இடி இடிக்கும் போது ஏன் மூத்தப் பிள்ளை வெளியே செல்லக் கூடாது
அன்பு உள்ளம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். நம் முன்னோர்கள் பல அற்புதமான விஷயங்களை நமக்கு கூறிவிட்டு சென்றிருக்கிறார்கள். அவர்கள் சொன்ன ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னாலும் ஒரு காரணம் மறைந்திருக்கிறது.
அதுபோல இடி இடிக்கும் போது வீட்டின் மூத்தப்பிள்ளை வெளியே செல்ல கூடாது என்று சொல்வார்கள். அதை நாம் கேட்டிருப்போம். இந்த கால கட்டத்தில் கூட சில பகுதிகளில் இந்த வார்த்தையை சொல்வார்கள். அப்படி சொல்வதற்கு காரணம் என்ன என்று உங்களுக்கு தெரியுமா..? வாங்க நண்பர்களே இந்த பதிவின் மூலம் அதற்கான காரணத்தை தெரிந்து கொள்வோம்..!
இடி இடிக்கும் போது ஏன் “அர்ஜுனா” என்று சொல்கிறோம் காரணம் தெரியுமா..? |
இடி, மின்னல் வரும்போது நம்மை பாதுகாத்துக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்? |
ஏன் இடி இடிக்கும் போது மூத்தப் பிள்ளை வெளியே செல்லக் கூடாது..?
மழை என்றாலே நம் அனைவருக்கும் பிடிக்கும். அதுவே மழையுடன் இடி வந்தால் யாருக்கு பிடிக்கும். இடி என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயப்படுவார்கள்.
திடீரென்று வரும் இடி சத்தத்தை கேட்டால் பெரியவர்கள் கூட அச்சம் அடைவார்கள். இடி எப்படி இடிக்கும் என்று நம் அனைவருக்குமே தெரியும்.
அந்த காலத்தில் இடி இடிக்கும் போது மூத்த பிள்ளை வெளியே செல்ல கூடாது என்று கூறினார்கள். ஏன் அப்படி கூறினார்கள் என்ற கேள்வி அனைவரிடத்திலும் இருக்கும்.
அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வமாக இருப்பீர்கள். அந்த காரணத்தை தெரிந்து கொள்வோம் வாங்க.
அந்த காலத்தில் இடி இடிக்கும் போது “தழைத்த பிள்ளையை வெளியே அனுப்பாதே” என்று தான் சொல்வார்கள். இது தான் சரியான வார்த்தை.
தழைத்த பிள்ளை என்பது ஓடி ஆடி விளையாடும் சிறிய குழந்தைகளை குறிக்கிறது. ஓடியாடி விளையாடும் பருவத்தில் இருக்கும் குழந்தை இடி இடிக்கும் போது செய்வது அறியாமல் வெளியே செல்லும். இடி இடிக்கும் போது குறும்பு செய்யும் குழந்தையை பெற்றோர்கள் வெளியே விட கூடாது என்பதற்காக “தழைத்த பிள்ளையை வெளியே அனுப்பாதே” என்று சொன்னார்கள்.இந்த ‘தழைத்த’ என்ற சொல் பேச்சு வழக்கில் ‘தலைச்ச’ என்று மாறி இப்படி ஒரு வார்த்தை உருவாகி விட்டது. இந்த தலைச்ச என்ற சொல் ‘மூத்த’ என்பதை குறிக்கிறது. அதனால் தான் இப்படி ஒரு வார்த்தையை சொல்கிறோம்.
இடிக்கு மூத்த பிள்ளை, இளைய பிள்ளை என்று தெரியுமா என்ன..? ஆனால் உண்மையில் இடி இடிக்கும் போது யாரும் வெளியில் செல்ல கூடாது.
இதையும் பாருங்கள் –> மழைப் பெய்யும் போது மண்வாசம் வர காரணம் என்ன..?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |