வெண்டைக்காயை சாப்பிடுவதற்கு முன்னால் இதனை தெரிந்து கொள்ளுங்கள்..!

Ladies Finger in Tamil

Ladies Finger in Tamil

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவை முழுதாக படித்து முடிக்கும் பொழுது ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்ட மனத்திருப்தி உங்களுக்கு கிடைக்கும். அப்படி என்ன பயனுள்ள தகவல் என்று நீங்கள் சிந்தனை செய்வது புரிகின்றது. அது என்ன தகவல் என்றால் வெண்டைக்காய் பற்றிய தகவல்கள் தான். பொதுவாக நாம் அனைவருமே இந்த வெண்டைக்காய் பல வகையான உணவாக தயாரித்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் அதன் பிறப்பிடம், அதன் பிறபெயர்கள், பயன்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் போன்ற தகவல்கள் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. அப்படி உங்களுக்கு வெண்டைக்காய் பற்றி இவை அனைத்தும் தெரிந்திருந்தால் மகிழ்ச்சி, மாறாக தெரியவில்லை என்றால் இன்றைய பதிவை முழுதாக படித்து இவை அனைத்தையும் அறிந்து கொண்டு பயன் பெறுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Ladies Finger Information in Tamil:

Ladies Finger Information in Tamil

பொதுவாக இந்தியாவில் முதல் மேலை நாட்டு சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான காய்கறிகளில் ஒன்றான இந்த வெண்டைக்காய் மல்லோ என்றழைக்கப்படும் மால்வேசியே குடும்பத்தைச் சேர்ந்த, பூக்கும் தாவரமாகும்.

இந்த வெண்டைக்காயில் இந்தியாவில் கோ 2, எம்டியு 1, அர்கா அனாமிகா, அர்கா அபஹாப், பார்பானி கிராந்தி, கோ 3, பூசா சவானி, வர்சா உப்கார் போன்ற பல ரகங்கள் உள்ளன.

இது ஒரு ஆண்டுத் தாவரம் அல்லது பல்லாண்டுத் தாவரம் ஆகும். மேலும் இது 2 மீ உயரம் வரை வளர்கிறது. வெண்டைக் காய்கள் பெருமளவு விதைகளைக் கொண்டதாக நீண்டு காணப்படும்.

வெண்டைக்காய் பயன்கள்

10 – 20 சதம மீட்டர்கள் வரை நீள அகலங்களைக் கொண்டுள்ள இதன் இலைகள், அங்கை வடிவம் கொண்டவையாக உள்ளது. இந்த வெண்டை தாவரத்தின் பூக்கள் 4 – 8 ச.மீ விட்டம் கொண்டவை.

இவை பொதுவாக வெள்ளை, மஞ்சள் ஆகிய நிறங்களுக்கு காணப்படும். இவற்றின் இதழ்களில் செந்நிறம் அல்லது ஊதா நிறத்தில் புள்ளிகள் இருக்கும்.

பிறப்பிடம் மற்றும் வேறுபெயர்கள்:

எத்தியோப்பிய உயர்நிலப்பகுதியே இந்த வெண்டை தாவரத்தின் தாயகம் ஆகும். அதன் பிறகு இந்தியா, இலங்கை உட்பட உலகின் பல பகுதிகளிலும் வெண்டைக்காய் பயிரிட்டு சமையலில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த வெண்டைக்காயின் அறிவியல்  பெயர் அபெல் மோஷஸ் எஸ்க்யுலென்டஸ் (Abelmoschus Esculentus) என்பது ஆகும். மேலும் இதனை அமெரிக்காவில் ஓக்ரா என்று அழைக்கின்றனர்.

வெண்டைக்காய் சாப்பிட்டால் Maths நன்றாக வருமா ஏன் இப்படி சொல்கிறார்கள் தெரியுமா

ஊட்டச்சத்துக்கள்:

Ladies Finger Benifits in Tamil

பாதியளவு வேக வைக்கப்பட்ட வெண்டைகாயின் ஊட்டச்சத்துக்களின் விவரம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது,

 1. கலோரிகள் – 25
 2. ஊட்ட நார்ச்சத்து – 2 கிராம்
 3. புரதம் – 1.5 கிராம்
 4. கார்போஹைட்ரேட் – 5.8 கிராம்
 5. வைட்டமின் A – 460 IU
 6. வைட்டமின் C – 13 மி.கி
 7. ஃபோலிக் அமிலம் – 36.5 மை.கி
 8. சுண்ணாம்புச்சத்து – 50 மி.கி
 9. இரும்பு – 0.4 மி.கி
 10. பொட்டாசியம் – 256 மி.கி
 11. மெக்னீசியம் – 46 மி.கி

பயன்கள்:

நினைவாற்றல் அதிகரிக்க பயன்படுகிறது.

புற்றுநோயில் இருந்து காப்பாற்ற மற்றும் தடுக்க பயன்படுகிறது.

கர்ப்பிணி பெண்களுக்கும் மற்றும் குழந்தையின் வளர்ச்சிக்கும் வெண்டைக்காய் ஒரு சிறந்த உணவாக உள்ளது.

உடல் எடையை குறைக்க உதவுகிறது.

இரத்தம் அதிகரிக்க பயன்படுகிறது.

இதய நோயை குணப்படுத்த உதவுகின்றது.

சர்க்கரை நோயை குணப்படுத்த பயன்படுகிறது.

 டிராகன் பழத்தை சாப்பிடுவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil