இந்திய ஐந்தாண்டு திட்டம் | Inthandu Thittam in Tamil

Inthandu Thittam in Tamil

ஐந்தாண்டு திட்டம் | Five Year Plan in India in Tamil

இந்திய அரசின் ஐந்தாண்டு திட்டங்கள் என்பது 1947-2017 வரையில் இந்திய பொருளாதாரமானது திட்டமிடலை அடிப்படையாக கொண்டே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இந்திய அரசானது 12 ஐந்தாண்டு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. பனிரெண்டாம் ஐந்தாண்டுத் திட்டமே (2012-2017) இறுதியான ஐந்தாண்டுத் திட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி 2014-ல் அமைந்தவுடன் இந்திய ஐந்தாண்டு திட்டங்கள் – திட்ட கமிசன் கலைத்து விட்டு புதிய அமைப்பாக நிதி ஆயோக் உருவாக்கப்பட்டது. இந்த பதிவில் இந்திய அரசு செயல்படுத்தி வந்த ஐந்தாண்டு திட்டத்தை பற்றி ஒரு கண்ணோட்டம் பார்க்கலாம் வாங்க..

மத்திய அரசு வழங்கும் தெருவோர வியாபாரிக்கான கடனுதவி திட்டம்

முதல் ஐந்தாண்டு திட்டம் | First Five Year Plan in India in Tamil (1951-1956):

 1. முதல் ஐந்தாண்டு திட்டமானது ஹாரேட் டாமர் (Harrod-Domar) மாதிரியை அடிப்படையாக் கொண்டது.
 2. இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம் நாட்டின் வேளாண்மையை முன்னேற்றம் செய்வதாகும்.
 3. இத்திட்டம் 3.6% வளர்ச்சி வீதத்துடன் (இலக்கை விட அதிகம்) வெற்றி பெற்றது.

இரண்டாம் ஐந்தாண்டு திட்டம் | Second Five Year Plan in India in Tamil (1956-1961):

 1. இரண்டாவது ஐந்தாம் திட்டம் PC மஹலநோபிஸ் (P.C. Mahalanobis) மாதிரியை அடிப்படையாக கொண்டு செயல்பட்டது.
 2. இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம் நாட்டின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதாகும்.
 3. இத்திட்டம் 4.1% வளர்ச்சியுடன் வெற்றி பெற்றது.

மூன்றாவது ஐந்தாண்டு திட்டம் | Third Five Year Plan in India in Tamil (1961-1966):

 1. மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தை “காட்கில் திட்டம்” (Gadgil) என்றும் அழைக்கப்பட்டது.
 2. இத்திட்டத்தின் முதன்மை நோக்கம் சுதந்திரமான பொருளாதாரம் மற்றும் சுய முன்னேற்ற நிலையை ஏற்படுத்துதல் ஆகும்.
 3. சீன – இந்தியப் போரின் காரணமாக இலக்கு வளர்ச்சியான 5.6%-ஐ அடைய இயலவில்லை.

ஐந்தாண்டு திட்டத்தின் விடுமுறை காலம் | Five Year Plan Holiday (1966-1969):

 1. மூன்றாம் ஐந்தாவது திட்டம் தோல்வியும் மற்றும் இந்திய பாகிஸ்தான் போர் காரணமே இந்த திட்டத்தின் விடுமுறை காரணம்.
 2. இக்கால கட்டத்தில் ஓராண்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு வேளாண்மை, வேளாண் சார் துறைகள் மற்றும் தொழில் துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

நான்காம் ஐந்தாண்டு திட்டம் | Fourth Five Year plan in India in Tamil (1969-1974):

 1. நான்காவது ஐந்தாண்டு திட்டத்தில் இரண்டு முக்கிய நோக்கங்கள் உள்ளன. அவை: நாட்டின் நிலையான வளர்ச்சி மற்றும் தற்சார்பு நிலையை அடைவதாகும்.
 2. இத்திட்டம் அதன் இலக்கான 5.7% வளர்ச்சியை எட்டாமல் 3.3% வளர்ச்சியை மட்டுமே பெற்று தோல்வியை சந்தித்தது.
அனைவருக்கும் மத்திய அரசின் ஓய்வூதிய திட்டம்

ஐந்தாம் ஐந்தாண்டு திட்டம் | Fifth Five Year Plan in India in Tamil (1974 -1979):

 1. இந்த ஐந்தாம் ஐந்தாண்டு திட்டத்தில் வேளாண்மை தொழில் துறை மற்றும் சுரங்கத் தொழிலுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.
 2. ஒட்டுமொத்தமாக நோக்குகையில் இலக்கு வளர்ச்சியான 4.4% ஐ விட அதிகமாக 4.86 வளர்ச்சி பெற்று இத்திட்டம் வெற்றி பெற்றது.
 3. இத்திட்டத்திற்கான முன் வரைவு D.P.தார் (DHAR) அவர்களால் தயாரிக்கப்பட்டது. இத்திட்டம் 1978-ஆம் ஆண்டு (ஓராண்டுக்கு முன்பே) கைவிடப்பட்டது.

சூழல் திட்டம்:

 1. 1978-1979-ம் ஆண்டு ஒரு வருட திட்டம் காலத்திற்காக இச்சுழல் ஆரம்பம் ஆகியது.
 2. இது ஐந்தாவது ஐந்தாண்டு திட்டத்தை நீக்கிய பிறகு தொடங்கப்பட்டது.

ஆறாம் ஐந்தாண்டு திட்டம் | Sixth Five Year Plan in India in Tamil (1980-1985):

 1. ஆறாம் ஐந்தாண்டு திட்டத்தின் அடிப்படை நோக்கம் வறுமை ஒழிப்பு மற்றும் தொழில்துறை தற்சார்பு ஆகும். “வறுமை ஒழிப்பு” (GARIBI HATAO) என்பதே இந்த திட்டத்தின் முதல் இலட்சியம்.
 2. ஆறாம் ஐந்தாண்டு திட்டம் முதலீட்டு திட்டத்தை அடிப்படையாக கொண்டது.
 3. இத்திட்டதின் வளர்ச்சி இலக்கு 5.2%. ஆனால் 5.7% வளர்ச்சி எட்டப்பட்டது.

ஏழாம் ஐந்தாண்டு திட்டம் | Seventh Five Year Plan in India in Tamil (1985-1990):

 1. இத்திட்டத்தின் நோக்கம் தன்னிறைவுப் பொருளாதாரத்தை உருவாக்குதல் மற்றும் ஆக்கப்பூர்வமான வேலைவாய்ப்பை வழங்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
 2. முதன்முறையாக பொதுத்துறைக்கும் மேலாகதனியார்துறைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.இது தனியார் துறையின் வெற்றியாக அமைந்தது.
 3. இத்திட்டத்தின் வளர்ச்சி இலக்கு 5.0% ஆனால் 6.0% வளர்ச்சி காணப்பட்டது.

எட்டாம் ஐந்தாண்டு திட்டம் | Eighth Five Year Plan in India in Tamil (1992-1997):

 1. எட்டாம் இந்தாண்டு திட்டத்தில் வேலைவாய்ப்பு, கல்வி, சமூகநலம் போன்ற மனித  மேம்பாடு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது.
 2. இத்திட்ட காலத்தில் இந்தியாவிற்கான புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தபட்டது.
 3. இத்திட்டத்தின் வளர்ச்சி இலக்கு 6%. ஆனால் 6.8% ஆண்டு வளர்ச்சி எட்டப்பட்டது.

ஒன்பதாம் ஐந்தாண்டு திட்டம் | Ninth Five Year Plan in India in Tamil (1997-2002):

 1. சமூக நீதியுடன் கூடிய சமமான வளர்ச்சிக்கு இத்திட்டத்தில் முக்கிய கவனம் கொடுக்கப்பட்டது.
 2. இத்திட்ட கால இலக்கான 7% வளர்ச்சி எட்டப்படவில்லை.
 3. இந்தியப் பொருளாதாரம் 5.0% வளர்ச்சியை மட்டுமே அடைந்தது.

பத்தாம் ஐந்தாண்டு திட்டம் | Tenth Five Year Plan in India in Tamil (2002-2007):

 1. இத்திட்டம் அடுத்த பத்தாண்டுகளில் தலா வருவாயை இரு மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயித்தது.
 2. இத்திட்டம் 2012-ம் ஆண்டில் வறுமை விகிதத்தை 15% ஆக குறைக்கும் குறிக்கோளைக் கொண்டிருந்தது.
 3. இத்திட்டத்தின் வளர்ச்சி இலக்கு 8.01. ஆனால் 7.2% மட்டுமே எட்டப்பட்டது.

பதினொன்றாம் ஐந்தாண்டு திட்டம் | Eleventh Five Year Plan in India in Tamil (2007-2012):

 1. இதன் முக்கிய நோக்கம் “விரைவான மற்றும் அதிகமான உள்ளடக்கிய வளர்ச்சியாகும்”.
 2. இதன் வளர்ச்சி இலக்கு 8.1%. ஆனால் எட்டப்பட்டது 7.9% மட்டுமே.

பனிரெண்டாம் ஐந்தாண்டு திட்டம் | Twelfth Five Year Plan in India in Tamil (2012-2017):

 1. இதன் முதன்மை நோக்கம் “விரைவான அதிகமான உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சியே” ஆகும்.
 2. இதன் வளர்ச்சி இலக்கு 81% ஆகும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil