உங்கள் மீது குற்றம் சாட்டினால் நீங்களே வாதாட முடியுமா..? இது என்ன புதுசா இருக்கு..!

Advertisement

Can You Fight Your Own Case in Court in Tamil

நம்மில் பலருக்கும் தெரியாத ஒன்று தான் இது..! நம்முடைய சொந்த வழக்கை நாமே வாதாட முடியும்..! இது யாருக்கு தெரியும். ஒருவர் மீது குற்றம் சாட்டிவிட்டார்கள் என்றால் அவர்கள் மீது தவறு இல்லை என்றால் அதனை எடுத்துக்கொள்ள மற்றொரு வழக்கறிஞரை நாடுவோம்..! அதற்கு அவர்களுக்கு சம்பளம் போல் பணம் கொடுக்கவேண்டும்.

சம்பளமானது ஒவ்வொரு வழக்குகளை பொறுத்து மாறுபடும். சிலருக்கு பணம் இல்லை என்பதாலும் கூட தண்டனை அனுபவிப்பார்கள். ஆனால் இது போல் ஒரு சட்டம் உள்ளது என்பது அதிகளவு யாருக்கும் தெரிவதில்லை.

Can You Fight Your Own Case in Court in Tamil:

வழக்கறிஞர் இல்லாமல் நீதிமன்றத்தில் வழக்குகளை பதிவு செய்ய முடியுமா அல்லது குற்றம் சாட்டியவர்கள் அவர் மீது குற்றம் இல்லை என்பதையும் அவருக்கு அவரே வாதாட முடியுமா என்பது தான் கேள்வி..?  கண்டிப்பாக வாதாட முடியும். மேலும் வழக்கறிஞர் வைத்து தான் வாதாட வேண்டும் என்ற எந்த ஒரு சட்டமும் இல்லை.  

இன்னும் ஒரு சில சட்டத்தில் வழக்கறிஞரே அவசியம் இல்லை. பொதுமக்கள் நேரடியாக நீதிமன்றத்தில் பெட்டிஷன் தாக்கல் செய்யலாம். அதற்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் என்ற சட்டத்தில் Consumer Rights Violations கீழ் இது இருந்தால் உரிய படிவத்துடன் நீதிமன்றத்தில் செலுத்தவேண்டிய கட்டணம் செலுத்தி யார் பாதிக்கப்பட்டு உள்ளாரோ அவரே அவருடைய வழக்குகளை வாதாடிக் கொள்ள முடியும்.

இது போல் கன்சுமர் கேஸ் இல்லாமல் சொத்து சம்பந்தப்பட்ட சிவில் வழக்குகளையும் வாதாடிக் கொள்ள இந்த சட்டத்தில் இடம் உண்டு.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 குற்றம் செய்ய தூண்டுபவருக்கு இந்த தண்டனை தான்..!

நீங்கள் நினைப்பீர்கள் அப்புறம் எதற்கு அவ்வளவு வழக்குகள் வழக்கறிஞர் என்று..? அனைவரும் அனைத்து சட்டமும் தெரியும் என்று தெரியாது. ஆகவே நீங்கள் ஒரு வழக்கை வாதாட போகிறீர்கள் என்றால், வழக்கறிஞர் எதற்காக நீங்களே வாதாட முடிவு செய்தீர்கள் என்று கேள்வியும் கேட்டு நீங்கள் கூறும் பதில் ஏற்புடையதாக இருந்தால் மட்டுமே உங்களுக்கு வாதாடும் உரிமை வழங்குவார்கள். மேலும் நீதிபதிக்கு முன் எப்படி பேசவேண்டும் என்பதை அவர்கள் உங்களுக்கு எடுத்துரைப்பார்கள்.

இது அனைத்தும் உங்கள் மீது யாராவது குற்றம் சாட்டினார்கள் என்றால் உங்கள் மீது தவறு இல்லை என்று சொல்லி வாதாடிக் கொள்ளலாம். ஆனால் நீங்கள் ஒருவர் மீது குற்றம் சாட்டிவிட்டு அதற்காக வாதாட சட்டத்தில் இடம் இல்லை.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் இந்த சட்டத்தை தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள்..!

மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉  Law 
Advertisement