On Which Paper Are Currency Notes Printed
நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். உயிர் வாழ்வதற்கு எது முக்கியம் என்று உங்களிடம் கேட்டால் நீங்கள் உணவு, நீர் மற்றும் காற்று என்று சொல்வீர்கள். ஆனால் நாம் வாழும் இந்த அவசர உலகில் வாழ்வதற்கு எது முக்கியம் என்று கேட்டால் பணம் தான் என்று சொல்வார்கள். இன்றைய நிலையில் பணம் தான் முக்கியமானதாக இருக்கிறது. அப்படி நாம் பயன்படுத்தும் பணம் எந்த தாளில் செய்யப்பட்டது என்று உங்களுக்கு தெரியுமா..? அதை இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
மொய் பணம் வைக்கும் போது ஏன் 101, 201, 501 என்று வைக்கிறார்கள் காரணம் தெரியுமா..? |
ரூபாய் நோட்டுகள் எந்த தாளில் அச்சிடப்படுகிறது..?
இன்றைய நிலையில் பணம் இருந்தால் தான் இந்த உலகில் நம்மால் வாழவே முடியும். இன்னும் சொல்லபோனால் உணவு மற்றும் நீரை கூட நாம் காசு கொடுத்து வாங்குகிறோம். அந்த அளவிற்கு பணம் தான் எல்லாம் என்றாகி விட்டது. சரி இது அனைவருக்கும் தெரிந்த ஓன்று தான்.
சரி நாம் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகள் எந்த தாளில் அச்சிடப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா..? இந்த கேள்வி நம்மில் பலருக்கும் இருக்கும். அந்த கேள்விக்கான பதிலை இங்கு பார்ப்போம்.
லைசென்ஸ் வாங்கும் போது ஏன் 8 போட சொல்கிறார்கள்..? காரணம் தெரியுமா..? |
நாம் அனைவருமே ரூபாய் நோட்டுகள் காகிதத்தில் தான் அச்சிடப்படுகிறது என்று நினைத்து கொண்டிருக்கின்றோம். ஆனால் அது உண்மை கிடையாது. காகிதம் நீடித்திருக்கும் தன்மை கொண்டது கிடையாது. காகிதத்தில் செய்தால் அது விரைவாகவே கிழிந்துவிடும்.
அதனால் ரூபாய் நோட்டுகள் காட்டன் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. காகிதத்தை காட்டிலும் காட்டன் வலுவாக இருக்கும். அது எளிதில் கிழியாது. இந்த காரணத்தால் தான் இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் ரூபாய் நோட்டுகள் (கரன்சி) தயாரிக்க காட்டன் பயன்படுத்தப்படுகிறது.மேலும் ரிசர்வ் வங்கி நூறு சதவீதம் காட்டன் கொண்டு தான் ரூபாய் நோட்டுகள் தயாரிக்கப்படுவதாக கூறுகிறது.
ரூபாய் நோட்டுகள் தயாரிக்கும் போது காட்டன் இழைகளுடன் லினென் இழைகள் மற்றும் ஜெலட்டின் பிசின் சேர்க்கப்படுகிறது. இதனால் ரூபாய் நோட்டுகள் நீண்ட நாட்கள் நீடித்திருக்கும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |