Why Is This Symbol In Indian Coins
பொதுநலம் வாசகர்களுக்கு ஒரு பயனுள்ள தகவலை கூறப்போகிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி. வாசகர்களாகிய நீங்களும் இந்த பதிவை படித்து முடிக்கும் போது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டோம் என்ற மனத்திருப்தி உங்களுக்கு இருக்கும். அப்படி என்ன தகவலாக இருக்கும் என்று யோசித்து கொண்டிருப்பீர்கள் அல்லவா..! அதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்த பதிவை படிக்க தொடங்கவும். நண்பர்களே நாம் இன்று இந்திய நாணயத்தில் இருக்கும் குறியீட்டிற்கு காரணம் என்ன என்பதை பற்றி தான் காணப்போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளவும்.
இந்திய ரூபாய் நோட்டுகளில் இந்த குறியீடு ஏன் இருக்கிறது தெரியுமா |
இந்திய நாணயத்தில் இந்த குறியீடு ஏன் இருக்கிறது..?
பொதுவாக நாம் இன்றும் கூட 1 ரூபாய் நாணயம், 2 ரூபாய் நாணயம் மற்றும் 5 ரூபாய் நாணயம் போன்ற இந்திய நாணயங்களை தான் பயன்படுத்தி வருகின்றோம். அப்படி நாம் ரூபாய் நாணயங்களை பயன்படுத்தும் போது அந்த நாணயத்தை உற்று கவனித்திருக்கிறீர்களா..?
அதில் சில பூக்கள், சிங்கம் போன்ற சில சின்னம் இருக்கும். அதை விட அந்த நாணயத்தின் கீழ் சிறிய அளவில் சில குறியீடுகள் இருக்கும். அதற்கு என்ன காரணம் என்று என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா..!
பொதுவாக நாம் பயன்படுத்தும் இந்திய ரூபாய் நாணயங்கள் அனைத்தும் மும்பை, நொய்டா, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் போன்ற ஊர்களில் தான் இந்த ரூபாய் நாணயங்கள் தயாரிக்கிறார்கள்.
இந்திய ரூபாய் நோட்டுகள் எந்த தாளில் அச்சிடப்படுகிறது உங்களுக்கு தெரியுமா |
அப்படி நாம் பயன்படுத்தும் இந்திய நாணயங்களின் கீழ் வட்டம், சதுரம் போன்ற சில குறியீடுகள் இருக்கும். அதுபோல ஒவ்வொரு நாணயத்திலும் ஒவ்வொரு குறியீடுகள் இருக்கும். இந்த குறியீடுகள் அந்த நாணயம் எந்த நாட்டில் அச்சிடப்படுகின்றன என்பதை குறிப்பதற்காக தான் இதுபோன்ற குறியீடுகள் இருக்கின்றன.
நீங்கள் இந்த பதிவை படித்து கொண்டிருக்கும் போது உங்களிடம் ஏதாவது நாணயம் இருந்தால் அதை உடனே கையில் எடுத்து பார்ப்பீர்கள் அல்லவா..!
அப்படி நீங்கள் நாணயத்தை எடுத்து பார்க்கும் போது அதில் புள்ளி போன்ற குறியீடு இருந்தால் அந்த நாணயம் டெல்லியில் செய்யப்பட்ட நாணயம் என்று தெரிந்து கொள்ளலாம். அதுவே அந்த நாணயத்தில் டைமண்ட் குறியீடு இருந்தால் அது மும்பையில் செய்யப்பட்ட நாணயம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.நாணயத்தின் குறியீடு | செய்யப்பட்ட இடம் |
புள்ளி போன்ற குறியீடு | டெல்லி அல்லது நொய்டா |
நட்சத்திரம் போன்ற குறியீடு | ஹைதராபாத் |
டைமண்ட் குறியீடு | மும்பை |
எந்த குறியீடும் இல்லையென்றால் | கொல்கத்தா |
மொய் பணம் வைக்கும் போது ஏன் 101, 201, 501 என்று வைக்கிறார்கள் காரணம் தெரியுமா..? |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |