வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

என்ன படிப்பு படித்தால் வெளிநாட்டில் வேலை கிடைக்கும் என்று உங்களுக்கு தெரியுமா..?

Updated On: March 17, 2023 9:56 AM
Follow Us:
What Course Can You Get A Job Abroad in Tamil
---Advertisement---
Advertisement

What Course Can You Get A Job Abroad

ஹலோ நண்பர்களே..! பொதுநலம் வாசகர்கள் அனைவருக்கும் இன்றைய பதிவு பயனுள்ள பதிவாக இருக்கும். அப்படி என்ன தகவலாக இருக்கும் என்று நினைப்பீர்கள். யோசித்து கொண்டே இந்த பதிவை படிக்க தொடங்குங்கள். நாம் இன்று வெளிநாட்டில் வேலை கிடைக்க வேண்டும் என்றால் நாம் என்ன படித்திருக்க வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவில் காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.

சிங்கப்பூர் செல்வதற்கு முன்னாடி இதை தெரிந்து கொள்ளுங்கள்

What Course Can You Get A Job Abroad in Tamil: 

What Course Can You Get A Job Abroad

பொதுவாக பலருக்கும் இங்கு படித்து விட்டு வெளிநாட்டில் நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். சிலருக்கு அது கனவாக கூட இருக்கும். ஆனால் நாம் படிக்கும் படிப்பை பொறுத்து தான் வெளிநாட்டில் நமக்கு வேலை கிடைக்கும். அது என்ன படிப்பு என்றும் அது படிப்புக்கு அங்கு என்ன வேலை கிடைக்கும் என்றும் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

Engineering:

பொதுவாக நம் நாட்டில் Engineering படித்தால் வேலை கிடைக்காது என்று சொல்லி கொண்டிருக்கின்றோம். ஆனால் வெளிநாட்டில் இந்த படிப்பு படித்தவர்களுக்கு தான் டிமாண்ட் அதிகமாக உள்ளது. வெளிநாட்டில் Engineering படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

சில பிரபலமான பொறியியல் படிப்புகளில் Civil Engineering, Mechanical Engineering, Environmental Engineering மற்றும் Aerospace Engineering போன்ற படிப்புகளுக்கு வெளிநாட்டில் அதிக சம்பளத்திற்கு வேலைகள் இருக்கிறது.

Business Administration:

வெளிநாட்டில் தேவைப்படும் படிப்புகளில் வணிக நிர்வாகமும் ஒன்று. வெளிநாட்டில் Business Ethics, Business Communication, Accounting, Applied Statistics, Finance, Entrepreneurship மற்றும் Business Law போன்ற வணிகம் சார்ந்த படிப்புகளுக்கு பல வேலை வாய்ப்புகள் இருக்கின்றன.

சிங்கப்பூரில் நம் தமிழ் நாட்டு உணவுகளின் விலை பட்டியல் பற்றி உங்களுக்கு தெரியுமா

Law – சட்டம்:

வெளிநாட்டில் மிகவும் பிரபலமான படிப்புகளில் சட்டபடிப்பும் ஒன்றாகும். நீங்கள் ஒரு வழக்கறிஞர் ஆகவேண்டும் என்று நினைத்தால் வெளிநாட்டில் உங்களுக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

வெளிநாட்டில் மனித உரிமைச் சட்டம், காப்பீட்டுச் சட்டம், கடல்சார் சட்டம், வர்த்தகச் சட்டம், வங்கிச் சட்டம், ஊடகம் மற்றும் பொழுதுபோக்குச் சட்டம், ராணுவச் சட்டம் மற்றும் பலவற்றில் உங்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

Medicine: 

இந்த படிப்பு பற்றி சொல்லவே வேண்டாம். இந்த படிப்புக்கு தான் வெளிநாட்டில் டிமாண்ட் அதிகமாக உள்ளது. காரணம் மருத்துவத்தில் பட்டம் என்பது முடிவில்லாத ஒன்றாக உள்ளது. அதனால் Medicine பற்றிய படிப்பினால் வெளிநாட்டில் உங்களுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கும்.

சிங்கப்பூரில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள்

Information Technology: 

நீங்கள் IT படித்து பட்டம் பெற்றிருந்தால் உங்களுக்கு வெளிநாடுகளில் இருக்கும் பெரிய நிறுவனங்களில் இருந்து வேலைகள் கிடைக்கும். மேலும் நீங்கள் Computer Network Architect, Computer Security Specialist, Network Security Administrator மற்றும் பல படிப்புகளுக்கு வெளிநாட்டில் பல வேலைகள் இருக்கிறது.

Accounting:

நீங்கள் ஒரு ஆடிட்டர் அல்லது கணக்காளர் வேலை நிலையைப் பாதுகாக்க விரும்பினால் கணக்கியல் பட்டம் உங்களுக்குத் தேவைப்படும். இந்த படிப்புக்கு வெளிநாட்டில் வேலைகள் பல இருக்கின்றன.

Architecture: 

வெளிநாட்டில் பல கட்டிடக்கலை ஆர்வமுள்ள நகரங்கள் இருப்பதால் நீங்கள் இந்த படிப்பை படிக்கலாம். இந்த படிப்புகள் வெளிநாட்டில் நல்ல வேலைகள் இருக்கின்றன.

வெளிநாட்டில் தேவைப்படும் படிப்புகளில் ஒன்றான கட்டிடக்கலையை நீங்கள் எடுக்கும் போது, ​​உங்களின் தொழில்நுட்பத் திறன்களையும் வடிவமைப்பு அறிவையும் ஒருங்கிணைத்து உலகில் உங்கள் முத்திரையைப் பதிப்பது எப்படி என்பதை நீங்கள்  கற்றுக்கொள்வீர்கள்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now