பிரஷர் குக்கர் தயாரிப்பு தொழில் முழு விவரங்கள்..!

Advertisement

பிரஷர் குக்கர் தயாரிப்பு தொழில் முழு விவரங்கள்…

இப்போதெல்லாம் பிரஷர் குக்கர் இல்லாத வீடே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு பிரஷர் குக்கரை அனைவரது வீட்டிலும் பயன்படுத்துகின்றோம். எனவே நல்ல பொருளாதார வசதி உள்ளவர்கள், நடைமுறை மூலதனம் அதிகம் போடக்கூடிய தகுதி உள்ளவர்கள், பெரிய அளவில் விளம்பரம் செய்யும் எண்ணம் உடையவர்கள் இத்தொழிலை சிறப்பாக செய்யலாம்.

குறிப்பாக பல இடங்களில் பாத்திரக்கடை வைத்திருப்பவர்கள் இந்த சுயதொழில் துவங்கினால் நல்ல இலாபம் பார்க்க முடியும். குக்கரில் நேரம், எரிபொருள் செலவு குறைகிறது. எனவே 3, 5, 10 லிட்டர் கொள்ளளவுகளில் தயாராகி வருகிறது. 3 லிட்டர் அதிக அளவில் தயாரித்தால் விற்பனை அதிகமாகும்.

சரி வாங்க இந்த பிரஷர் குக்கர் தயாரிப்பு தொழில் பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க.

சுயதொழில் இன்று மெழுகுவர்த்தி தயாரிப்பு..! தினமும் வருமானம்

தேவைப்படும் இயந்திரங்களும் அதன் விலைகளும்:

இயந்திரங்கள்  அதன் விலைகள் 
1) கில்லட்டின் ஷீயரிங் மிஷின் 1 ரூ.2,00,000/-
2) சர்க்கிள் கட்டிங் மிஷின் 1 ரூ.50,000/-
3) பிகிள் பிரஸ் (மோட்டாருடன்) 1 ரூ.6,00,000/-
4) ஹைடிராலிக் பிரஸ் (50 டன்) 1 ரூ.2,50,000/-
5) பவர் பிரஸ் (50 டன்) 1 ரூ.2,00,000/-
6) லேத் மிஷின் (மோட்டாருடன்) 1 ரூ.1,40,000/-
7) டிரில்லிங் மிஷின் 1 ரூ.10,000/-
8) பப்பிங், பாலிஷிங் மிஷின் 2 ரூ.30,000/-
9) பெஞ்ச் கிரைண்டர் 2 ரூ.20,000/-
மொத்தம்: ரூ.15,00,000/-

 

வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஏற்ற சுயதொழில்..!

பிரஷர் குக்கர் தயாரிப்பு தொழில் விவரம்:

8 மணி நேரத்தில் 100 குக்கர்கள் வரை தயாரிக்கலாம். வாரம் 600 முதல் 1000 வரை தேவையை பொறுத்து தயாரிக்கலாம்.

தேவையான மூலப்பொருட்கள், அலுமினிய அலாய் தகடுகள், ப்ரெஸ்ஸர் ரெகுலேட்டர், பேக்லைட் ஹண்ட்ஸ், கேஸ்கட், பிளக்ஸ், ஸ்க்ரூக்கள் போன்ற பல பொருட்கள், அட்டைப் பெட்டிகள் சென்னை மற்றும் முக்கிய தொழில் நகரங்களில் கிடைக்கிறது. இவற்றை தயாரிப்பது என்பது எளிது. பெரிய தொழில்நுட்பம் தேவையில்லை.

முதலில் தகடுகளை வட்ட வடிவில் வெட்டி, தொடர்ந்து இதர பாகத்தை தயாரித்து துளையிட்டு அசெம்பிள் செய்து பின்னர் பேக்கிங் செய்வார்கள்.

தயாரிப்பு தொழில் – முதலீடு:

1) கட்டிடம் (3000 ச.அடி மாத வாடகை ரூ.15000) அட்வான்ஸ் – ரூ.1,00,000/-
2) இயந்திரங்கள் – ரூ.15,00,000/-
3) இயந்திரங்கள் நிறுவுதல், பரிசோதனை கருவிகள், நடைமுறை மூலதனம் – ரூ.4,00,000/-

மொத்த முதலீடு – ரூ.20 லட்சம்.
முயற்சியாளர் மூலதனம் – ரூ.6,00,000/-
காலவரை கடன் (வங்கி) – ரூ.14,00,000/-
மொத்தம் – ரூ.20,00,000/-
இதில் இயந்திர விலையில் 25% இலவச மானியம் பெறலாம்.

பணியாளர்கள்:

  1. நிர்வாகி – 1
  2. மேற்பார்வையாளர் – 1
  3. வேலையாட்கள் – 3
  4. உதவியாளர்கள் – 4
  5. பேக்கிங் – 1
    ஆக 10 பேருக்கு வேலை தரலாம்.

தயாரிப்பு தொழில் – லாபம்

வருடம் ரூ.5.5 முதல் ரூ.7.5 லட்சம் வரை லாபம் பெறலாம்.

மாதம் Rs.50000 to Rs. 1 Lakh தரக்கூடிய மிக சிறந்த 3 தொழில்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில்  போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தொழில் பட்டியல் 2019  
Advertisement