கடினமான விடுகதைகள் | Tough Riddles with Answers in Tamil

Tough Riddles with Answers in Tamil

Tough Riddles with Answers in Tamil

விளையாட்டு என்றால் சிறியவர்களுக்கு மிகவும் பிடிக்கும். அந்த காலத்தில் எல்லாம் ஓடிப்பிடித்து விளையாடுவது, பம்பரம் விடுவது, சில்லுக்கோடு, பல்லாங்குழி, கோலிக்குண்டு என்று குழந்தைகள் பலவிதமான விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர். ஆனால் இப்பொழுது உள்ள குழந்தைகளுக்கு மொபைல் போன் இருந்தால் போதும் வேறு எதுவும் வேண்டாம் அவர்களுக்கு. அந்த அளவிற்கு குழந்தைகளை பெற்றோர்கள் கெடுத்து வைத்துள்ளனர். பிள்ளைகளுடன் சிறிது நேரம் கூட இருப்பதில்லை. பிள்ளைகள் அடம்பிடிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக மொபைல் போனை தூக்கி கொடுத்துவிடுவது. இப்படியே பெற்றோர்கள் குழந்தைகளிடம் மொபைல் போனை கொடுத்துக்கொண்டே இருந்தால் குழந்தையின் அறிவு திறன் மேம்படாது. குழந்தையின் அறிவு திறனை மேம்படுத்த நிறைய விளையாட்டுகள் இருக்கின்றன உதாரணத்திற்கு குழந்தைகளிடம் விடுகதை கேட்டு அதற்கான விடை கேட்கலாம். இவ்வாறு நாம் அவர்களது அறிவுக்கு வேலை கொடுக்கும் போது. அவர்களுக்கு நிறைய யோசனை திறன் வளரும்.

குழந்தைகளின் அறிவு திறனை அதிகரிக்க உதவும் வகையில் இந்த பதிவில் சில கடினமான விடுகதைகள் மற்றும் அதற்கான விடையையும் பதிவு செய்துள்ளோம் அவற்றை இப்பொழுது ஒவ்வொன்றாக பார்க்கலாம் வாங்க.

மூளைக்கு வேலை கடினமான விடுகதைகள் – Difficult Riddles in Tamil:

ஒரு மனிதன் 1999-யில் பிறந்தான், ஆனால் அவனுக்கு இப்போது வயது அது எப்படி?

 • விடை: 1999 என்பது அவன் பிறந்த மருத்துவமனையின் அறை எண்ணாகும், பிறந்த வருடம் அல்ல.

100-லிருந்து 10-ஐ எத்தனை முறை கழிக்க முடியும்?

 • விடை: ஒரு முறை தான் ஏனென்றால் அடுத்த முறை நீங்கள் கழிக்கும் போதும் அது 90 ஆகிவிடும்.

ஒரு குரங்கு, ஒரு அணில், ஒரு குருவி மூன்றுக்கும் ஒரு போட்டி. அதாவது யார் முதலில் வாழை கண்டில் ஏறி வாழைப்பழத்தை பறிப்பார்கள் என்று. யார் வெல்வார்கள்?

 • விடை: யாரும் இல்லை. ஏனென்றால் கன்றில் வாழைப்பழம் இருக்காது.

ஒரு பெண்ணிற்கு ஒரே பிரசவத்தில், ஒரே நாளில், ஒரே நேரத்தில் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். ஆனால் அவர்கள் இரட்டையர்கள் இல்லை அது எப்படி?

 • விடை: அந்த குழந்தைகள் Triplets (ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள்)
  இரண்டு ஆண், ஒரு பெண்

ஒரு கூடையில் ஆறு ஆப்பிள் இருந்தன. அங்கு இருந்த 6 சிறுவர்களுக்கும் 6 பழங்கள் கொடுத்துவிட்டனர். ஆனால் கூடையில் ஒரு பழம் இருந்தது அது எப்படி?

 • விடை: கடைசி பழம் கூடையுடன் சிறுவனுக்கு கொடுக்கப்பட்டது.

இதை வாங்கும் போது கருப்பாக இருக்கும், பயன்படுத்தும் போது சிவப்பாக்கும், பயன்படுத்திய பிறகு வெள்ளையாக இருக்கும் அது என்ன?

 • விடை: கரி 

இவன் இறக்கை இல்லாமல் பறப்பான், கண் இல்லாமல் அழுவான், அவன் யார்?

 • விடை: மேகம்

ஒரு பண்ணையில் ஆடுகளும், கோழிகளும் திருடப்பட்டன. போலீஸ் விசாரிக்கும் போது அங்கிருந்த காவல்காரன் பின்வருமாறு கூறினான், திருட்டு போன்றவற்றின் கால்களை எண்ணினால் 330, தலைகளை எண்ணினால் 92 என்றான். அப்போது திருட்டு போன ஆடுகள் எத்தனை, கோழிகள் எத்தனை?

 • விடை: ஆடுகள் 73, கோழிகள் 19

பின்வருவனவற்றுள் அடுத்து வரும் எழுத்து என்ன?
ABCD____  இதன் அடுத்த எழுத்து E இல்லை

 • விடை: F

இரண்டு ஆசிரியர்கள் ஒரு கல்லூரியில் பணிபுரிகின்றனர். அதில் ஒருவர் மற்றவரின் மகனின் தந்தையாவார். அப்படியெனில், இருவருக்குமான உறவு என்ன?

 • விடை: கணவன் – மனைவி
மேலும் விடுகதை கேள்வி பத்திகளை தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து படியுங்கள்
விடுகதைகள் | Vidukathaigal
சிறந்த விடுகதைகள் மற்றும் விடைகள்
குழந்தைகளுக்கான விடுகதைகள்
விடுகதை விளையாட்டு விடைகள்
கணக்கு விடுகதைகள்
தமிழ் விடுகதைகள் 400 With Answer
தமிழில் விடுகதைகள் கேள்வி பதில்..!
அறிவியல் விடுகதைகள்
பாட்டி விடுகதைகள்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil