Food Oil Sales Business Ideas
இன்றைய நிலையில் பலரும் படித்து முடித்துவிட்டு வேலை தேடி கொண்டிருக்கிறார்கள். அதுபோல பலருக்கும் சொந்தமாக ஒரு தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் தினமும் இந்த பதிவின் மூலம் சொந்தமாக தொழில் தொடங்குவதற்கான சில வணிக யோசனைகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வாங்க நண்பர்களே அது என்ன தொழில் அதற்கு முதலீடு எவ்வளவு என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
முதலீடு மற்றும் இடம்:
இந்த தொழில் செய்வதற்கு தனியாக ஒரு இடம் தேவைப்படாது. அதுபோல முதலீடும் குறைவாகத் தான் இருக்கும். அதாவது எண்ணெய் வாங்கும் செலவு மட்டும் தான்.
Food Oil Sales Business Ideas in Tamil:
சொந்தமாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த தொழிலை தாராளமாக தொடங்கலாம். அது என்ன தொழில் என்று கேட்பீர்கள். நாம் உணவிற்கு பயன்படுத்தும் எண்ணெயை விற்பனை செய்யும் தொழிலைப் பற்றி தான் பார்க்க போகிறோம்.
நாம் உணவு சமைப்பதற்கு கட்டாயம் எண்ணெய் தேவை. அதனால் இந்த தொழிலை நீங்கள் தாராளமாக தொடங்கலாம். இதனால் உங்களுக்கு தினமும் ஒரு நல்ல வருமானம் கிடைக்கும்.
கடை தேவையில்லை வீட்டில் இருந்தே தினமும் கைநிறைய சம்பாதிக்கலாம்..! |
தொழில் தொடங்கும் முறை:
இந்த தொழில் செய்வதற்கு முதலில் நீங்கள் உங்கள் ஊர் பகுதியில் இருக்கும் மளிகை கடைகளில் எந்த பிராண்ட் எண்ணெய் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது, எந்த பிராண்ட் எண்ணெயை மக்கள் அதிகமாக வாங்குகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
உதாரணத்திற்கு, Gold Winner, Sun Flower Oil போன்ற எண்ணெய்களில் எந்த எண்ணெயை மக்கள் அதிகமாக வாங்குகிறார்கள் என்று பார்க்க வேண்டும். பின் அதிகமாக விற்கப்படும் எண்ணெயின் டீலரிடம் செல்ல வேண்டும்.
தோராயமாக ஒரு பெட்டியில் 10 லிட்டர் வரை எண்ணெய் இருக்கும். அந்த எண்ணெயை விற்றால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். பின் டீலரிடம் இருந்து மொத்தமாக எண்ணெய்களை வாங்கி கொள்ள வேண்டும்.
நீங்கள் டீலரிடம் இருந்து 5 பாக்ஸ் எண்ணெய் வாங்குகிறீர்கள் என்றால் அதை உங்கள் ஊர் பகுதியில் இருக்கும் மளிகை கடைகள், பெட்டிக்கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் விற்பனை செய்யலாம்.
தோராயமாக ஒரு பெட்டியில் 10 லிட்டர் வரை எண்ணெய் இருக்கும். 10 லிட்டர் ஆயில் விலை தோராயமாக 1000 ரூபாய் என்று வைத்து கொள்வோம். 10 பாக்ஸ் ஆயிலை நீங்கள் 5 கடைகளில், 2 பாக்ஸ் வீதமாக விற்பனை செய்தால் உங்களுக்கு ஒரு நாளைக்கு 10,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.மளிகை கடை வைத்திருப்பவர்கள் யாரும் வெளியூர் சென்று பொருட்களை வாங்கி வரமாட்டார்கள். டீலர்களிடம் இருந்து பொருட்களை பெற்று கொள்வார்கள். அதனால் நீங்கள் எண்ணெய்களை டீலரிடம் இருந்து வாங்கி அதை குறித்த நேரத்தில் இதுபோல விற்பனை செய்தால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இந்த தொழிலை இன்றே தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
தினமும் நல்ல லாபம் தரக்கூடிய அருமையான தொழில்..! |
இந்த தொழிலுக்கு முதலீடே தேவையில்லை, ஆனால் தினமும் கைநிறைய சம்பாதிக்கலாம்..! |
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |