அதிக மைலேஜ் தரும் பைக்
இன்றைய கால கட்டத்தில் ஒரு வீட்டில் 5 பேர் இருக்கிறார்கள் என்றால் 5 பேரிடமும் பைக் அல்லது ஸ்கூட்டர் இருக்கிறது.அவர்கள் வைத்திருக்கும் பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் பழையதாக ஆகிவிட்டால் புதிதாக வண்டி வாங்குகிறார்கள். மேலும் புது மாடல் பைக்குகள் வந்தாலும் வாங்கி விடுகிறாரகள். புதிதாக வண்டி வாங்குபவர்கள் மாடல் மற்றும் கலர் மற்றும் மைலேஜ் பார்த்து தான் வாங்குகிறார்கள். அதனால் நீங்கள் புதிதாக பைக் வாங்க போகிறீர்கள் என்றால் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவில் அதிக மைலேஜ் தரும் பைக்குகளை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
Bajaj Platina 115cc:
3 மாடல்களில் கிடைக்கும் இந்த பைக்கின் ஆரம்ப விலை ரூ.69,212 டியூபளஸ் டயர்களுடன் 7 வண்ணங்களில் இந்த பைக்குகள் கிடைக்கின்றன. 115 சிசி திறன் கொண்ட இந்த பைக் 70 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் என்கிறார்கள். அதோடு ஸ்டார்ட் சிட்டி பிளஸ்-68 கிலோமீட்டர், பஜாஜ் பிளாட்டினா 100சிசி 72 கிலோ மீட்டர் மைலேஜ், என பட்டியல் வெளியாகியுள்ளது.
TVS sports 109cc :
அதிக மைலேஜ் தரும் பைக்குகளில் டிவிஎஸ் ஸ்போர்ட் இந்தியாவில் முன்னணியில் உள்ளது. ஒரு லிட்டருக்கு 70 கிலோமீட்டர் மைலேஜ் கொடுக்கும். இந்த பைக்கின் ஆரம்ப விலை 63,950. இந்த பைக் ஏழு நிறங்களில் கிடைக்கிறது.
பைக்கே விட மைலேஜ் தரும் கார்கள்.! இனிமேல் யாரும் பைக் வாங்க மாட்டாங்க
Honda SP 125:
25 சிசி திறன் எஞசின் கொண்ட இந்த பைக்கின் ஆரம்ப விலை ரூ.82,489. சிங்கிள் சிலிண்டர் ஃப்யூல் இஞ்சக்டட் மோட்டார் கொண்ட இந்த பைக், 68 கிலோ மீட்டர் மைலேஜ் கொடுக்கும்.
Hero hf Deluxe 100cc Mileage:
100 சிசி திறன் கொண்ட எஞ்சினுடன் ஐந்து வேரியண்ட்களில் அசத்தலான கலர்களில் இந்த பைக் வெளியாகிறது. இந்த பைக்கின் ஆரம்ப விலை ரூ.59, 890. இதன் மைலேஜ் 65 கிலோமீட்டர்கள்
TVS Radeon 110cc in Tamil:
110 சிசி திறன் கொண்ட இந்த பைக்கின் ஆரம்ப விலை 70,812 ரூபாய். சை்ட் ஸ்டாண்ட் இண்டிகேட்டர், யுஎஸ்பி சார்ஜிங், உள்ளிட்ட வசதிகளுடன் கிடைக்கும் இந்த பைக்கின் மைலேஜ் 65 கிலோ மீட்டர் கொடுக்கும்.
ஹீரோ ஸ்பௌண்டர் :
60 கிலோமீட்டர் மைலேஜ் தரும் இ்நத பைக்குகள் 72,728 ரூபாயில் இருந்து கிடைக்கின்றன. தொடக்கத்தில் இருந்தே மாறாத ஸ்டைல் அன்ட் லுக் இந்த பைக்கின் சிறப்பம்சம். 97.2 சிசி திறன் கொண்ட எஞ்சின் கொண்ட இந்த பைக் செல்ஃப் ஸ்டார்ட்டருடன் கிடைக்கிறது.
2023 ஆம் ஆண்டு பிரபல நிறுவனத்தின் குறைந்த விலையில் உள்ள கார் பட்டியல்..!
டிவிஎஸ் ரைடர்:
இந்த பைக் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அதிக பட்சமாக 60 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தருகிறது. ரூ.85,400 விலைக்கு கிடைக்கும் இந்த பைக், 124.8 சிசி திறன் கொண்ட எஞ்சினுடன் வருகிறது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |