RDO அதிகாரியின் பணிகள் மற்றும் அதிகாரங்கள்..! RDO Officer Powers in Tamil..!
நண்பர்களுக்கு வணக்கம் இன்று நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் வருவாய்க் கோட்ட என்றால் என்ன?, இதன் கீழ் இயங்குகின்ற அதிகாரிகள் யார்?, என்னென்ன பணிகள் நடைபெறும். வருவாய்க்கோட்டத்தினை யாருடைய தலைமையின் கீழ் நடத்தப்படுகிறது. என்பது குறித்த தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம். ஒரு பட்டாவை வழங்கும் உரிமை வட்டாட்சியருக்கு இருக்கிறது, ஆனால் ஒரு பட்டாவை ரத்து செய்வதற்கு மற்றும் திருத்தம் செய்வதற்கு யாருக்கு அதிகம் இருக்கிறது என்றால் வருவாய் கோட்டாட்சியர் அவர்களுக்கு தான் முழு உரிமைகளும் உள்ளது.
RDO Meaning in Tamil | RDO Full Form in Tamil Tamilnadu
- RDO Full Form = Revenue Divisional Officer
- RDO Full Form in Tamil = வருவாய் கோட்ட அலுவலர்
கோட்டாட்சியர் என்றால் என்ன:
இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் நியமிக்கப்பட்டால் சார் ஆட்சியர் (Sub Collector) என்றும், பதவி உயர்வு வழியாக நியமிக்கப்பட்டால் வருவாய்க் கோட்டாட்சியர் (Revenue Divisional Officer) என்றும் அழைக்கப்படுகிறார்.
வருவாய்க் கோட்ட அதிகாரி:
இந்திய மாவட்டங்களில் வருவாய்த்துறையில் சில வட்டங்களை உள்ளடக்கி வருவாய் கோட்டம் (REVENUE DIVISION) அல்லது வருவாய்த்துறைக் கோட்டம் அமைக்கப்படுகின்றன. இவற்றின் தலைமை அதிகாரிகளாக சார் ஆட்சியர் அல்லது துணை ஆட்சியர் பதவியில் உள்ளவர்களை வருவாய் கோட்டாட்சியர் பணியிடத்தில் நியமிக்கப்படுகிறார்கள். இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் நியமிக்கப்பட்டால் சார் ஆட்சியர் (Sub Collector) என்றும், பதவி உயர்வு வழியாக நியமிக்கப்பட்டால் வருவாய்க் கோட்டாட்சியர் (Revenue Divisional Officer) என்றும் அழைக்கப்படுகிறார்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஊராட்சிமன்ற தலைவருக்கு மாதம் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
வருவாய் கோட்டாட்சியரின் கடமைகளும், பொறுப்புகளும்:
வட்டாட்சியர் நிலைக்கு மேல் இருக்கும் அதிகாரிகளிடம் கையொப்பம் பெற வேண்டிய சில சான்றிதழ்களுக்கு கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோரின் பரிந்துரைகளின்படி கோட்ட வளர்ச்சி அலுவலர் (அ) துணை ஆட்சியாளர் நிலையில் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
மாவட்டத்தில் வருவாய்க் கோட்ட அளவில் நடைபெற்ற ஏதாவது சம்பவத்தால் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள் பாதிக்கப்படும் நிலையில் அதை விசாரிக்க கோட்ட வளர்ச்சி அலுவலர் (அ) துணை ஆட்சியாளர்கள்தான் நியமிக்கப்படுகிறார்கள்.
மாவட்ட ஆட்சியாளர் அறிவுறுத்தும் அனைத்துப் பணிகளும் இவ்வலுவகம் வாயிலாக இந்த அலுவலகத்தின் கீழுள்ள வருவாய்த்துறை அலுவலகங்களின் மூலம் செய்யப்படுகிறது.
இதன் தொடர்புடைய பதிவுகளை தெரிந்துகொள்ள கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள் 👇👇 |
அங்கன்வாடி ஆசிரியர் சம்பளம் |
அரசு பேருந்து ஓட்டுநர் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? |
சத்துணவு பணியாளர் சம்பளம் எவ்வளவு..! |
பேரூராட்சி பணியாளர்களின் சம்பளம் பட்டியல்கள்…! |
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Salary and Promotion Details in Tamil |