இடி, மின்னல் எப்படி உருவாகிறது என்று உங்களுக்கு தெரியுமா..?

How Do Thunder And Lightning Forms in Tamil

How Do Thunder And Lightning Forms in Tamil

அன்பு நண்பர்களுக்கு இனிய வணக்கங்கள்..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான தகவலை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். வெயில், மழை, பனி, இடி, மின்னல் அதுபோல புயல் எல்லாம் இயற்கையாக வரக்கூடியவை. இவற்றை யாரும் உருவாக்கவில்லை.

அதை யாரும் உருவாக்கவில்லை என்றால், அது எப்படி உருவாகிறது என்று பலருக்கும் பல கேள்விகள் தோன்றும். அந்த கேள்விக்கான பதிலாக இருந்த பதிவு இருக்கும். அந்த வகையில் இன்று இந்த பதவின் மூலம் இடி மின்னல் எப்படி உருவாகிறது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

இடி இடிக்கும் போது ஏன் மூத்தப் பிள்ளை வெளியே செல்லக் கூடாது என்று சொல்கிறார்கள்..?

இடி மின்னல் எப்படி உருவாகிறது..? 

How Do Thunder And Lightning Forms in Tamil

மழைப் பெய்யும் போது இடியும் மின்னலும் வரும். அது நம் அனைவருக்குமே தெரியும். இடி சத்தத்தையும் மின்னல் வெளிச்சத்தையும் ஏற்படுத்துகிறது. ஆனால் அது எப்படி உருவாகிறது என்று நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில் அதை பற்றி நாம் தெரிந்து கொள்வோம்.

பொதுவாக மழையும், வெயிலும் இல்லாமல் ஒரு விதமான குளிர்ச்சியான காற்று திடீரென பூமியில் இருந்து மேலே எழும்புகிறது. அந்தக் காற்று ஈரமாக இருப்பதால் அது மேலே சென்று, குளிர்ச்சி அடைந்து நீர்த்துளிகள் உருவாகின்றன. அதாவது மேகங்கள் உருவாகின்றன.

அப்படி உருவாகும் இந்த மேகங்கள், மழைக்காலத்தில் வேகமாக காற்று வீசும் போது ஏற்கனவே மேலே இருக்கும் மேகங்களுடன் உரசிக் கொள்கின்றன. அப்படி மேகங்கள் உரசிக் கொள்ளும் போது 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் டிகிரி வரை வெப்பம் உருவாகிறது.  இந்த நிகழ்வின் போது உருவாகும் சூடான காற்று பலத்த சத்தத்துடன் இடியை உருவாக்குகிறது. 

இதையும் பாருங்கள் –> மழைப் பெய்யும் போது மண்வாசம் வர காரணம் என்ன..?

 அதுபோல இப்படி உருவாகும் வெப்பமானது ஒரு பகுதியை விரிவடைய செய்கிறது. அப்படி விரிவடையும் பகுதியில் இருந்து ஒரு விதமான சத்தமும் வெளிச்சமும் வருகிறது. அந்த நேரத்தில் வரும் சத்தத்தை இடி என்றும் வெளிச்சத்தை மின்னல் என்றும் கூறுகின்றோம்.  

மலை பெய்யும் போது நம் கண்களில் முதலில் மின்னல் தான் தெரியும். சிறிது நேரத்திற்கு பிறகு தான் இடி சத்தம் கேட்கும். காரணம், மின்னல் ஒரு நொடிக்கு 300000  கிலோமீட்டர் வேகத்தில் பூமியை வந்தடைகிறது. அதுபோல இடியின் வேகம் ஒரு நொடிக்கு 330 மீட்டர் வேகத்தில் தான் பூமியை வந்தடைகிறது.

அதனால் தான் மின்னல் முதலிலும், இடி கொஞ்ச நேரம் கழித்தும் வருகிறது. இப்படி தான் இடியும், மின்னலும் உருவாகிறது.

இடி இடிக்கும் போது ஏன் “அர்ஜுனா” என்று சொல்கிறோம் காரணம் தெரியுமா..?

 

இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  Interesting information