விவேகானந்தர் பொன்மொழிகள் தமிழில் | Vivekananda Ponmozhigal
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சுவாமி விவேகானந்தர் அவர்களின் பொன்மொழிகளை தொகுத்து பின்வருமாறு கொடுத்துள்ளோம். சுவாமி விவேகானந்தர் அவர்கள் பல தத்துவங்களை நமக்கு கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல், நம்மை ஊக்குவிக்கும் பொன்மொழிகளை அதிகமாக கூறியிருக்கிறார். அதனை பற்றி பின்வருமாறு படித்து தெரிந்துகொள்ளலாம்.
சுவாமி விவேகானந்தர் இந்தியாவில் பிறந்த மிகப்பெரிய மகான். இன்று இந்தியாவில் நிலவும், மதம், ஜாதி, பாகுபாடு உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு அன்றே தனது தத்துவங்கள் மூலம் பதில் சொல்லியவர் சுவாமி விவேகானந்தர் தான். இந்தியா விடுதலைக்கு பாடுபட்ட தலைவர்களுள் இவரும் ஒருவர். விவேகானந்தர் எழுதிய பொன்மொழிகளை நாங்கள் இந்த பதிவில் படங்கள் (Images) மூலம் பதிவு செய்துள்ளோம். அவற்றில் பிடித்ததை டவுன்லோடு செய்து பயன் பெறுங்கள். சரி வாங்க சுவாமி விவேகானந்தர் எழுதிய பொன்மொழிகளை ஒவ்வொன்றாக படிக்கலாம்.
விவேகானந்தர் பொன்மொழிகள் – Vivekananda Quotes in Tamil:
பொய் சொல்லித் தப்பிக்காதே.. உண்மையைச் சொல்லி மாட்டிக்கொள்.. பொய் வாழ விடாது.. உண்மை சாக விடாது..
- எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.
- உண்மையானவர்களும், அன்புடையவர்களும் யாருக்கும் அஞ்சத் தேவையில்லை
- உடல் மற்றும் மனதிற்கு துரோகம் செய்யும் எந்தச் செயல்களையும் அணுகாதே.
- உனக்கு தேவைப்படும் சக்தியும் உதவியும் அனைத்தும் உன்னுள் உண்டு.
- தன்னலம் இல்லாமல், அன்பு நிறைந்தவர்களே இன்றைய உலகிற்கு மிகவும் அவசியமானவர்கள்.
- பொறாமையை மனதிலிருந்து நீக்கினால், இதுவரை சாதிக்காத மகத்தான காரியங்களைச் சாதிக்க முடியும்.
- அடிமைத்தனத்தின் அடையாளமாகிய பொறாமையை முற்றிலும் அழிக்க வேண்டும்.
விவேகானந்தர் தன்னம்பிக்கை கவிதை:

இதயம் சொல்வதைச் செய் வெற்றியோ.. தோல்வியோ.. அதைத் தாங்கும் சக்தி அதற்கு மட்டும் தான் உண்டு..
விவேகானந்தர் பொன்மொழிகள் தமிழில்:

உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம்.
| சிறந்த தமிழ் வாழ்க்கை தத்துவம் |
| சேகுவேரா தத்துவம் |
Vivekananda Ponmozhigal in Tamil:
- சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.
- நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்; உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! (ஆனால் முயற்சி தேவை)
- நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு
- சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்.
- பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.
விவேகானந்தர் வாழ்க்கை தத்துவங்கள்:

உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது.
Vivekananda Quotes in Tamil:-

உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.
| அப்துல் கலாம் பொன்மொழிகள் தமிழ்..! |
விவேகானந்தர் பொன்மொழிகள் தமிழில்:
- நூலகம் உருவாகும் போது ஆயிரக்கணக்கான சிறைச்சாலைகளுக்கு பூட்டிடப்படுகிறது.
- உங்கள் மனசே சுத்தமாக வைத்திருக்க வேண்டிய தண்ணீர்தொட்டி.
- பிறரின் பாதையில் செல்லாமல், உன் சொந்த பாதையை தேடு
- அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.
- உன்னை நீயே பலவீனன் என்று எண்ணுவது மிகப் பெரிய குற்றமாகும்.
- சுயநலமின்றி செயல்படுவதே கடவுள், சுயநலத்தோடு செயல்படுவதே சாத்தான்; இதைவிட வேறுபாடில்லை.
| இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |










