மாடித்தோட்டத்தில் பன்னீர் ரோஜா கொத்து கொத்தாக பூக்க என்ன செய்ய வேண்டும்..!

Paneer Rose Maadi Thottam in Tamil

Paneer Rose Maadi Thottam in Tamil

அன்பு நேயர்களுக்கு அன்பு வணக்கங்கள்..! இன்றைய பதிவில் மாடித் தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு ஒரு அருமையான தகவலை தான் கூறப் போகிறோம். வீட்டில் பூச்செடிகள் வைத்து வளர்ப்பவர்களுக்கு பூக்கள் அதிகமாக பூக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அனைவரும் அதிகம் விரும்பி வளர்க்கும் பூச்செடிகளில் ரோஜா செடிகள் முதலிடத்தை பிடிக்கின்றன.

அதுபோல வீட்டில் பன்னீர் ரோஸ் செடி வளர்ந்து கொண்டே செல்கிறது ஆனால் பூக்கள் பூக்கவே இல்லை என்று கவலைப்படுபவர்களா நீங்கள்..? அப்போ உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்..! வாங்க நண்பர்களே இந்த பதிவின் மூலம் பன்னீர் ரோஜா கொத்து கொத்தாக பூப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

ரோஸ் செடி நன்கு வளர சில டிப்ஸ்..!

மாடித் தோட்டத்தில் பன்னீர் ரோஜா வளர்ப்பு முறை:

மாடித் தோட்டத்தில் பன்னீர் ரோஜா வளர்ப்பு முறை

பன்னீர் ரோஜா கொடியாக வளரும் பூச்செடி ஆகும். இதை நிலத்திலோ அல்லது மண் தொட்டியிலோ வளர்க்கலாம். இது செம்மண்ணில் செழிப்பாக வளரக்கூடியது. ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் வெயில் படும் இடத்தில் இந்த ரோஜா செடியை வளர்க்க வேண்டும்.

ஒரு பக்கெட்டில் போதுமான அளவு செம்மண்ணை எடுத்து கொள்ள வேண்டும். பிறகு இந்த மண்ணில் பன்னீர் ரோஜாகன்றினை நட வேண்டும். மண்ணின் மேல் கிளறி விட்டு தினமும் இந்த செடிக்கு காலை மாலை என 2 வேளையும் போதுமான அளவு தண்ணீர் ஊற்றவேண்டும்.

அதுபோல 7 நாட்கள் அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை மண்புழு உரம் இட வேண்டும். இந்த செடிகளில் பூச்சி தொல்லை அதிகம் ஏற்படாமல் இருப்பதற்கு, ரோஜா செடியின் தண்டு பகுதியில் மஞ்சள் கலந்த நீரை தெளிக்க வேண்டும்.

ரோஜா செடிகள் நன்கு வளர ஆரம்பிக்கும் போது அதன் கிளைகளை ப்ளூனிங் எனப்படும் முறையில், வெட்டி விட வேண்டும். இவ்வாறு செய்வதால் செடிகளில்  அதிகமாக கிளைகள் வளரும். அதுபோல அதிகமாக மொட்டுகள் விடும்.

ஒரே ரோஸ் செடியில் பூக்கள் அதிகம் பூக்க என்ன செய்வது?

பன்னீர் ரோஸ் கொத்து கொத்தாக பூக்க டிப்ஸ்: 

Paneer Rose Maadi Thottam in Tamil

  1. நம் தூக்கி எரியும் வெங்காய தோலை இந்த ரோஜா செடிக்கு உரமாக போடலாம்.
  2. இந்த செடியின் மேல் பகுதியில் இருக்கும் மண்ணை நன்றாக கிளறி விட்டு காய்கறி கழிவுகளை அதற்கு உரமாக போடலாம்.
  3. அதுபோல முட்டை ஓட்டை தூளாக செய்து, அதை இந்த செடியின் வேர் பகுதியில் தூவி விடலாம்.
  4. மொட்டுக்கள் விடும் நேரத்தில் வாழைப்பழத்தோலை அரைத்து, அதை தண்ணீரில் கலந்து செடிகளுக்கு ஊற்ற வேண்டும்.
  5. அதுபோல மற்ற பழங்களின் தோல் மற்றும் கொட்டைகளை வெயிலில் காயவைத்து அரைத்து அதனுடன் மஞ்சள், வேப்பம் புண்ணாக்கு மற்றும் காபித்தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
  6. இந்த உரத்தை பூச்செடிகள் மொட்டு விடும் நேரத்தில் மண்ணை கிளறி விட்டு இதை போட வேண்டும்.

இதுபோல செய்து வந்தால் பன்னீர் ரோஸ் கொத்து கொத்தாக மலரும். இந்த உரத்தை மற்ற செடிகளுக்கும் உரமாக போடலாம்.

மேலும், ரோஜா செடியில் பூக்கள் பூக்க என்ன உரம் போடா வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து பாருங்கள் 👉👉👉 ரோஜா செடிகள் தொடர்ச்சியாக பூக்கள் பூக்க 10 பயனுள்ள டிப்ஸ்..!

 

இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>இயற்கை விவசாயம்