The Secret Behind National Symbols in Tamil
அன்பு உள்ளம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்… இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். நம் இந்திய நாட்டில் எத்தனையோ தேசிய சின்னங்கள் இருக்கின்றன. அதாவது புலி, மயில், மாம்பழம், தாமரை போன்றவை தேசிய சின்னங்களாக இருக்கின்றன. அதுபோல, ஏன் இவற்றை எல்லாம் தேசிய சின்னங்களாக தேர்தெடுத்தார்கள் என்று உங்களுக்கு தெரியுமா..? அந்த வகையில் இந்த பதிவின் மூலம் அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
இந்திய தேசிய சின்னங்கள் | National Symbols in Tamil |
தேசிய சின்னங்களுக்கு பின் இருக்கும் காரணம் என்ன..?
புலி ஏன் தேசிய விலங்காக இருக்கிறது..?
புலியின் அழகான தோற்றமும் அதன் வலிமையும் அதேபோல அதன் உறுமல் சத்தம் இவை அனைத்தையும் வைத்து தான் புலியை இந்தியாவின் தேசிய விலங்காக தேர்ந்தெடுத்தார்கள்.
அதுமட்டுமில்லாமல், இதன் எண்ணிக்கை இந்தியாவில் குறைவாக இருப்பதால் இதை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் புலிகள் இந்தியாவின் தேசிய விலங்காக தேர்ந்தெடுக்கப்பட்டன.
ஏன் மயில் தேசிய பறவையாக இருக்கிறது..?
நம் இந்திய நாடு மாறுபட்ட மற்றும் வெவ்வேறு கலாச்சாரங்கள் அதேபோல பல வண்ணங்கள் நிறைந்த நாடு என்று சொல்லலாம். அதுபோல மயில் பல வண்ணங்களை கொண்ட அழகான மற்றும் வசீகரமான பறவை ஆகும்.
பறவைகளில் மயில் கம்பீரமான பறவை என்று சொல்லப்படுகிறது. இது தெளிவான வண்ணங்களின் ஒற்றுமையைக் குறிக்கின்றது. அதுமட்டுமில்லாமல், மயில் இந்திய துணைக்கண்டத்தின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது.
இதன் காரணமாக தான் மயில் இந்தியாவின் தேசிய பறவை என்று சொல்லப்படுகிறது.
மாம்பழம் ஏன் தேசிய பழமாக இருக்கிறது..?
முக்கனியில் முதல் கனி மாம்பழம். இது நம் இந்திய நாட்டின் தேசிய பழமாக கருதப்படுகிறது. மாம்பழம் பெரும்பாலும் இந்தியாவில் தான் அதிகளவில் விளைகிறது.
மேலும், மாம்பழம் தோன்றிய இடம் இந்தியா என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல், இது பழங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. இதனால் தான் மாம்பழம் இந்தியாவின் தேசிய பழம் என்று அழைக்கப்படுகிறது.
ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படம் வருவதற்கு காரணம் என்ன தெரியுமா .? |
ஏன் ஆலமரம் தேசிய மரமாக இருக்கிறது..?
ஆலமரம் பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. ஆலமரம் “கல்ப விருக்ஷா” அல்லது விரும்பங்களை பூர்த்தி செய்யும் மரம் என்று கூறப்படுகிறது. ஆலமரம் பல காலமாக உயிரினங்களின் வாழ்விடமாக இருக்கிறது.
அதுபோல ஆலமரத்தின் கிளைகளை விழுதுகள் தாங்கி நிற்பதால் இதனை நாட்டின் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இதனால் தான் ஆலமரம் தேசிய மரமாக இருக்கிறது.
தாமரை ஏன் தேசிய மலராக இருக்கிறது..?
தாமரை நீர்வாழ் மூலிகை என்று கூறப்படுகிறது. இந்த தாமரை மலர் சமஸ்கிருதத்தில் “பத்மா” என்று அழைக்கப்படுகிறது. இந்திய கலாச்சாரத்தில் புனிதமான மலர் என்ற பெருமையை தாமரை மலர் பெற்றுள்ளது.
தாமரை மலரை ஆன்மீகத்துடனும் தூய்மையுடனும் தொடர்புபடுத்துவதால் இது தேசிய மலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஏன் கங்கை நதி தேசிய நதி இருக்கிறது..?
இந்தியாவின் தேசிய நதி கங்கை என்று சொல்லப்படுகிறது. கங்கை நதியை ஒரு ரகசிய நதி என்று சொல்லலாம். புண்ணிய நதிகளில் கங்கை நதி முதலிடத்தை பிடித்துள்ளது. இது இந்து மதத்தின் தெய்வ நதியாக பார்க்கப்படுகிறது.
மேலும், கங்கை நதி இந்திய வரலாற்றில் பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த நதியாக இருக்கிறது. இதன் காரணமாக தான் இது தேசிய நதியாக கருதப்படுகிறது.
இந்திய தேசிய நூலகம் அமைந்துள்ள இடம் |
இந்தியாவின் தேசிய மரம் எது? |
இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |