அனாமலி ஸ்கேன் என்றால் என்ன? | Anomaly Scan Meaning in Tamil
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம் கர்ப்பிணிகளுக்கு எடுக்கப்படும் அனாமலி ஸ்கேன் பற்றி தான் பார்க்க போகிறோம். அதாவது இந்த ஸ்கேன் எதற்க்காக எடுக்கப்படுகிறது. இந்த ஸ்கேன் அவசியம் எடுப்பதற்க்கான காரணம் என்ன?, போன்ற தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
Anomaly Scan Meaning in Tamil:
பொதுவாக கர்ப்பிணிகள் எடுக்கும் ஒவ்வொரு ஸ்கேனிலும் ஒவ்வொரு வகையான ரிபோர்டிலும் குழந்தையின் வளர்ச்சி நிலை எப்படி இருக்கும் என்று நாம் தெரிந்துகொள்ள முடியும். அந்த வகையில் ஐந்தாவது மாதம் எடுக்கப்படும் ஒரு ஸ்கேன் தான் இந்த அனாமலி ஸ்கேன்.
இந்த அனாமலி ஸ்கேனில் குழந்தையின் அனைத்துவகையான ஆர்கனையும் பார்ப்பார்களாம். அதாவது குழந்தையின் உடல் உறுப்புகள் அனைத்தும் சரியான இடத்தில் அமைந்துள்ளதா என்பதை பார்த்து இந்த ஸ்கேனில் சொல்வார்கள்.
அப்படி வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஏதாவது குறைபாடு இருக்கிறது என்றால் அந்த குழந்தை பிறப்பதற்கு முன்னதாகவே இந்த பிரச்சனையை சரி செய்த்துவிடலாம் என்பதற்க்காகத்தான் இந்த அனாமலி ஸ்கேன் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
இந்த அனாமலி ஸ்கேன் எப்போது எடுப்பார்கள் என்றால் 18-வது வாரத்தில் இருந்து 20-வது வாரத்திற்குள் இந்த ஸ்கேன் எடுக்கப்படுகிறது.
இந்த அனாமலி ஸ்கேனில் குழந்தையின் தலை முதல் கால் வரை உள்ள உறுப்புகள் அனைத்தும் சரியாக அமைந்திருக்கிறது என்பதை பார்ப்பப்ர்கள். மேலும் குழந்தை கை கால்களை சரியாய் அசைகிறா என்பதையும் இந்த ஸ்கேனில் பார்ப்பார்களாம். மேலும் குழந்தையின் இரண்டு கிட்னி, நுரையீரல், இடுப்பு பகுதி, முதுகுத்தண்டு இவை அனைத்தையும் இந்த ஸ்கேன் மூலம் பார்ப்பார்கள். மேலும் குழந்தையின் வளர்ச்சி, எடை எப்படி இருக்கிறது என்பதையும் இந்த ஸ்கேன்யில் பார்க்கப்படுகிறது.
அதேபோல் கர்ப்பப்பை வலிமையாக இருக்கிறதா? மற்றும் குழந்தை கர்ப்பப்பையில் தான் வளர்கிறதா என்பதையும் இந்த ஸ்கேன் மூலம் பார்த்து சொல்வார்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஆஞ்சியோ சிகிச்சை என்றால் என்ன?
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |