பன்னீர் ரோஸ் செடி கொத்து கொத்தாக பூ பூக்க உரம்..! Paneer Rose Plant Growing Tips..!

Advertisement

பன்னீர் ரோஸ் செடி கொத்து கொத்தாக பூ பூக்க உரம்..! Paneer Rose Plant Growing Tips..!

பன்னீர் ரோஸ் செடி வளர்ப்பு / Paneer Rose Plant Growing Tips: பன்னீர் ரோஸ் பொதுவாக பலவகையான பயன்பாட்டிற்கு பயன்படுத்தபடுகிறது. அதாவது அலங்கார பொருள் முதல் ஆரோக்கிய பொருளாகவும் பயன்படுத்தபடுகிறது. இத்தகைய பன்னீர் ரோஸ் செடியினை நாம் தோட்டத்தில் வளர்ப்போம் நன்றாகவும் பராமரிப்போம்.

இருப்பினும் பூக்கள் அதிகமாக பூக்காது, சரி இங்கு பன்னீர் ரோஸ் செடி கொத்து கொத்தாக பூக்கள் பூக்க உரம் தயாரிப்பது எப்படி என்று இங்கு காண்போம் வாங்க.

ரோஜா செடி பூ அடர்த்தியாக வளர

பன்னீர் ரோஸ் செடி கொத்து கொத்தாக பூ பூக்க உரம் / Paneer Rose Plant Growing Tips:

உரம் தயாரிக்க தேவையான பொருட்கள்:

  1. டீத்தூள் கழிவுகள் – 50 கிராம்
  2. காபித்தூள் – 2 ஸ்பூன்
  3. வாழைப்பழ தோல் – சிறிதளவு பொடிதாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்
  4. தயிர் அல்லது மோர் – 2 ஸ்பூன்
  5. தண்ணீர் – தேவையான அளவு
ஒரே ரோஸ் செடியில் பூக்கள் அதிகம் பூக்க என்ன செய்வது?

பன்னீர் ரோஸ் செடி கொத்து கொத்தாக பூ பூக்க உரம் / Paneer Rose Plant Growing Tips செய்முறை:

paneer rose

ரோஜா செடி பூ அடர்த்தியாக வளர – Paneer Rose Plant Growing Tips:- ஒரு அகலமான பக்கெட்டினை எடுத்துக்கொள்ளுங்கள் அவற்றில் பாதியளவு தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள்.

பின் மேல் கூறப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் பக்கெட்டில் சேர்த்து நன்றாக கலந்து மூன்று நாட்கள் நன்றாக ஊறவைக்கவும்.

பின் ரோஸ் செடி நட்டு வைத்துள்ள வேர் பகுதியில் மண்ணினை நன்றாக கொத்திவிட்டு பாத்தி எடுக்கவும்.

பிறகு இந்த நீரை ரோஸ் செடியின் வேர் பகுதியில் ஊற்றி பின் மண் அணைக்க வேண்டும்.

இந்த முறையை 15 நல்லது ஒரு மாதத்திற்கு ஒரு முறை பின்பற்றலாம்.

இவ்வாறு செய்வதினால் ரோஸ் செடி நன்கு ஆரோக்கியமாக வளரும், செடியில் பூக்களும் அதிகமாக பிடிக்க ஆரம்பிக்கும்.

ரோஸ் செடி நன்கு வளர சில டிப்ஸ்..!

Paneer Rose Plant Growing Tips – ரோஸ் செடிகள் மண் கலவை:

50% செம்மண், 30% உரம், 10% மணல், 10% COCO PEAT கொண்டு ரோஸ் செடிக்கு மண் கலவை தயார் செய்ய வேண்டும். இவ்வாறு மண் கலவை தயார் செய்து ரோஸ் செடியை நட்டு வைத்தால் ரோஸ் செடி நன்றாக வளரும் மற்றும் பூக்களும் அதிகமாக பிடிக்க ஆரம்பிக்கும்.

ரோஜா செடிகள் தொடர்ச்சியாக பூக்கள் பூக்க 10 பயனுள்ள டிப்ஸ்..!

 

இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement