அட்சய திருதியை 2022 எப்போது ? Akshaya Tritiya 2022 | Akshaya Tritiya 2022 in Tamil

Akshaya Tritiya 2022

அக்ஷய திருதியை 2022 | Akshaya Thiruthiyai 2022

Akshaya Tritiya 2022: நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம்-ல் அட்சய திருதியை 2022-ல் எப்போது வருகிறது என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளுவோம். அட்சயம் என்றால் “வளர்வது” என்று பொருளாகும். சித்திரை மாதம் அமாவாசையை அடுத்த மூன்றாம் நாள் வரும் திதியை அக்ஷய திருதியை என்று சொல்கிறோம். இந்த அட்சய திருதியை நன்னாளன்று எந்த ஒரு காரியத்தை தொடங்கினாலும் வெற்றியில் முடியும் என்பது ஐதீகம். இன்றைய நாளில் கோயிலுக்கு செல்லுதல், பித்ரு காரியம், இல்லாதவர்களுக்கு உதவி செய்தல் போன்றவற்றை இந்த திருநாளில் செய்யலாம். அட்சய திருதியை அன்று தங்கத்தில் முதலீடு செய்தால் வீட்டில் செல்வ செழிப்பு பெருகும். மேலும் இந்த புனிதமான அக்ஷய திருதியை சிறப்பு நாளில் ஏழை எளியவர்களுக்கு உணவு, தானங்கள் வழங்கி வந்தால் உடல் நல குறைவில்லாமல் நெடுநாள் வாழலாம்..! இந்தாண்டு அட்சய திருதியை உங்களுக்கு வளமான எதிர்காலத்தை அளிக்க வாழ்த்துகிறோம். அந்த வகையில் அட்சய திருதியின் தேதி மற்றும் முகூர்த்த காலத்தினை இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம்.

தங்கம் விலை இன்றைய நிலவரம் 2022

அட்சய திருதியை 2022 நேரம் | Akshaya Tritiya 2022 Time | Akshaya Tritiya Puja Shubh Muhurat: 

2022 அட்சய திருதியை அன்று தங்க நகை வாங்க முகூர்த்த நேரம்..! 
05:48 AM to 12:06 PM

அட்சய திருதியை 2022 தேதி / Akshaya Tritiya 2022 Date In Tamil:

அட்சய திருதியை 2022 தேதி அட்சய திருதியை 2022 நாள்
03.05.2022 (மே மாதம்) செவ்வாய்க்கிழமை

அட்சய திருதியின் சிறப்பு:

Akshaya Tritiya

 • பிரம்மன் தனது சிருஷ்டித் தொழிலைத் அட்சய திருதியின் நாளில்தான் தொடங்கினான்.
 • வனவாசம் சென்ற பஞ்ச பாண்டவர்கள் தவம் இருந்து சூரிய பகவானிடம் அட்சய பாத்திரம் பெற்ற தினம்.
 • அட்சய திருதியை நன்னாளில் லட்சுமி பூஜை, குபேர பூஜை செய்து வந்தால் ஐஸ்வர்யம் அதிகரிக்கும்.
 • பிட்சாடனரான ஈஸ்வரன், ஸ்ரீஅன்னபூரணியிடம் பிட்சை பெற்றது இந்த அட்சய திருதி நாளில் தான்.
தங்கம் வாங்க நல்ல நாள் 2022

என்னென்ன பொருள்களை தானம் செய்யலாம்:

 • அணிந்து கொள்ள உடை இல்லாதவர்களுக்கு உடைகள், குடை, பானகம், நீர் மோர், விசிறி, முக்கியமாக நீர் நிறைந்த குடம் கொடுத்தால் அழியாத செல்வத்தை பெறலாம்.
 • உடல் நோயினால் அவதிப்படுபவர்களுக்கு மருத்துவம் சார்ந்த செலவுகளை செய்யலாம்.
 • வெப்பத்தைத் தணிக்கும் வகையில் தயிர்சாதம் தானமாக கொடுத்தால் ஆயுளானது அதிகரிக்கும்.
 • திருமண தடை உள்ளவர்கள் அட்சய திருதியை நாளில் இனிப்பு கலந்த பொருள்களை தானம் செய்யலாம்.
 • இது போன்ற தானங்களை செய்தால் குடும்பத்தில் இருந்து வந்த வறுமைகள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் இருக்கும்.

அக்ஷய திருதியை அன்று செய்யக்கூடிய நல்ல காரியம்:

 • குழந்தைக்கு முதன் முதலாக அன்னம் ஊட்டி பழக்கலாம்.
 • இன்றைய நாளில் சங்கீதம், கல்வி, கலைகள் போன்றவை கற்றுக்கொள்ளலாம்.
 • வளைகாப்பு செய்ய, திருமணம் செய்ய, திருமண விவாகம், தொட்டிலில் குழந்தையை விட, வீடு கிரகப்பிரவேசம் செய்ய, குழந்தைகளுக்கு காது குத்த உகந்த தினம்.
 • நிலங்களில் எரு இட, விதை விதைக்க, கதிர் அறுக்க, தானியத்தைக் களஞ்சியத்தில் சேர்க்க, தானியம் உபயோகிக்க, கால்நடைகள் வாங்க போன்ற விவசாயப் பணிகளில் ஈடுபடலாம்.
 • புதிய வாகனம் வாங்க, புதிய ஆடை அணிய, மருந்து உட்கொள்ள, வெளிப்பயணம் மேற்கொள்ளலாம்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil