஸ்டன்ட் தோசை – தேவையான பொருட்கள்:

  1. புழுங்கல் அரிசி – 1 டம்ளர் 
  2. உளுந்து – 1 கைப்பிடி அளவு 
  3. சீரகம் – 1/4 ஸ்பூன் 
  4. வரமிளகாய் – 3
  5. தக்காளி – 2(நறுக்கியது)
  6. இஞ்சி விழுது – 1 பீஸ் 
  7. தண்ணீர் – தேவையான அளவு 
  8. உப்பு – சிறிதளவு 

ஸ்டேப் 1:

முதலில் பாத்திரத்தில் 1 டம்ளர் அளவிற்கு புழுங்கல் அரிசியை எடுத்துக்கொள்ளவும். இதனுடன் 1 கைப்பிடி அளவிற்கு உளுந்தை சேர்க்கவும்.

ஸ்டேப் 2:

இப்போது தண்ணீரால் நன்றாக கழுவிய பிறகு 30 நிமிடத்திற்கு ஊறவைக்க வேண்டும். நன்றாக ஊறிய பிறகு மிக்ஸி ஜாரில் ஊற வைத்த அரிசி, உளுந்தினை ஜாரில் சேர்க்கவும். அடுத்து சிறிதளவு இஞ்சி விழுதினை சேர்க்கவும்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

ஸ்டேப் 3:

அந்த மிக்ஸி ஜாரில் 1/4 ஸ்பூன் அளவிற்கு சீரகத்தை சேர்த்துக்கொள்ள வேண்டும். சீரகத்துடன் 3 வர மிளகாயை சேர்த்துக்கொள்ளவும். அடுத்ததாக 2 தக்காளி நறுக்கி வைத்துள்ளதை சேர்க்கவும்.

newபன்னீர் மசாலா தோசை செய்முறை விளக்கத்துடன்..! Dosa variety recipe in tamil..!

ஸ்டேப் 4:

இப்போது எல்லாவற்றையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். மாவினை மிதமான அளவிற்கு அரைக்க வேண்டும். அப்போதுதான் தோசை மொறுமொறு தன்மைக்கு வரும். அரைத்ததை தனியாக ஒரு பாத்திரத்தில் ஊற்றிக்கொள்ளவும். மிக்ஸி ஜாரினை கழுவி அதன் தண்ணீரை மாவுடன் சேர்க்கவும்.

ஸ்டேப் 5:

தோசை பக்குவத்திற்கு நீரினை சேர்க்கவேண்டும். இப்போது தேவையான அளவிற்கு உப்பினை சேர்க்கவேண்டும். உப்பு சேர்த்தபிறகு நன்றாக கலந்துக்கொள்ளவும். அவ்ளோதாங்க இன்ஸ்டன்ட் தோசை மாவு ரெடி. இவற்றில் தேவைப்பட்டால் தோசை மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய் கூட சேர்த்துக்கொள்ளலாம்.

ஸ்டேப் 6:

அடுத்ததாக கடாயில் தோசை கல் ஹுட் ஆனதும் மாவினை ஊற்றவும். தோசை கல்லில் ஊற்றிய பிறகு விருப்பத்திற்கு ஏற்றவாறு நெய், அல்லது எண்ணெயினை சேர்த்துக்கொள்ளவும். வெந்த பிறகு திருப்பி எடுத்துக்கொள்ளவும். அவ்ளோதான் நண்பர்களே இந்த சுவையான  இன்ஸ்டன்ட் தோசை ரெடி. கண்டிப்பா எல்லாரும் ட்ரை பண்ணி பாருங்க..!

newசுவையான மதுரை கறி தோசை செய்வது எப்படி ..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal