சேர் மார்க்கெட்டில் எந்த மாதிரி எல்லாம் பணம் சம்பாதிக்கிறார்கள் தெரியுமா?

Advertisement

சேர் மார்கெட்டில் மக்கள் சம்பாதிக்கும் வகைகள் | Share Market in Tamil Details

Share Market in Tamil Details – ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம் சேர் மார்க்கெட்டில் எந்த மாதிரி எல்லாம் பணம் சம்பாதிக்கலாம் என்று இன்றைய பதிவில் படித்து தெரிந்து கொள்வோம். இந்த பதிவு சேர் மார்க்கெட் பற்றி தெரியாதவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க சேர் மார்க்கெட்டில் எப்படி எல்லாம் பணம் சம்பாதிக்கலாம் என்று பார்க்கலாம். உங்களிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது. அது 10000 ரூபாயாக இருக்கலாம் அல்லது 1 லட்சம் ரூபாயாக கூட இருக்கலாம். நீங்கள் சேர் மார்க்கெட் வழியாக உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கலாம் என்று நினைக்கிறீர்கள் என்றால். உங்களை போன்றே சேர் மார்க்கெட்டில் நான்கு விதமான மக்கள் இருக்கின்றன. அதில் நீங்கள் எந்த வகையை சேர்த்தவர், உங்களுக்கு எந்த வகை ட்ரேட் ஒற்று வரும் என்பதை பற்றியும், அதனுடன் Margin, Leverage போன்ற வார்த்தைகளுக்கான அர்த்தம் என்ன என்பதை பற்றியும் தெரிந்து கொள்வோம்.

Stocks:

ஒருவரிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது, அந்த பணம் கொஞ்சம் நாளுக்கு செலவு செய்ய தேவைப்படாது என்கிறபோது, அந்த பணத்தை ஷேர் மார்க்கெட்டில் நல்ல ஸ்டாக்கை (Stocks) தேர்வு செய்து Fundamental Analysis செய்து நல்ல விலைக்கு வாங்குகிறார்கள். அதனை 10 வருடம் அல்லது 15 வருடம் நீண்ட வருடத்திற்கு பிறகு விற்பனை செய்கிறார்கள். அவர்களை இன்வெஸ்டர் என்று சொல்வார்கள்..

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மியூச்சுவல் ஃபண்ட் தகவல்கள்

ஒரு உதாரணம்:

2002-யில் MRF Share 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது, அப்பொழுது உங்களுடன் 80000 பணம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதனை 200 (200×400-80000) Sher-ஆக வாங்குகிறீர்கள். 20 வருடம் கழித்து 2020-ஆம் ஆண்டு இந்த MRI Sher-யின் மதிப்பு எவ்வளவு என்றால் 95,000/- ரூபாய் ஆகும். அப்பொழுது 80,000/- ரூபாய்க்கு வாங்கிய 200 Sher-யின் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்றால் 95,000×200=1,90,00,000 ஆகும். அதாவது ஒருகோடியே தொண்ணூறு லட்சம் ஆகும். இவற்றை விட அதிக லாபம் தந்த கம்பெனிகளும் இருக்கிறது.இப்படித்தான் இன்வெஸ்டர் பணம் சம்பாதிப்பார்கள்.

பொதுவாக இவர்கள் இன்வெஸ்ட் செய்ய இருக்கும் கம்பெனியின் முழு விவரங்களை அறிந்துகொண்ட பிறகு தான் பணத்தை இன்வெஸ்ட் செய்வார்கள். குறிப்பாக Technical-ஐ விட Fundamental-க்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

இந்த Technical மற்றும் Fundamental ஆகிய இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்றால். ஒரு ஸ்டாக் நல்ல ஸ்டாக்கா, நன்கு வளருமா, நல்ல லாபத்தை தரக்கூடிய ஸ்டாக்கா போன்ற தகவல்களை Fundamental தரும்,

ஒரு ஸ்டாக்கை எப்பொழுது வாங்க வேண்டும்?, எங்கு வாங்க வேண்டும், எப்போது விற்பனை செய்ய வேண்டும் போன்ற தகவல்களை Technical தரும்.

நீங்கள் இன்வெஸ்டராக இருக்க வேண்டும் என்றால், உங்களிடம் கொஞ்சம் பணமும், பொறுமை மிகவும் முக்கியமாக இருக்க வேண்டும். நீங்கள் முதலீடு செய்த முதல் வருடங்களில் சில இழப்பு ஏற்படலாம், நீங்கள் வாங்கிய ஸ்டாக் நல்ல ஸ்டாக் என்றால் நீங்கள் வாங்கிய சில வருடங்களுக்கு பிறகு நல்ல லாபத்தை கொடுக்கும். இவரில் ரிஸ்க் இருக்கும், வருமானம் நன்றாக இருக்கும்.

இதையும் கிளிக் செய்யுங்கள் 👇
ஷேர் மார்க்கெட் என்றால் என்ன?

Nifty 50 Index:

உங்களுக்கு ரிஸ்க் கம்மியாக இருக்க வேண்டும் என்றால், நீங்கள் Nifty 50 Index-யில் இன்வெஸ்ட் செய்யலாம். இந்தியாவில் Nifty சராசரியாக 14% கூட்டு வட்டிக்கான வருமானத்தை தருகிறது. ஆக உங்களுக்கு குறைந்த அளவில் ரிஸ்க், அதில அளவு வருமானம் வேண்டும் இவற்றை தேர்வு செய்யலாம்.

Swing Trader:

குறிப்பிட்ட சில ஸ்டாக்கை மட்டும் நல்ல Fundamental Analysis செய்து நோட் செய்து வைத்துக்கொள்வார்கள், அது எப்போது மேல் உயர போகிறது என்பது Technical Analysis மூலம் என்றி (Entry) எடுப்பதற்காக காத்திருந்து, ட்ரேட்டு எடுப்பார்கள். அவர்கள் வாங்கிய ஸ்டாக்கை ஒரு வாரத்தில் இருந்து அதிகபட்சம் 3 மாதம் அல்லது 4 மாதத்தில் எப்பொழுது நல்ல லாபம் வருகிறதோ அப்போது விற்பனை செய்துவிட்டு வெல்ல வந்துவிடுவார்கள், ஒரு ஸ்டாக்கை வாங்கிவிட்டு, அதுலேயே நீண்ட வருடம் காத்திருக்க மாட்டார்கள், லாபம் பார்த்த பின் வேறொரு ஸ்டாக்கில் வாய்ப்பு வருகிறதா என்று காத்திருப்பார்கள். Swing Trading செய்யும்போது ஓரளவு லாபம் வரும், ரிஸ்கும் கம்மியாக இருக்கும்.

Intra Day Trader:

இன்று ஒரு Trade எடுக்கிறார்கள் என்றால் அது லாபமோ, நஷ்டமோ அன்றுக்குள் அந்த ட்ரெடை முடித்தாகவேண்டும். அதிக Traders இருப்பது இந்த Intra Day Trade-யில் தான். இந்த Intra Day Trade-யில் மார்க்கெட் மேலே சென்றாலும் லாபம் பார்க்கலாம், மார்க்கெட் கீழே இறங்கினாலும் லாபம் பார்க்கலாம். இவற்றில் Fundamental Analysis-ஐ விட Technical Analysis தான் மிக மிக முக்கியம். இவற்றில் ரிஸ்க் அதிகம்.

Scalpers:

இதுவும் Intra Day Trade போன்றது தான், ஒரு ட்ரேட் எடுத்தால் அதனை மூன்று செகண்ட் முதல் 15 நிமிடத்திற்குள் தான் அவர்கள் காத்திருப்பார்கள். 15 நிமிடத்திற்குள் அந்த Trade-ஐ முடித்துவிடுவார்கள். அதிக நேரம் காத்திருக்க மாட்டார்கள். இவர்கள் முழுக்க முழுக்க Technical Analysis-ஐ தான் பார்ப்பார்கள். Scalpers சிறிய அளவில் தான் டார்கெட் வைத்திருப்பார்கள். அதாவது 5 ரூபாய், 10 ரூபாய் என்று தான் டார்கெட் வைப்பார்கள். அதற்கு ஏற்றதுபோல் Quantity-ஐ அதிகரித்துக்கொள்வார்கள். உதாரணத்திற்கு 2000 Sher-ஐ எடுத்து அதற்கு 5 ரூபாய் லாபம் வந்ததும் அதனை விற்றுவிடுவார்கள். அதாவது 2000×5=10,000. 15 நிமிடத்தில் 10,000/- லாபம் பெற்றுவிடுவார்கள். Scalpers-ஐ பொறுத்தவரை எந்த அளவிற்கு லாபம் வருகிறதோ, அதே அளவிற்கு நஷடமும் ஏற்படும். Trade -ஐ  பற்றி நன்றாக கற்று கொண்டு இதனை செய்தால் நல்ல லாபம் பெற முடியும்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement