டுப்ளிகேட் சாவி தயாரிப்பு தொழில் : Duplicate Key Making Business in Tamil
இன்று வளர்ந்து வரும் நகர சூழலில் துணை சாவி எனப்படும், டுப்ளிகேட் சாவி அதிக தேவை உள்ளது.
ஏன் என்றால் ஒரே அறையில் 5-துக்கும் மேற்பட்ட நபர்கள் தங்கும் சூழல் உள்ளதாலும், மேலும் அவர்கள் வேலைக்கு சென்று வரும் நேரமும் மாறுபடுவதால், அவர்கள் அறைக்கு வந்து போகும் நேரமும் மாறுபடுகிறது.
இதன் காரணமாக அனைவருக்கும் ஒவ்வொரு சாவி தேவைப்படுவதாலும், புதிய பூட்டு வாங்கும் போது 3 சாவிகள் மட்டுமே தரப்படும்.
எனவே அதிக சாவி தேவையெனில் டுப்ளிகேட் சாவி தான் செய்ய வேண்டும்.
மேலும் சாவிகள் தொலைந்து போவதால், முன்னதாகவே டுப்ளிகேட் சாவி தயாரித்து வைத்து கொள்ளுதல், போன்ற காரணங்களால் டுப்ளிகேட் சாவி தயாரிப்பு நல்ல இலாபம் தரும் ஓரு தொழிலாக வளர்ந்து வருகிறது.
இதையும் படிக்கவும்![]() |
புதிதாக என்ன தொழில் செய்யலாம்சிறந்த சிறு தொழில் பட்டியல் 2019 |
சரி வாங்க இந்த பகுதியில் டுப்ளிகேட் சாவி தயாரிப்பு தொழில் பற்றி படித்தறிவோம் வாங்க..!
யாருக்கு ஏற்றது இந்த தயாரிப்பு தொழில் :
முன்னதாக எதாவது ஓரு கடை வைத்து உள்ளவர்கள், இதை ஓரு துணை தொழிலாக செய்தால் மிக நன்று.
புதிதாக, தனியாக பெரு நகரங்களில் செய்ய ஏற்றது. ஆனால், உங்களுக்கு எல்லா வகையான சாவிகளும் செய்ய தெரிந்து இருக்க வேண்டும். மேலும் மகளிர்க்கு ஏற்ற தொழில்களில் இதுவும் ஒன்று.
முதலீடு:
வாகனகளுக்கு மட்டும் டுப்ளிகேட் சாவி செய்யும் எந்திரம் ரூபாய் 25,000 மற்றும் இதர செலவிற்கு 5,000 வரை தேவைப்படும்.
அனைத்து வகையான டுப்ளிகேட் சாவிகளும் செய்ய மொத்த முதலீடு ரூபாய் 60,000 வரை தேவை. இடம் என்று பார்த்தல் 5*5 சதுர அடிகள் போதும்.
இலாபம்:
இந்த தொழிலில் நாள் ஒன்றுக்கு ரூபாய் 2,00 முதல், உங்களுக்கு தொழிலில் உள்ள ஈடுபாட்டை பொருத்து ரூபாய் 2,000 வரை எளிதாக வருமானம் பெற முடியும்.
ஏன்னெனில் ஒரு சாவி தயாரிக்க செலவு ரூபாய் 10 மட்டுமே.
ஆனால் நாம் வாங்குவது 60 முதல் 150 வரை. மேலும் இந்த தொழிலில் போட்டி குறைவு என்பதால் ஓர் சிறிய ஊரில் கூட தினமும், குறைந்தது ரூபாய் 500 என்பது எளிதாக வருமானம் பார்க்கலாம்.
குறிப்பு:
இந்த தயாரிப்பு தொழில் பொறுத்தவரை உங்களிடம் சாவி கேட்டு வரும் நபர்களிடம், அவர்களின் முகவரி சான்று நகல் வாங்கி வைத்துகொள்வது நன்று. ஏன்னெனில், போலீஸ் சமந்தமாக ஏதாவது விசாரணை வந்தால் உதவும்.
இதையும் படிக்கவும்![]() |
கைதொழில் – பைக் சீட் கவர் தயாரிப்பு தொழில் !!! |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |