சந்திர கிரகணத்தின் போது மறந்தும் இதை செய்யாதீர்கள்..!

Things not to do on Lunar Eclipse in tamil

சந்திர கிரகணம் அன்று செய்ய கூடாதவை

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் அனைவருக்கும் பயனுள்ள தகவலை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம்..! பொதுவாக சூரிய கிரகணம் சந்திர கிரகணம் என்பது வருடத்திற்கு 3 முறை அல்லது நான்கு முறை நிலவும். அந்த நேரத்தில் பெரியவர்கள் சில விஷயங்களை செய்ய கூடாது என்று சொல்வார்கள், அது கர்ப்பமாக இருப்பவர்கள் மட்டுமே தான் நினைத்தோம் ஆனால் அவர்கள் சொல்வது அனைத்துமே நமக்கும் என்பது தான் உண்மை..!

சந்திர கிரகணத்தின் போது சில விஷயங்கள் செய்ய கூடாது அது என்ன என்பதை இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்வோம் வாங்க..!

சந்திர கிரகணம் அன்று செய்ய கூடாதவை:

சந்திர கிரகணம் இந்தியாவில் பார்க்க முடியும் என்று சொல்லப்படுகிறது. அதேபோல் சந்திர கிரகணத்தை பார்க்க எந்த கருவியும் கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திர கிரகத்தின் போது கிரகணத்தை மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், உடல் ஊனமுற்றோர் பார்க்க கூடாது.

சந்திர கிரகணத்தின் போது 2 மணி நேரத்திற்கு முன்பே எந்த உணவையும் உட்கொள்ள கூடாது, அதாவது சந்திர கிரகணம் ஆரம்பிக்கும் முன்பிலிருந்து எந்த உணவையும் சாப்பிட கூடாது.

முக்கியமாக சூரியகிரகணத்தில் அருகம்புல்லை உணவுகளில் போட்டு சாப்பிடுவோம். ஆனால் சந்திர கிரகணத்தில் உணவுகளில் புல்லை போட்டு வைக்க கூடாது.

இந்த கேள்வி அனைவருக்கும் இருக்கும் கர்ப்பிணி பெண்கள் சந்திர கிரகணத்தில் வெளியே செல்லலாமா என்று? கண்டிப்பாக வெளியே செல்லக்கூடாது. எந்த கிரகணத்தின் போதும் கர்ப்பிணி பெண்கள் வெளியே செல்லக்கூடாது.

கோவில்களுக்கு செல்லக்கூடாது சாமியை தரிசனம் செய்யகூடாது, அதேபோல் கோவில்கள் திறந்து இருக்கக்கூடாது.

கிரகணம் முடிந்த பிறகு குளித்துவிட்டு ஆலயத்திற்கு சென்று சாமியை வழிபாடு செய்யலாம்.

கிரகணம் முடிந்த பிறகு நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது. கோவில்களுக்கு சென்று வந்த பிறகு சாப்பாடு சாப்பிடுவது நல்லது.

கோவில்களுக்கு சென்ற பின் சில நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அர்ச்சனை செய்து வந்தால் நல்லது. முக்கியமாக  அஸ்தம், ரோகிணி, உத்திரம், உத்திராடம், அவிட்டம், பூராடம், திருவோணம்  நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்வது நல்லது என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.

சந்திர கிரகணம் முடிந்த பின் இந்த ராசிக்காரர்கள் பரிகாரணம் செய்துகொள்ளலாம், கும்பம், ரிஷபம், சிம்மன், கன்னி, மகரம் இந்த ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ளலாம்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள்👉👉  நவம்பர் 8 தேதி காணப்படும் சந்திர கிரகணத்தை எத்தனை மணிக்கு பார்க்க வேண்டும் தெரியுமா..?

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்