ஃபிரிட்ஜ் ஏன் வெடிக்கிறது.. ஃபிரிட்ஜ் பக்கத்துல எந்த பொருளையும் வைக்காதிங்க..

Advertisement

ஃபிரிட்ஜ் வெடிக்க என்ன காரணம் | Fridge Blast Reason in Tamil

அனைவரது வீட்டிலேயோம் இப்பொழுது கண்டிப்பாக ஃபிரிட்ஜ் என்பது அவசியமான ஒரு பொருளாக மாறிவிட்டது.. எதற்கு அவசியமான பொருளாக மாறியது என்று கண்டிப்பாக அனைவருக்கு தெரிந்திருக்கும் உணவு பொருட்களை சில நாட்களுக்கு கேட்டு போகாமல் பாதுகாப்பதற்கு ஃபிரிட்ஜ் மிகவும் பயனுள்ள சாதனமாக இருக்கிறது என்பதால். அனைவரது வீட்டிலும் ஃபிரிட்ஜை வாங்கி வீடுகள், கடைகள், மற்றும் பல இடங்களில் பயன்படுத்துகின்றன. இந்த ஃபிரிட்ஜ் வெடித்தும் சில விபத்துகளை ஏற்படுத்துகிறது.. இதனால் உயிரிழப்பும் நிகழ்கிறது.. சரி நன்றாக வேலைசெய்துகொண்டிருக்கும் ஃபிரிட்ஜ் ஏன் திடீரென்று வெடிக்கிறது.. ஃபிரிட்ஜை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் போன்ற தகவல்களை நாம் இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

ஃபிரிட்ஜை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

Fridge Blast Reason in Tamil

சரியான பவர் சப்லையில் தான் நாம் ஃபிரிட்ஜை உபயோகப்படுத்த வேண்டும்.

அதேபோல் சரியான பிளக்பயிண்டில் தான் ஃபிரிட்ஜை கனைக்ட் செய்ய வேண்டும்.

குறிப்பாக Stabilizer பயன்படுத்துவது மிகவும் அவசியம் ஆகும். தற்பொழுது விற்கப்படும் ஃபிரிட்ஜிகளுக்கு Stabilizer பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும் எல்லாவகையான ஃபிரிட்ஜிகளுக்கு Stabilizer கண்டிப்பாக பயன்படுத்துவது மிகவும் நல்லது.

ஃபிரிட்ஜில் அதிகமான பொருட்களை அடிக்கிவைக்க கூடாது, அதாவது ஃபிரிட்ஜை அழுத்தி மூடும் அளவிற்கு ஃபிரிட்ஜிக்குள் நிறைய பொருட்களை அடிக்கி வைக்க கூடாது.

ஃபிரிட்ஜை நல்ல காற்றோட்டம் உள்ள இடத்தில் வைத்து தான் பயன்படுத்த வேண்டும்.

அதிக வெப்பம் இருக்கும் இடத்தில் பிரிட்ஜியை கண்டிப்பாக வைத்து பயன்படுத்த கூடாது.

பிரிட்ஜின் பின்புறம் குறைந்தது 6 Inches இடைவெளி இருக்க வேண்டும். அதேபோல் பிரிட்ஜின் வலது மற்றும் இடது புறத்திலும் 6 Inches இடைவெளி இருக்க வேண்டும்.

வெயில் படும் இடத்தில் ஃபிரிட்ஜை வைக்க கூடாது.

ஃபிரிட்ஜின் மேல் புறம் மட்டும் துணிகளை போடலாம், அதனை விட்டுவிட்டு ஃபிரிட்ஜ் அழுக்குப்படும் என்று பிரிட்ஜ் முழுவதும் துணிகளை போட்டு மூடக்கூடாது.

பழைய மடல்களில் இருக்கு ஃபிரிட்ஜியில் வாயுக்கள் மிகவும் குறைவாக தான் இருக்கும். ஆனால் தற்பொழுது நவீன காலத்தில் விற்பனை செய்யப்படும் ஃபிரிட்ஜிகளில் எளிதில் தீப்பிடிக்கும் வாயுக்கள் அதிகம் உள்ளது. ஆக நாம் சரியாக பயன்படுத்தவில்லை என்றால் கண்டிப்பாக வெடித்து விபத்துகளை ஏற்படுத்திவிடும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பிரிட்ஜ் பராமரிப்பு ..!

விபத்துகளை தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும்?

மேல் கூறப்பட்டுள்ள விஷயங்களை பின்பற்ற வேண்டும். அதனுடன் ஃப்ரிட்ஜ்-யில் சீராக மின்சாரம் வருகிறதா என்பதை அவ்வப்போது கவனிக்க வேண்டும்.

ஃபிரிட்ஜ் மேல் அதிக பொருட்களை அடிக்கி வைக்க கூடாது.. பிரிட்ஜின் மேல் Stabilizer மட்டும் இருந்தால் போதும். வேறு எந்த பொருள்களையும் அதன் மேல் அடிக்கி வைக்க கூடாது.

6 மாதத்திற்கு ஒருமுறையாவது அல்லது ஒரு வருடத்திற்கு ஒரு முறையாவது ஃப்ரிட்ஜ்-க்கு Service செய்வது மிகவும் நல்லது.

வெளியே இரண்டு நாட்கள் மூன்று நாட்களுக்கு பயணம் செல்லும் போது ஃபிரிட்ஜை Off செய்துவிட்டு செல்வது மிகவும் நல்லது.

Freezer முலுவதும் ஐஸ் கட்டினால் Thermostat உடனே மற்ற வேண்டும். இல்லாவிட்டால் Compressor அதிக வெப்பம் அடைந்து பிரிட்ஜ் வெடித்துவிடும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பிரிட்ஜில் உள்ள ஃபிரீசரில் அடிக்கடி ஐஸ்கட்டி கட்டுதா? அப்போ இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information In Tamil
Advertisement