பருத்தி பயிர் பாதுகாப்பு முறைகள் – பகுதி 2

Advertisement

பயிர் பாதுகாப்பு முறைகள் – பருத்தி பயிர்களை தாக்கும் நோய்களும் கட்டுப்படுத்தும் முறைகளும்..! பகுதி இரண்டு..!

பருத்தி பயிரை தாக்கும் நோய்களும், அதன் அறிகுறிகளும், அவற்றை கட்டுப்படுத்தும் வழிமுறைகளையும் இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!

பயிர் பாதுகாப்பு முறைகள் – வேரழுகல் நோய்:

பருத்தி பயிரை பொறுத்தவரை வேரழுகல் நோய் ஏற்படும். இந்த வேரழுகல் நோய்க்கான அறிகுறிகள் மற்றும் தடுக்கும் வழிமுறைகளை பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்வோம் வாங்க.

பயிர் பாதுகாப்பு முறைகள் பகுதி – 1

அறிகுறிகள்

முளையிடும் நாற்றுக்களின், விதையில் கீழ்த்தண்டில் கருப்பு புண்கள், தண்டின் பட்டை இடை நீக்கமடைந்து நாற்றுகள் இறந்துவிடும்.

தண்டின் அடிப்பகுதியில் பட்டை, நார் நாராக உரிந்துவிடும்.

வேர்பகுதி முழுவதும் சிதைந்து விடும். செடியை பிடுங்கினால் எளிதில் வந்துவிடும்.

பயிர் பாதுகாப்பு முறைகள் (Crop Protection)

ட்ரைக்கோடெர்மாவிரிடி 4 கிராம் / கிலோ (அ) சூடோமோனாஸ்ஃபுளுரசன்ஸ் 10 கிராம் / கிலோ கொண்டு விதை நேர்த்தி செய்யவும்.

கார்பாக்சின் (அ) திரம் 5 கிராம் (அ) கார்பென்டசிம் 2 கிராம் / கிலோ விதை நேர்த்தி செய்யவும்.

0.05% பெனோமைல் (அ) 0.1% கார்பென்டசிம் கொண்டு செடிகளின் தூர்களில் ஊற்றி மண்ணை நனைக்கவும்.

தொழுவுரம் 10 டன் / ஏக்கர் (அ) வேப்பம் புண்ணாக்கு 2.5 டன் / ஏக்கர் இடவும்.

ஆரம்ப விதைப்பு (ஏப்ரல் முதல் வாரம்) (அ) தாமத விதைப்பு (ஜீன் கடைசி வாரம்) விதைக்கும் நேரத்தை மாற்றுவதன் மூலம் செடியை அதிக மண் வெப்பநிலையிலிருந்து பாதுகாக்கலாம்.

மண் வெப்பநிலையை குறைக்க, சோளம் மற்றும் நரிப்பயறுவை ஊடுபயிராக நடவும்.

சொட்டு நீர் பாசனம் – முழு விளக்கம்..!

பயிர் பாதுகாப்பு முறைகள் (Crop Protection) – சாம்பல் (அ) தயிர்ப்புள்ளி நோய்: 

பருத்தி பயறை பொறுத்தவரை அதிகளவு சாம்பல் அல்லது தயிர்ப்புள்ளி நோய் இருக்கும் இந்த நோய்களுக்கான அறிகுறிகளும் அவற்றை கட்டுப்படுத்தும் வழிமுறைகளையும் இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க.

அறிகுறிகள்

இலையின் அடிப்புறத்தில், ஒழுங்கற்ற, கசியும் புண்களுடன் சாம்பல் நிற புள்ளிகள் இலையின் மேற்பரப்பில் காணப்படும்.

நோய் தீவிரமடைந்த நிலையில் சாம்பல் நிற நுண் துகள்கள் இலையின் மேற்பரப்பிலும் காணப்படும்.

பாதிக்கப்பட்ட இலைகள் நுணியிலிருந்து உள்நோக்கி காயத்தொடங்கும், பின் மஞ்சள் நிறமாகி, இளம் இலைகள் உதிர்ந்துவிடும்.

நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட வகைகள் சுஜாதா மற்றும் வரலட்சுமி போன்றவைகளை பயன்படுத்தவும்.

பயிர் பாதுகாப்பு முறைகள் – (Crop Protection) :

தாவரக்குப்பைகளை அகற்றி தீயிடவும்.

தானாக வளர்கின்ற பருத்தி செடிகளை அகற்றவும்.

அதிகப்படியான நைட்ரஜன் உரங்களை தவிர்க்கவும்.

மண்ணின் நிலை மற்றும் தாவர வகைகளைப் பொருத்து வயலில் இடைவெளியை சரிசெய்யவும்.

கார்பென்டசிம் 250 கிராம் (அ) வெட்டபுலள் சல்பர் 1.25 – 2.0 கிலோ /ஏக்கர், வாரத்திற்கு ஒருமுறை தெளிக்கவும்.

செண்டு மல்லி பூ சாகுபடி முறை..!
இது போன்று தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம் 
Advertisement