மூலிகை குளியல் பொடி தயாரிக்கும் முறை..!

Advertisement

பல வகை மூலிகை குளியல் பொடி தயாரிப்பு தொழில் முழு விவரம் (Herbal Bath Powder Making)..!

குளியல் பொடி தயாரிப்பு தொழில் – அழகை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது, அதுவும் அழகான முகத்தை பெற இன்றைக்கு பலவிதமான ரசாயன கலவைகளை முகத்தில் பூசுகின்றனர். இதற்காக பலர் அழகு நிலையத்திற்கு செல்கின்றனர். இதை வசதியாக வைத்துக் கொண்டு பலர் பணம் பறிக்க அழகு சாதனப் பொருட்களை உற்பத்தி செய்து சந்தையில் அதிக விலையில் விற்பனை செய்கின்றனர். உண்மையில் இதை வாங்கி பயன்படுத்தும் யாருக்கும் முழுமையான பயன் கிடைப்பதில்லை.

இதற்கு மாறாக பயன்படுத்தியவரின் முகத்தை கெடுத்துக் கொண்டதுதான் அதிகம். முகத்தையும், சருமத்தையும் பாதுகாக்க இயற்கை மூலிகைகள் நம்மிடம் நிறைந்து கிடக்கின்றது. இதை பயன்படுத்தி நீங்களே முக அழகை பெறலாம். அது மட்டும் இல்லாமல் இதை நீங்களே வீட்டில் இருந்து (Herbal Bath Powder Making) தயார் செய்து விற்பனை செய்தால் அதிக லாபமும் பெறலாம்.

உதாரணத்திற்கு நம் வீட்டில் இருந்தே குளியல் பொடி(Herbal Bath Powder Making) தயார் செய்து விற்பனை செய்தால் நல்ல இலாபத்தை பார்க்க முடியும்…

சிறுதொழில் குளியல் சோப் இனி நமே தயாரிக்கலாம் ?

மூலிகை குளியல் பொடி தயாரிப்பது எப்படி (Herbal Bath Powder Making) என்று பார்ப்போம்:-

இயற்கை குளியல் பொடி செய்முறை (Bath Powder) செய்ய தேவையான பொருட்கள்:

 1. உலர்ந்த மகிழம் பூ பொடி –200 கிராம்.
 2. கிச்சிலி கிழங்கு பொடி –100 கிராம்.
 3. கஸ்தூரி மஞ்சள் பொடி –100 கிராம்.
 4. கோரை கிழங்கு பொடி –100 கிராம்.
 5. உலர்ந்த சந்தன தூள் –150 கிராம்.

தயாரிப்பு தொழில் – குளியல் பொடி தயாரிக்கும் முறை (Herbal Bath Powder Making): 1

இயற்கை குளியல் பொடி செய்முறை ஸ்டேப்: 1

மேல் கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். அதன் பிறகு காரம் இல்லாத அம்மியில் சுத்தமான பன்னீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.

இயற்கை குளியல் பொடி செய்முறை ஸ்டேப்: 2

பின்பு அரைத்த கலவையை சிறிது வில்லைகளாக தட்டி நிழலில் நன்றாக உலர்த்தி வைத்துக் கொள்ளவும்.

இயற்கை குளியல் பொடி செய்முறை ஸ்டேப்: 3

பின்பு தினமும் குளிப்பதற்கு முன் அரை மணி நேரத்திற்கு முன் பாலில் குழைத்து முகத்தில் பூசிக்கொண்டு அரை மணி நேரம் கழித்து பிறகு குளிர்ந்த தண்ணீரில் கழுவி விட வேண்டும்.

இயற்கை குளியல் பொடி செய்முறை ஸ்டேப்: 4

இதை பயன்படுத்திய பிறகு முகத்தில் அரை மணி நேரம் வரை சோப்பு போட கூடாது. இவ்வாறு தினமும் செய்து வந்தால் முகம் பளபள வென்று அழகாக இருக்கும்.

இயற்கை குளியல் பொடி செய்முறை ஸ்டேப்: 5

Bath powder ஒரு பாக்கேட்டுக்கு 20g என்ற அளவில் ரூ.70/- என்ற அளவில் விற்பனை செய்தால் அதிகம் லாபம் பெறலாம்.

சுயதொழில் இன்று மெழுகுவர்த்தி தயாரிப்பு..! தினமும் வருமானம்

தயாரிப்பு தொழில் – குளியல் பொடி தயாரிப்பது எப்படி(Herbal Bath Powder Making)?

குளியல் பொடி தயாரிப்பது எப்படி(Bath Powder Making)

குளியல் பொடி (Bath Powder) செய்ய தேவையான பொருட்கள்:

 1. சோம்பு –100 கிராம்
 2. கஸ்தூரி மஞ்சள் –100 கிராம்
 3. வெட்டி வேர் –200 கிராம்
 4. அகில் கட்டை –200 கிராம்
 5. சந்தனம் தூள் –300 கிராம்
 6. கார்போக அரிசி –200 கிராம்
 7. தும்மராஷ்டம் –200 கிராம்
 8. விலாமிச்சை –200 கிராம்
 9. கோரைக் கிழங்கு –200 கிராம்.
 10. கோஷ்டம் –200 கிராம்
 11. ஏலரிசி –200 கிராம்
 12. பாசிபருப்பு –500 கிராம்
புதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..!

குளியல் பொடி தயாரிக்கும் முறை (Herbal Bath Powder Making): 2

இயற்கை குளியல் பொடி செய்முறை ஸ்டேப்: 1

இவை அனைத்தையும் தனிதனியாக காயவைத்து கொள்ளுங்கள், அதன் பிறகு தனிதனியாக அரைத்த பின்பு ஒன்றாக கரைத்துக் கொள்ளுங்கள்.

இயற்கை குளியல் பொடி செய்முறை ஸ்டேப்: 2

தினமும் குளிக்கும்போது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக குழைத்து சோப்புக்கு பதிலாக பயன்படுத்தி வந்தால் சரும நோய்கள் அனைத்தும் குணமாகும்.

இயற்கை குளியல் பொடி செய்முறை ஸ்டேப்: 3

அதுமட்டும் இல்லாமல் ஒரு பாக்கேட்டுக்கு 100 கிராம் என்று, ஒரு பாக்கேட் ரூ.80/- என்று சந்தையில் விற்பனை செய்யலாம். விற்பனை மூலம் அதிக லாபமும் பெறலாம்.

இயற்கை குளியல் பொடி செய்முறை ஸ்டேப்: 4

இந்த குளியல் பொடி (Herbal Bath Powder Making) இயற்கையான முறையில் தயார் செய்வதால் அனைவரும் வாங்கி மிகவும் விரும்பி பயன்படுத்துவார்கள்.

இது சிறு தொழில் என்றாலும் அதிக லாபத்தை தரக்கூடய ஒரு சிறந்த தொழிலாக விளங்குகிறது.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில்  போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தொழில் பட்டியல் 2021  
Advertisement