பாலக்கீரை சாகுபடி மற்றும் அதன் பயன்கள்..!

spinach cultivation

பாலக்கீரை சாகுபடி முறை (spinach cultivation) மற்றும் பாலக்கீரை பயன்கள்..!

கீரையை பொறுத்தவரை சாகுபடிக்கு என்று எந்த காலமும் கிடையாது. எனவே, விவசாயிகள் பொதுவாக பலவகையான கீரைகளை அனைத்து மாதங்களிலும் சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் நல்ல லாபத்தை பெற்று வருகின்றனர்.

எனவே அந்த வகையில் இப்போது நாம் பாலக்கீரை சாகுபடி (spinach cultivation) முறையை பற்றி தெரிந்து கொள்வோம். பாலக்கீரை, கீரை வகை சார்ந்த ஒரு சிறந்த மூலிகை கீரையாக விளங்குகிறது.

சரி இப்போது நாம் பொதுநலம் பகுதியில் இன்று பாலக்கீரை சாகுபடி (spinach cultivation) முறை மற்றும் பாலக்கீரை பயன்கள் (spinach benefits) பற்றி தெளிவாக படித்தறிவோம் வாருங்கள்.

மல்லிகை பூ சாகுபடி முறைகள்..!

உரம்:

பாலக்கீரை சாகுபடி (spinach cultivation): விவசாயத்தின் உயிர் ஜீவ நாடியாக ஜீவாமிர்தம் விளங்குகிறது. எனவே ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீரில் கலந்து விடவேண்டும். இதனால் நோய் தாக்குதல் குறைந்து கீரைகளின் வளர்ச்சி சீராக இருக்கும்.

பாலக்கீரை சாகுபடி முறை (spinach cultivation):

பாலக்கீரை சாகுபடி (spinach cultivation) பொறுத்தவரை அதிக மழைப் பொழியும் சமயத்தில் விதைப்பைத் தவிர்க்க வேண்டும்.

விதைக்கப்போகும் நிலத்தின் அளவை முடிவு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தை நன்கு உழுது, 6 அடி நீளம் 4 அடி அகலத்தில் பாத்திகள் எடுக்க வேண்டும்.

ஒரு பாத்திக்கு 10 கிலோ வீதம் தொழுவுரத்தைத் தூவி சமப்படுத்த வேண்டும். பிறகு ஒவ்வொரு பாத்தியிலும் ஒரு கிலோ வீதம் ஜீவாமிர்தம் இட வேண்டும்.

ஒவ்வொரு பாத்தியிலும் 100 கிராம் அளவில் கீரை விதைகளைத் தூவி, குச்சி கொண்டு குறுக்கும் நெடுக்குமாகக் கீறிவிட வேண்டும்.

ஒரு பாத்திக்கு 500 மில்லி ஜீவாமிர்தம் என்ற கணக்கில் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

லாபம் அள்ளி தரும் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி ..!

பாலக்கீரை சாகுபடி – பாதுகாப்பு முறை:

களை நிர்வாகம்:

பாலக்கீரை சாகுபடி (spinach cultivation) பொறுத்தவரை ஒரு வார காலத்தில் விதைகள் முளைக்க ஆரம்பிக்கும். 10 – 15 நாட்கள் கழித்து, களை எடுக்க வேண்டும்.

பின்னர் களைகள் அதிகம் வளராதபடி களைகளை கட்டுப்படுத்த வேண்டும். முதல் களை எடுக்கும் பொழுது பயிரின் எண்ணிக்கையைப் பொறுத்து பயிர் களைதல் வேண்டும்.

பயிர் பாதுகாப்பு முறை:

பாலக்கீரை சாகுபடி (spinach cultivation) பொறுத்தவரை இக்கீரைகளில் பூச்சிகளைச் சமாளிக்க நொச்சி, பிரண்டை, சோற்றுக்கற்றாழை ஆகிய மூன்றையும் சமமாக எடுத்து அரைத்து, ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீரில் கலந்து ஒரு நாள் வைத்திருக்க வேண்டும்.

அதனை 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி கரைசல் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

அறுவடை:

பாலக்கீரை சாகுபடி (spinach cultivation) பொறுத்தவரை 30 வது நாளிலிருந்து இலைகளை வெளிப்பக்கத்திலிருந்து வெட்டி உபயோகப்படுத்தலாம். 6-8 முறை அறுவடை செய்யலாம். இலைகளை பூ விடும் முன்பு பறித்து விட வேண்டும்.

முளைக்கீரையில் இத்தனை பயன்களா??? பயிரிடும் முறை மற்றும் பயன்கள்.

பாலக்கீரை பயன்கள் (spinach benefits):

1 பாலக் கீரையுடன் (spinach benefits) வேப்பிலை, ஓமம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் பெருவயிறு குறையும்.

2 நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த கீரை மிகவும் சிறந்தது. ஏனெனில் இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை நிலையாக வைத்திருக்க இந்த கீரை உதவுகிறது.

3 புற்று நோய் செல்கள் உருவாகாமல் தடுத்து நிறுத்த கூடியது. பாலக் கீரை (spinach benefits) ரத்த சிவப்பு அணுக்களை அதிகமாக உற்பத்தி செய்வதால் இது அனிமீயா நோய் வராமல் தடுக்க உதவுகிறது.

4 பாலக் கீரையில் (spinach benefits) போலிக் ஆசிட் அதிகளவில் உள்ளதால் கர்பிணிகள் இதனை அதிகம் எடுத்துக் கொண்டால் நல்லது.

6 இதில் மெக்னீசியம், ஜின்க், காப்பர் மற்றும் விட்டமின் – கே அதிகம் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக உதவுகின்றன.

7 இந்த கீரையில் புரத சத்து நிறைந்துள்ளது, எனவே இந்த கீரையை தினமும் எடுத்து கொண்டால் மாரடைப்பு, ரத்த குழாய்கள் அடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.

8 கண் பார்வை நன்றாக தெரிய இந்த கீரை (spinach benefits) உதவி செய்கின்றன. இதனை சிறுபருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து சாப்பிடலாம்.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.