டிஜிட்டல் பிளக்ஸ் பிரிண்டிங் பிசினஸ் சுயதொழில் ..!

சுயதொழில்

டிஜிட்டல் பிளக்ஸ் பிரிண்டிங் பிசினஸ் சுயதொழில்..!

நீங்கள் புதிய தொழில் துவங்க ஆர்வம் உள்ளவரா..?
என்ன தொழில் செய்யலாம் என சிந்தித்து கொண்டிருப்பவரா..?
உங்களுக்கு ஓர் நற்செய்தி…

புதிதாக அதாவது சுயமாக தொழில் துவங்க நினைக்கும் நண்பர்களுக்கு ஒரு புதிய தொழில் பற்றிய முழு விவரங்களையும் இந்த பகுதியில் சொல்லியுள்ளோம். அது என்ன புதிய தொழில் என்று நினைப்பீர்களே… அதாவது டிஜிட்டல் பிளக்ஸ் பிரிண்டிங் பிசினெஸ் இந்த தொழில் பற்றி தான் இப்போ நாம் இந்த பகுதியில் தெரிந்து கொள்வோம் வாங்க..!

சிறுதொழில் – டி ஷர்ட் பிரிண்டிங் தொழில் நல்ல வருமானம்..!

டிஜிட்டல் பிளக்ஸ் பிரிண்டிங் பிசினஸ் :

இன்றைய காலக் கட்டத்தில் விளம்பரம் என்பது வியாபாரத்திற்கு மிகவும் அத்தியாவசியமானது. இதில் நோட்டீஸ் அடித்து கொடுப்பது எளிய விளம்பர முறையாகும்..

மேலும் அனைத்து வகையான விழாக்களுக்கும் அழைப்பிதழ் என்பது இன்றியமையாதது.

இக்கால கட்டத்தில் டிஜிட்டல் பிரிண்டிங் ஒரு சிறந்த தொழிலாகும். இந்த தொழில் மிக குறைந்த இயந்திர முதலீட்டில் உருவாகும்.

குறைந்த அளவு முதல் அதிக அளவு வரை அச்சிட்டு வழங்கலாம் கலர் ஜெராக்ஸ் எடுக்கலாம்.

அதாவது வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து அவர்களது விருப்பத்துக்கு ஏற்ப பிரிண்டிங் செய்து கொடுக்கலாம்.

சிறப்பம்சங்கள் :-

திருமணம், காதணி விழா, கோவில் திருவிழாக்கள், அரசியல் நிகழ்ச்சிகள், கடை விளம்பரங்கள் போன்ற அனைத்து விதமான நிகழ்சிகளுக்கும் பத்திரிக்கைகள் அடிக்க பயன்படுத்தபடுகிறது. பல வண்ணங்களில் மிக எளிதாக அச்சிட முடியும்.

உடனடியாக பல வண்ணங்களில் நொடி பொழிதில் அச்சிட முடியும்.
கணினியில் இருந்து உடனடியாக அச்சிட முடியும்.

பத்திரிக்கைகள், விசிட்டிங் கார்ட்ஸ் போன்றவற்றிற்கு ஆர்டர் கொடுத்த உடன் உடனடியாக தயாரித்து கொடுக்க முடியும்.

இன்றைய நடைமுறை வாழ்கைக்கு மிகவும் தேவையான நல்ல லாபம் தரும் தொழில்.

அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.

இந்த சுயதொழில் துவங்க அரசு  மானியம்  25% முதல் 35% வழங்குறாங்க.

புதிதாக சுயதொழில் துவங்கவேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த டிஜிட்டல் பிளக்ஸ் பிரிண்டிங் பிசினஸ் செய்யலாம். குறைந்த முதலீட்டில் அரசு மானியத்துடன் அதிக லாபம் பெற தயங்காமல் இந்த சுயதொழில் செய்யலாம்.

சுயதொழில் ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு..!
இது போன்று சுயதொழில், தயாரிப்பு தொழில், கைத்தொழில், குடிசை தொழில் போன்ற தொழில் சார்ந்த  முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>புதிதாக என்ன தொழில் செய்யலாம்