தபால் துறையின் PPF Scheme..! ரூ.1000 முதலீடு செய்தால் வட்டி ரூ.1,45,455/- கிடைக்கும்..!
Post Office PPF Scheme in Tamil:- வணக்கம் பிரண்ட்ஸ் இன்று நாம் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறக்கூடிய சேமிப்பு திட்டத்தை பற்றி தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். இது ஒரு சிறந்த தபால்துறை சேமிப்பு திட்டமாகும். அதாவது தபால் துறையின் பொது வருங்கால வைப்பு நிதி திட்டமாகும் (15 year Public Provident Fund Account (PPF)). மாதம் மாதம் சம்பாதிக்கும் தொகையில் சிறிய அளவிலாவது சேமிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த PPF ஒரு சிறந்த திட்டமாகும். மேலும் தாங்கள் சேமிக்கும் பணத்திற்கு அதிக வட்டி மற்றும் அதிக லாபம் பெற வேண்டும் என்று நினைத்தால் இப்பொழுதே இந்த தபால்துறை சேமிப்பு திட்டத்தில் சேர்த்து பயன்பெறலாம்.
சரி இந்த திட்டத்தில் யாரெல்லாம் பயன்பெறலாம், இந்த திட்டத்தில் சேர்வதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும், இந்த தபால் துறையின் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?, நாம் இந்த சேமிப்பு திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்தால், நமக்கு எவ்வளவு வட்டி கிடைக்கும் போன்ற தகவல்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
இந்திய தபால் துறையின் டைம் டெபாசிட் திட்டம்..! 1 லட்சம் டெபாசிட்டுக்கு வட்டி ரூ.39,406 கிடைக்கும்..! |
தபால் துறையின் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்..! Public Provident Fund Scheme in Tamil..!
Post Office PPF Scheme in Tamil – தகுதி:-
இந்த பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் கணக்கு துவங்க யாரெல்லாம் தகுதி பெற்றவர்கள் என்று தெரியுமா..? இந்திய குடிமக்கள், ஊதியம் பெறுபவர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள், சுய வேலைவாய்ப்பு அல்லது வேறு எந்த பிரிவாக இருந்தாலும் இந்தியாவில் உள்ள அனைத்து தபால் நிலையங்களுக்கு நேராக சென்று விண்ணப்பிக்கலாம்.
சிரியவர்களும் இந்த திட்டத்தில் கணக்கு துவங்க முடியும். இருப்பினும் அவர்களது தந்தை அல்லது தாயாரின் சார்பாக ஜாயிண்டு அக்கௌன்ட் ஆக கணக்கு துவங்க வேண்டியதாக இருக்கும்.
முதலீடு தொகை:-
தபால் துறையின் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சேமிப்பாளர்கள் குறைந்தபட்சம் தொகையாக ஆண்டுக்கு 500 ரூபாய் முதல் 1,50,000 ரூபாய் வரை முதலீடு செய்யலாம். மொத்தமாக அல்லது 12 மாத தவணையாகவும் முதலீட்டை ஒவ்வொரு ஆண்டும் செய்ய முடியும். டெபாசிட் தொகைக்கு வருமான வரி செலுத்த வேண்டும் ஆனால் வட்டி வருவாய்க்குச் செலுத்த தேவையில்லை.
முதிர்வு காலம்:-
இந்த சேமிப்பு திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். இருப்பினும் தங்களுடைய முதிர்வு காலம் முடிவடைந்த பிறகும் தங்களுடைய சேமிப்பு கணக்கினை தொடர வேண்டும் என்று நினைத்தால் அதன் பிறகு 5 ஆண்டுகள் வரை தங்களுடைய சேமிப்பு கணக்கினை நீட்டித்து கொள்ளலாம். அதேபோல் 7 ஆண்டுகள் முதலீட்டிற்கு பிறகு தங்களுடைய சேமிப்பு தொகையை எடுத்து கொள்ளலாம்.
வட்டி விகிதம்:-
வட்டி விகிதமானது பொதுவாக ஆண்டிற்கு ஆண்டு மாறுபடும் எனவே தற்பொழுது இந்த பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு ஆண்டுக்கு 7.1% வட்டி விகித லாபம் அளிக்கப்படுகிறது.
மத்திய அரசு வீடு கட்டும் திட்டம்..! ரூ 2.67 லட்சம் மானியம் பெறுவது எப்படி? |
நாம் இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் எவ்வளவு லாபம் பெறலாம்?
உதாரணத்திற்க்கு தாங்கள் இந்த திட்டத்தில் (Post Office PPF Scheme in Tamil) மாதம், மாதம் 1,000/- ரூபாயினை 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் தங்களுடைய முதலீடு தொகை ரூ.1,80,000/- இருக்கும். இந்த 1.80 லட்சத்திற்கு தற்பொழுது உள்ள வட்டி விகிதம் 7.1% என்றால் தங்களுடைய முதலீட்டிற்கு ரூ.1,45,455/- வட்டியாக கிடைக்கும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |