முளைக்கீரையில் இத்தனை பயன்களா??? பயிரிடும் முறை மற்றும் பயன்கள்.

Advertisement

முளைக்கீரை சாகுபடி ..!

முளைக்கீரை சாகுபடி  குறிகிய காலத்தில் நடவு செய்ய கூடிய பயிராகும். இது குறிப்பாக உலகில் பல இடங்களில் பயிரிடப்படுகிறது. இது பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் இருக்கும் கீரையாகும். மிதமான வெப்ப மண்டலம் மற்றும் வெப்ப மண்டலம் நாடுகளில் இக்கீரை நன்றாக வளர்கிறது. நடவு செய்யப்பட்ட நிலம் மற்றும் தரிசு நிலத்திலும் இந்த கீரை நான்றாக விளையும் தன்மை பெற்றது. முளைக்கீரையை சதாரணமாக இந்தியாவில் எல்லா இடங்களிலும் பயிரிடப்படும் கீரையாகும்.

ரோஸ் செடி நல்ல வளர்வதற்கு சில டிப்ஸ்..!

சரி இப்போது முளைக்கீரை சாகுபடி முறை மற்றும் அதன் பயன்கள் ஆகியவற்றை இந்த பகுதியில் நாம் காண்போம் வாங்க..!

முளைக்கீரை சாகுபடி முறை:

பயிரிட ஏற்ற காலங்கள்:

முளைக்கீரை சாகுபடி பொறுத்தவரை ஆண்டு முழுவதும் பயிரிடலாம். சித்திரை, ஆடி, மார்கழி மற்றும் மாசி போன்ற காலம் விவசாயம் செய்ய ஏற்ற காலங்கள்.

மண்:

முளைக்கீரை சாகுபடி பொறுத்தவரை நல்ல மண் மற்றும் அமிலத்தன்மை கொண்ட செம்மண் நிலங்கள் முளைக்கீரை சாகுபடி முறைக்கு ஏற்றதாகும். அதிக களிமண் மற்றும் முற்றிலும் மணல் கலந்த நிலங்கள் முளைக்கீரை சாகுபடி முறைக்கு ஏற்றதல்ல.

விதையளவு:

ஒரு ஏக்கருக்கு 2.5 கிலோ விதைகள் போதுமானது.

நிலம் தயாரித்தல்:

நடவுக்கு தேர்தெடுத்த நிலத்தை ஏக்கருக்கு 5 டன் தொழு உரம், 4 டன் எருவைக் பரவலாகக் கொட்டி உழவு செய்து மண்ணை பயன்படுத்த வேண்டும். பின்பு தேவையான அளவு பாத்திகள் அமைக்க வேண்டும்.

மாடித்தோட்டத்தில் காலிஃபிளவர் பயிரிடலாம் வாங்க..!

விதைத்தல்:

கீரை விதைகளோடு மணல் கலந்து பாத்திகளில் விதைகளை தெளிக்க வேண்டும். பின்பு கையால் கிளறி பாசனம் செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்:

விதைத்த முதல் நாள் நீர் பாய்ச்ச வேண்டும். முக்கியமாக நீர் ஒரு பக்கமாக அடித்து செல்லாமல் கவனமாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்பு விதைத்த மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

உரங்கள்:

ஜிவாமிர்தக் கரைசலை 7 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை பாசன நீரில் கலந்து விடவேண்டும்.

பாதுகாப்பு முறைகள்:

களை நிர்வாகம்:

ஒரு வாரத்திற்குள் விதைகள் முளைக்க ஆரம்பித்து விடும் 10-15 நாட்களில் களை எடுக்க வேண்டும். பயிர்களின் எண்ணிக்கை பொறுத்து பயிர் களைதல் வேண்டும்.

பயிர் பாதுகாப்பு:

பூச்சி தாக்குதல்:

கீரைகளில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டால் இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் மூன்றையும் சம அளவு எடுத்து மூன்றையும் நன்றாக இடித்து ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீரில் கலந்து 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி கரைசல் என்ற விகிதத்தில் கலந்து 10 நாட்களுக்கு ஒரு முறை அதிகாலை வேளையில் தெளிக்க வேண்டும்.

அறுவடை:

விதைத்த 20-25 நாட்களில் கீரையை வேறுடன் பறிக்க வேண்டும். கீரை முற்றிவிடாமல் சரியான பருவத்தில் அறுவடை செய்ய வேண்டும்.

முளைக்கீரை பயன்கள் :

முளைக்கீரை

  • முளைக்கீரையில் அடங்கியுள்ள இரும்பு சத்து மற்றும் தாமிரம் இரண்டும் உடலுக்கு அதிகளவு ஆரோக்கியத்தை அளிக்கிறது.
  • முளைக்கீரை நாம் அதிகளவு உட்கொண்டால் இரத்த சோகையை குணப்படுத்தும் அரும்மருந்தாக விளங்குகிறது.
  • தினமும் முளைக்கீரையை சாப்பிட்டு வந்தால் சொரி, சிரங்கு பிரச்சனைகள் குணமாகிறது.
  • இளைத்த உடல் தேறவும், தேகத்திற்கு வலு கிடைக்கவும் இது சிறந்த மருந்தாக செயல்படுகிறது.
  • முளைக்கீரையில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை சீராக்கவும், கொலஸ்ட்ராலை குறைக்கவும் உதவுகிறது.
  • இது மலமிளக்கியாகவும் செயல்படுகின்றது. மலச்சிக்கல் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • கண் எரிச்சல் மற்றும் கண்பார்வை பிரச்சனைகள் குணமாகும்.
  • இருமல், தொண்டைபுண் போன்ற பிரச்சனைக்கு முளைக்கீரை தீர்வாகிறது.

தேனீ வளர்ப்பு – விரிவான விளக்கம் !!!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.

Advertisement