மாதவிடாய் பிரச்சனைகள் அனைத்திற்கும் ஒரே தீர்வு இது மட்டும் தான்..!

Yoga To Get Periods Properly in Tamil

வணக்கம் பிரண்ட்ஸ்..! இன்றைய பதிவில் ஒரு பயனுள்ள தகவலை தான் உங்களுக்கு கூறப்போகிறேன். பொதுவாக பெண்களுக்கு இருக்கும் பிரச்சனை என்றால் அது மாதவிடாய் தான். ஒழுங்கற்ற மாதவிடாயால் பல பெண்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இதற்கு காரணம் நாம் உண்ணும் உணவு முறை தான். நாம் சத்தான உணவுகளை உண்ணாமல் இருப்பதும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அதுபோல மாதவிடாய் சரியாக வராமல் இருந்தால் உடனே மருத்துவர் பரிந்துரை செய்யும் மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவோம். ஆனால் இந்த பிரச்சனையை யோகா மூலம் சரி செய்யலாம். அது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!

கருப்பை இறக்கம் வராமல் தடுக்க யோகாசனம்

மாதவிடாய் சரியாக வர யோகா

தனுராசனம்: 

மாதவிடாய் சரியாக வர யோகா

 • முதலில் விரிப்பில் குப்புறப் படுத்துக்கொள்ள வேண்டும்.
 • அடுத்து இரு கைகளையும் உடலோடு ஒட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
 • அதன் பின் இரு கைகளையும் பின்புறமாக கொண்டு சென்று இருக்கால்களையும் பிடித்துக் கொள்ளவும்.
 • இப்பொழுது மூச்சை இழுத்து மெதுவாக விட வேண்டும். பின் மூச்சை விட்டவாறு தலை, கழுத்து, மார்பு ஆகியவைகளை மேலே தூக்க வேண்டும். வயிற்றுப் பகுதி மட்டும் தரையில் இருக்க வேண்டும். இது தான் தனுராசனம் செய்யும் முறை ஆகும்.

பயன்கள்:

 1. வயிற்றுக் கோளாறுகளை போக்கும்
 2. தொந்தி முற்றிலுமாக குறையும்
 3. கை, கால்கள் வளர்ச்சி காணும்
 4. உடல் உறுதி பெறும்
 5. உடல் அழகை கூட்டும்
 6. முகம் வசீகரம் பெறும்
 7. அதுபோல மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி, ஒழுங்கற்ற மாதவிடாய் போன்ற பிரச்சனைகளை சரி செய்யும்.
பக்கவாதம் வராமல் இருக்க இந்த யோகாசனத்தை செய்யுங்கள்

மச்சாசனம்:

மாதவிடாய் சரியாக வர யோகா

 • முதலில் தலைவிரிப்பில் அமர்ந்து பத்மாசனம் போல் உட்கார வேண்டும்.
 • உங்கள் முழங்கால்கள் தரையில் படுமாறு இருக்கவேண்டும்.
 • முழங்கைகளைக் கொண்டு மெதுவாக பின்னால் சாயவேண்டும்.
 • பின் அப்படியே உங்கள் முதுகு கீழே படும்படி படுக்கவேண்டும்.
 • சுவாசத்தை வெளிவிட்டுக் கொண்டே கைகளின் உதவியால் முதுகை மேலே தூக்கி தலையைப் பின்புறமாக வளைத்து தரைவிரிப்பில் நிற்கச் செய்ய வேண்டும்.
 • பின் இரு கைகளாலும் இருகால் பெருவிரல்களையும் பிடித்துக் கொள்ளவும்.
 • மூச்சை இழுத்து விட வேண்டும்.

பயன்கள்:

இதுபோல தினமும் செய்து வந்தால் மாதவிடாய் பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். மேலும்,

 1. நரம்பு வீரியம் பெறும்.
 2. ஓட்டத்தை அதிகரிக்கும்.
 3. உற்சாகம் பெருகும்.
 4. கால்கள் வலுப் பெறும்.
 5. முதுகு வலுப் பெறும்.
ஞாபக சக்தியை அதிகரிக்க யோகாசனம்

 

இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 யோகா