அணில் குஞ்சு வளர்ப்பது எப்படி
வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் அழகான அணில் குஞ்சுகளை எப்படி வளர்ப்பது என்றுதான் தெரிந்துகொள்ளப்போகிறோம். பொதுவாகவே வீட்டில் நாய், பூனை, ஆடு, மாடு, கோழி என்று பலவகையான விலங்குகளையும் வளர்ப்பார்கள். ஆனால் இப்பொழுது ஒரு சில வீட்டில் அணில்களையும் வளர்த்து வருகிறார்கள். காரணம் என்ன தெரியுமா? ஒரு சிலர் ஆன்மிகம் சம்மந்தமாக ஒரு சில விலங்குகளை வளர்த்தால் வீட்டில் செல்வம் பெருகும் என்று இதுபோல் விலங்குகளை வளர்ப்பார்கள். இன்னும் ஒரு சிலர் அணில் குஞ்சுகள் மரத்தில் இருந்து தவறி விழுவதினால் அதை எடுத்து வளர்ப்பார்கள். எனவே அணில் குஞ்சுகளை எப்படி வளர்ப்பது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.
நாய் குட்டிகளை பராமரிக்க சில டிப்ஸ்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க! |
அணில் குட்டி வளர்ப்பு:
கைவிடப்பட்ட அணில் குட்டிகளை வளர்பதற்கு முதலில் அதற்கு படுக்கைக்கு வசதிகள் மிகவும் முக்கியம். உங்கள் வீட்டில் இருக்கும் சின்ன அட்டை பெட்டிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது எடுத்துக்காட்டாக Chappal box, சிறிய கூண்டு போன்றவற்றை எடுத்துக்கொண்டு அதில் காட்டன் துணிகள், அல்லது வைக்கோல், தேங்காய் நார் போன்றவற்றை அந்த அட்டை பெட்டிகளில் வைக்கவேண்டும்.
இதுபோன்ற காட்டன் துணிகள், வைக்கோல், தேங்காய் நார் போன்றவற்றை வைப்பதினால் வெப்பம் அதிகமாக இருக்கும். அணில் குஞ்சுகள் வளர்வதற்கு வெப்பங்கள் அதிகம் தேவைப்படுகிறது. எனவே இதுபோன்று படுக்கைகளை அதற்கு தயார் செய்யவேண்டும்.
அணில் குட்டி என்ன சாப்பிடும்:
அணில் குட்டிகள் பிறந்து இரண்டு வாரங்கள் வரையும் கண் விழிக்காது. அவை சிறியதாக இருப்பதினால் அதற்கு தகுந்தது போல உணவு அழிப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
முதலில் அதற்கு உணவு என்றால் பால் மட்டும் தான், பாலை கொஞ்சம் சூடு படுத்தி மிதமான சூட்டில் பால் கொடுக்கவேண்டும். பால் கொடுப்பதற்கு Ink Pillar வாங்கி கொண்டு அதில் பாலை ஊற்றி ஐந்து சொட்டுகள் கொடுக்க வேண்டும். பாலை ஒரு முறை கொடுத்தவுடன் கீழே விடவேண்டும்.
தினமும் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை இதற்கு பால் தரவேண்டும். இந்த அணில் குட்டிகள் கண் விழித்த பிறகு 3 மணி நேரத்திற்கு ஒரு முறை பால் கொடுக்கவேண்டும்.
அணில் குட்டிகள் கொஞ்சம் வளர்ந்ததும் அதற்கு பழங்கள், பேரீச்சை பழம் , காய்கறிகள், மாட்டு பால், ஆட்டு பால் போன்றவற்றை தினமும் கொடுக்கலாம். முக்கியமாக அணில் குஞ்சுகளை வளர்க்கும் பொழுது வீட்டில் இருக்கும் நாய், பூனைகளிடம் இருந்து பாதுகாப்பது அவசியம்.
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |