சிவலிங்கம் கனவில் வந்தால் என்ன பலன்?

lingam kanavu palangal in tamil

லிங்கம் கனவில் வந்தால் என்ன பலன்? | Lingam Kanavu Palangal in Tamil

Lingam Kanavu Palangal in Tamil:- பொதுவாக கனவு என்பது நமது ஆழ்நிலை மனது நமக்கு அனுப்பும் SMS ஆகும். நமது ஆழ்ந்த மனதில் இருக்கும் விஷயங்கள் மட்டுமே நமக்கு கனவுகள் மூலம் வெளிப்படுகிறது. ஆனால் சிலசமயம் நமது கனவுகள் நம்மிடம் என்ன சொல்ல வருகிறது என்பதை நாம் புரிந்து கொள்வது மிகவும் கடினமானதாக இருக்கும். நமது கனவுகள் பெருபாலும் நமது வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டவையாக இருக்கும். ஆனால் சில சமயம் நமது கனவுகளில் ஆன்மீகம் சார்ந்ததாகவோ அல்லது கோவில் சார்ந்ததாகவோ கனவுகள் வந்தால் அவை சற்று அதிகம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். குறிப்பாக சிவபெருமானோ அல்லது அவர் தொடர்பான எதாவது ஒரு பொருளையோ கனவில் பார்த்தால் உங்கள் வாழ்வில் பெரிய மாற்றங்கள் விரைவில் ஏற்படும். சரி இந்த பதிவில் சிவன் மற்றும் சிவலிங்கம் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி படித்தறியலாம் வாங்க.

Sivalingam Kanavil Vanthal Enna Palan

கனவில் சிவலிங்கம் வந்தால் என்ன பலன்? | Lingam Kanavu Palangal in Tamil

  • சிவலிங்கம் கனவில் வந்தால், நீங்கள் எடுத்துள்ள அனைத்து காரியங்களும் எண்ணிய வெற்றி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
  • சிவலிங்கம் கனவில் வந்தால் சுயதொழில் சம்பந்தமான நிதி உதவிகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.
  • சிவலிங்கம் கனவில் வருவது வெற்றியை குறிக்கும், உங்களுக்கு இருந்த தடைகள் விலகி செல்வம் வந்து சேரப்போவதன் அறிகுறியாகும்
உங்கள் கனவில் கடவுள் வந்தால் என்ன பலன் தெரியுமா..!

சிவன் பார்வதி கனவில் வந்தால் என்ன பலன்?

சிவன் கனவில் வந்தால் என்ன பலன் – சிவன் பார்வதி கனவில் வந்தால் பல புதிய வாய்ப்புகள் உங்கள் வாசல் வர காத்திருக்கிறது என்று அர்த்தம். வெகு விரைவில் நீங்கள் லாபம், நல்ல பயணம், நிறைவான உணவு, வளம் ஆகிய செய்திகள் உங்களை எட்டுவதன் அடையாளம் ஆகும்.

சிவபெருமானின் திரிசூலம் கனவில் கண்டால் என்ன பலன்?

சிவபெருமானின் திரிசூலம் கனவில் வருவது நல்ல அறிகுறிதான். திரிசூலத்தை கனவில் பார்ப்பது உங்கள் கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்காலத்துடன் உள்ள தொடர்பை குறிக்கும். உங்களின் அனைத்து பிரச்சனைகளும் வெகு விரைவில் சரி ஆக போகிறது என்று இந்த கனவு உணர்த்துகிறது.

நடராஜர் கனவில் வந்தால் என்ன பலன்?

சிவன் கனவில் வந்தால் என்ன பலன் – சிவபெருமானை நடராஜர் என்றும் அழைப்பார்கள். ஆகவே உங்கள் கனவில் சிவபெருமான் அல்லது கனவில் சிவனின் நடனத்தை பார்ப்பது உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் சரியாக போவதன் அறிகுறியாகும். மேலும் விரைவில் நீங்கள் பெரிய செல்வத்தை அடையப்போகிறீர்கள் என்பதன் அறிகுறியாகும் ஆனால் அதற்கு முன் சில சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil