இனி வீட்டிலேயே செய்யலாம் சோன் பப்டி..!

Soan Papdi Recipe

சோன் பப்டி செய்வது எப்படி | Soan Papdi Recipe in Tamil

Soan Papdi Recipe / சோன் பப்டி: வணக்கம் நண்பர்களே..! இனிப்பு வகையில் அனைவருக்கும் பிடித்த சோன் பப்டி வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். சோன் பப்டி என்றாலே அனைவரும் கடைகளிலும், தெருவில் விற்றுக்கொண்டு வருவதை தான் பெரும்பாலும் வாங்கி சாப்பிடுவோம். சோன் பப்டி மிகவும் இனிப்பு சுவை கொண்ட பலகார வகையாகும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதனை பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள். சரி இப்போது டேஸ்டான சோன் பப்டி எப்படி செய்யலாம் என்று தெரிந்துக்கொள்ளுவோம்..!

குழந்தைக்கான இனிப்பு சமோசா செய்முறை

சோன் பப்டி செய்ய – தேவையான பொருள்:

Soan Papdi Recipe

  1. கடலை மாவு – 1 1/2 கப்
  2. மைதா – 1 1/2 கப்
  3. பால் – 2 டேபிள் ஸ்பூன்
  4. சர்க்கரை – 2 1/2 கப்
  5. ஏலக்காய் பவுடர் – 1 டீஸ்பூன்
  6. தண்ணீர் – 1 1/2 கப்
  7. பாலிதீன் ஷீட் – 1
  8. நெய் – 250 கிராம்

சோன் பப்டி – செய்முறை விளக்கம்:

ஸ்டேப் 1: முதலில் ஒரு சிறிய பவுலில்  கடலை மாவு மற்றும் மைதா மாவு இரண்டையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

ஸ்டேப் 2: அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு நெய் ஊற்றி நன்றாக சூடாக்கிக்கொள்ளவும். சூடானதும் கலந்து வைத்துள்ள அந்த மாவினை சேர்த்து வதக்க வேண்டும். மாவு லேசாக பொன்னிறத்தில் வரும் போது அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்கவும்.

ஸ்டேப் 3: அதே நேரத்தில் ஒரு கடாயில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, நீரில் சர்க்கரை மற்றும் பாலை சேர்த்து நன்றாக கெட்டியான நிலைக்கு வரும் வரை கொதிக்க வைக்கவும். கொதிக்க வைத்த பாகானது நன்றாக கொதித்த பிறகு அவற்றையும் ஆற வைக்கவும்.

ஸ்டேப் 4: அடுத்ததாக ஒரு தட்டை தனியாக எடுத்துக் கொள்ளவும். தனியாக எடுத்து வைத்துள்ள தட்டில் நெய் தடவை வைக்கவும்.

ஸ்டேப் 5: அதன் பிறகு ஆற வைத்துள்ள மாவினை, சர்க்கரை பாகுவுடன் சேர்த்து கரண்டியால் கிளறி விட வேண்டும். அப்படி கிளறும் போது மாவானது நீட்டமாக சுருண்டு வரும். குறைந்தது 1 இஞ்ச் நீளத்திற்கு வரும் அளவிற்கு கிளறிவிட வேண்டும்.

அரிசி மாவில் சுவையான ஸ்வீட் செய்வது எப்படி?

 

ஸ்டேப் 6: அடுத்து அவற்றை நெய் தடவி வைத்துள்ள தட்டில் ஊற்றி, தட்டின் மேல் ஏலக்காய் பவுடரைத் நன்றாக தூவி ஆற வைக்கவும்.

ஸ்டேப் 7: நன்றாக ஆறிய பிறகு சிறிய சிறிய துண்டாக சதுரம் வடிவத்தில் கட் செய்து கொள்ளவும். அதன் பிறகு கட் செய்த சோன் பப்டியை பாலிதீன் ஷீட்டில் வைத்து, அதன் மேல் பாதாம் மற்றும் பிஸ்தாவால் அலங்கரிக்கவும். செம டேஸ்டான சோன் பப்டி ரெடி.

துபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Samayal Kurippugal