அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்..?

Advertisement

அட்சய திருதியை தினத்தில் ஏன் தங்கம் வாங்க வேண்டும்?

நாளை அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்பது அனைவரது நம்பிக்கையாகும், பவுர்ணமி அல்லது அமாவாசைக்கு பிறகு வரும் திதி திருதியை.

சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை. சயம் என்றால் தேய்தல் என்று பொருள். அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்த்தல் என்று பொருள்.

சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை நாளே அட்சயதிருதியை எனப்படுகிறது. எல்லா நலன்களையும் குறைவிலாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை நன்னாளை அட்சயதிருதியை என அழைத்துப் போற்றிக் கொண்டாடினர்.

அதனால் தான் மிக விலையுயர்ந்ததாகக் கருதப்படும் தங்கத்தை அன்று மக்கள் வாங்குகின்றனர்.

இதையும் படிக்கவும்  பெண்கள் வெள்ளி நகை அணிவதால் இத்தனை நன்மைகளா..!

 

சரி இந்த அட்சய திருதியை நாளில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!

அட்சய திருதியை நன்னாளில் என்ன செய்ய வேண்டும்..!

அட்சய திருதியை (akshaya tritiya benefits) நாளில் காலை எழுத்து நீராடிவிட்டு, பூஜை அறையில் கோலமிட்டு  அதன் மேல் ஒரு மரபலகையை வைத்து அதன் மேல் ஒரு வாழையிலையை வைத்து, இலையின் நடுவில் கொஞ்சம் பச்சரிசியை பரப்பிவிடவும், பின்பு அதன் மேல் ஒரு செம்பில் நீர் நிரப்பி மாவிலை, மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து கலசமாக்குங்கள்.

அந்த கலசத்தின் அருகில் ஒரு படி, ஆழாக்கு அல்லது ஒரு டம்ளரில் நெல் நிறைத்து வையுங்கள். அதேபோல் கலசத்திற்கு பொட்டு, பூ வையுங்கள். லட்சுமி நாராயணர் படம் இருந்தால் அதனையும் வைத்து அலங்கரியுங்கள். பின்னர் குத்துவிளக்கினை ஏற்றி வையுங்கள். மஞ்சள் பிள்ளையார் பிடித்து வாழையிலையில் வலப்பக்கமாக வையுங்கள்.

நீங்கள் புதிதாக வாங்கிய பொருளை கலசத்தின் முன்பாக வையுங்கள். விலை உயர்ந்த பொருளாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அட்சய திருதியை (akshaya tritiya benefits) நாளில் எல்லோராலும் வாங்க முடிந்த பொருளான உப்பை வாங்கி வைத்தாலே போதும்.

அஷ்டலட்சுமி கடாட்சம் உங்கள் வீடு தேடி வந்துவிடும். முதலில் விநாயகரை வேண்டிக் கொள்ளுங்கள். பின்னர் கலசத்தில் மகாலட்சுமியை எழுந்தருளும்படி பிராத்தியுங்கள்.

உங்களுக்குத் தெரிந்த விஷ்ணுலட்சுமி, சிவன்பார்வதி, குபேரன், துதிகளைச் சொல்லுங்கள். அல்லது கேளுங்கள். குசேலரின் கதையைப் படிப்பது, கேட்பது, சொல்வதும் சிறந்தது.

பின்னர் அவரவர் வழக்கப்படி தூப, தீப ஆராதனைகள் செய்யுங்கள். இந்த பூஜையில் பாயசம் அல்லது சர்க்கரை கலந்த பால் நைவேத்தியம்  சிறப்பானது. அன்றைய தினம் மாலையில் சிவாலயம், பெருமாள் கோயில் என்று உங்களால் இயன்ற தலத்திற்குச் சென்று தரிசியுங்கள்.

அதன் பின்னர் மீண்டும் தூப, தீப ஆராதனையை கலசத்துக்குச் செய்துவிட்டு, கலசத்தினை வடக்குப் பக்கமாக நகர்த்தி வையுங்கள்.

உண்ணாவிரதம் இருப்பது, எளிய திரவ ஆகாரம் மட்டும் உண்பது எல்லாம் அவரவர் வசதி, உடல்நலத்தைப் பொறுத்தது. கலசத்தினை நகர்த்துவது விரதத்தினை நிறைவு செய்துவிட்டதாக அர்த்தம்.

பயன்படுத்திய அரிசி, கலசத் தேங்காய், மற்ற பொருட்களை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிக்கவும்  தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் அணிவதால் பயன்கள்

அட்சய திருதியை அன்று எதுவும் வாங்கலாம்!

அட்சய திருதியை (akshaya tritiya benefits) அன்று தங்கம் மட்டுமே வாங்க வேண்டும் என்றும், தங்கம் வாங்கினால் மட்டுமே தங்கம் பெருகும் என்பதில்லை. அன்றைய தினம் என்ன வாங்கினாலும் மென்மேலும் பெருகும் என்பதுதான் ஐதீகம்.

சித்திரை மாதத்தின் வளர்பிறையில் வரும் திருதியை நாளே அட்சய திருதியை என்று சொல்லப்படுகிறது. சயம் என்றால் எடுக்க எடுக்க குறையாதது என்று பொருள்.

எல்லா விதமான நலன்களையும் குறைவிலாது அள்ளி அள்ளிக் கொடுக்கும் இந்த நன்னாளை அட்சய திருதியை (akshaya tritiya benefits) என்று அழைக்கின்றோம்.

அட்சய திருதியை அன்று அன்னதானம் செய்வது மிகவும் சிறந்தது..!

அன்னதானம் செய்யுங்கள்!

அட்சயதிரிதியை நாளில் தானம் செய்வது சிறந்தது. ஏழைகளுக்கு அன்னதானம் அளித்தால் செல்வவளம் பெருகும். பழவகைகளை அளித்தால் உயர்பதவி கிடைக்கும். வெயில் வெம்மை தீர குடை, விசிறி, காலணி வழங்கினால் இன்பவாழ்வு உண்டாகும்.

ஆடை தானம் செய்ய ஆரோக்கியம் கூடும். தாகம் தணிக்க தண்ணீர், மோர் வழங்கினால் கல்வி வளர்ச்சி பெருகும்.

தயிர் தானம் அளித்தால் பாவ விமோசனம் உண்டாகும். தானியங்களை வழங்கிட விபத்து, அகாலமரணம் நேராது. அன்று, பசுவிற்கு உணவளித்தால் சகல பாவமும் நீங்கி நல்வாழ்வு உண்டாகும்.

 தானம்:

அட்சயதிருதியை (akshaya tritiya benefits) அன்று தானம், தர்மம் செய்வதால் மிகவும் புண்ணியம் கிட்டும், மேலும் அன்று பொன், பொருள், நிலம் வாங்க மிகவும் உகந்த நாளாகும்.

தானம் தர்மம் அட்சய திருதியை (akshaya tritiya benefits) அன்று காலையில் துவரம் பருப்பு, மொச்சை, அரிசி ஆகிய தானியங்கள், சிவப்பு புடவை, வெள்ளை வேஷ்டி ஆகிய துணிகள் ஆகியவற்றை ஆதரவற்றோர், ஏழை விவசாயிகள், நடைபாதை வாசிகளுக்கு தானம் செய்வது மிகவும் பலன் தரும்.

கோபூஜை:

அன்று காலை பசுவிற்கு கோதுமை தவிடு அல்லது அரிசி தவிடு, வெல்லம், வாழைப்பழம் கலந்து தானம் செய்வதால் லக்ஷ்மி அருள் கிடைக்கும்.

இதையும் படிக்கவும்  பித்தளை பாத்திரம் பளபளக்க – Best Trick To Clean Bronze

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement