ஸ்டீராய்டு மாத்திரைகள் பக்க விளைவுகள்

Steroid Side Effects in Tamil

ஸ்டீராய்டு மாத்திரைகள் பக்க விளைவுகள் | Steroid Side Effects in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது என்ன என்றால் ஸ்டீராய்டு மாத்திரை என்றால் என்ன?, ஸ்டீராய்டு மாத்திரை எடுத்து கொள்வதினால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்பதை பற்றி இந்த பதிவின் வாயிலாக நாம் படித்தறியலாம் வாங்க.

குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..

ஸ்டீராய்டு என்றால் என்ன?

ஸ்டீராய்டு என்பது நமது உடலில் சுரக்கக்கூடிய ஒரு ஹார்மோன் ஆகும். இந்த ஸ்டீராய்டு சில நேரங்களில் நமது உடலில் குறைவாக சுரக்கும், சில நேரங்களில் அதிகமாக சுரக்கும். நமது உடலின் தேவையை விட அதிகமாக அல்லது குறைவாக இந்த ஹார்மோன் சுரக்கும் போது. மாத்திரைகளின் உதவியுடன் இந்த பிரச்சனையை சரி செய்கின்றன. அதற்கு பெயர் தான் ஸ்டீராய்டு மாத்திரை ஆகும்.

இந்த ஸ்டீராய்டு மாத்திரை நோயை குணப்படுத்தும் மாத்திரையே கிடையாது. நோயை மறைக்கும் மருந்தாகும். அப்பறம் ஏன் மாத்திரையாக தருகிறார்கள் என்று நீங்கள் கேட்கலாம். அதை பற்றி அறிவோம் வாங்க.

எந்த நோயிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது?

அலோபதி மருத்துவத்தில் ஸ்டீராய்டு மருந்துகளின் கண்டுபிடிப்பு ஒரு முக்கியமான திருப்புமுனை. அலர்ஜி, ஆஸ்துமா, மூட்டு வலி பாதிப்புள்ளவர்களுக்கும், பல நரம்புப் பிரச்சனைகளுக்கும், விபத்தில் அடிபட்டவர்களுக்கும், தன்தடுப்பாற்றல் நோயுள்ளவர்களுக்கும் இந்த மாத்திரை நிவாரணம் அளிக்கிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அசித்ரோமைசின் மாத்திரை பயன்கள்

வகைகள்:

ஸ்டீராய்டு மருந்துகளில் பல வகை உண்டு. ஊசி, மாத்திரை, களிம்பு, இன்-ஹேலர், ஸ்பிரே மருந்து, திரவ மருந்து என இதன் பயன்பாட்டிலும் வித்தியாசம் உண்டு.

பக்க விளைவுகள் – Steroid Tablets Side Effects in Tamil:

இந்த ஸ்டீராய்டு மருந்துகளில் பக்க விளைவு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அதேநேரம் ஒருவர் எந்த மருந்தைப் பயன்படுத்துகிறார், எந்த அளவில், எவ்வளவு காலம் எடுத்துக்கொள்கிறார் என்பதைப் பொறுத்துதான் பக்க விளைவு ஏற்படுவதும், ஏற்படாததும் இருக்கிறது.

பெரும்பாலும் வாய்வழி உட்கொள்ளப்படும் ஸ்டீராய்டு மாத்திரைகளால் தான் பக்க விளைவு ஏற்படும். இந்த மருந்துகளை எந்த அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும், எத்தனை நாட்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு முறை இருக்கிறது. அந்த விஷயம் டாக்டர்களுக்கு மட்டும் தான் தெரியும். எனவே, மருத்துவர் பரிந்துரைப்படி ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக்கொள்வதாக இருந்தால், எந்தப் பக்க விளைவும் ஏற்படாது.

ஆனால், சிலர் தங்களுடைய பிரச்சனைகளுக்குத் அவர்களாகவே ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். உதாரணத்துக்கு, ஆஸ்துமாவுக்கும் மூட்டு வலிக்கும் ‘செட்’ மாத்திரை என்ற பெயரில் ஸ்டீராய்டு கலந்த மாத்திரைகளை மருந்துக் கடைகளில் டாக்டரின் பரிந்துரை இல்லாமலேயே வாங்கி உட்கொள்கிறார்கள். இது போன்ற செயல்கள் தான் மிகவும் ஆபத்தானது. எந்த ஒரு அவசரத்திலும் டாக்டரின் பரிந்துரை இல்லாமல் இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக் கூடாது.

பக்க விளைவுகளை தவிர்ப்பது எப்படி?

பொதுவாக, ஸ்டீராய்டு மாத்திரைகளைக் குறைந்த அளவில், குறைந்த நாட்களுக்கு எடுத்துக்கொண்டால் பக்க விளைவு ஏற்படுவதில்லை. இன்னொன்று, அதிக அளவில் இந்த மாத்திரைகளை  எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருந்தால், அந்த அதிக அளவைச் சிறிது சிறிதாகக் குறைத்துக்கொண்டே வந்து, ஒரு கட்டத்தில் நிறுத்திவிட்டாலும் பக்க விளைவு உண்டாவதில்லை. இவற்றைத் தொடர்ந்து உட்கொள்ளும்போது தான் பக்க விளைவு ஏற்பட வாய்ப்புண்டு.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ராணிடிடைன் மாத்திரை பயன்கள்

ஆஸ்துமா உள்ளவர்களுக்கு ஸ்டீராய்டு கலந்த மாத்திரைகளுக்கு மாற்றாக, ஸ்டீராய்டு இன்ஹேலர், மூக்கில் அலர்ஜி உள்ளவர்களுக்கு மூக்கில் உறிஞ்சக்கூடிய ஸ்டீராய்டு ஸ்பிரே போன்ற மருந்துகளைப் பயன்படுத்தலாம். இவற்றைத் தொடர்ந்து பயன் படுத்தினாலும் பக்கவிளைவு ஏற்படுவதில்லை.

இது போன்ற மருந்து சார்ந்த பதிவுகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉மருந்து