பேங்கில் 3 லட்சம் தனிநபர் கடனுக்கான மொத்த வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு தெரியுமா..?

Advertisement

Axis Bank Personal Loan 3 Lakh EMI Calculator in Tamil

நாம் அனைவரும் கண்டிப்பாக தொழில் மற்றும் அலுவலக பணி என இந்த இரண்டு முறைகளில் ஏதேனும் ஒன்றின் மூலமாக தான் பணம் சம்பாதித்து வருகிறோம். அதன் படி பார்த்தால் இவ்வாறு நாம் பணம் சம்பாதித்து வருகிறோம் என்பதை காட்டிலும், எவ்வளவு ரூபாய் வரையும் பணம் சம்பாதிக்கின்றோம் என்பது தான் மிகவும் முக்கியமான ஒன்று. ஏனென்றால் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்யும் அளவில் ஒவ்வொருவரும் பணம் சம்பாதித்தால் எந்த பிரச்சனையும் இல்லாத மகிழ்ச்சியான வாழ்க்கையினை வாழலாம்.

அதுவே நம்முடைய வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாக இருந்தால் கண்டிப்பாக பணம் கூடுதலாக சம்பாதிக்க முயற்சி செய்ய வேண்டும் அல்லது கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும். அப்படி பார்த்தால் நம்முடைய தனிப்பட்ட தேவைக்காக வாங்கும் கடனே தனிநபர் கடன் எனப்படுகிறது. இத்தகைய தனிநபர் கடன் பெரும்பாலும் அனைத்து வங்கியிலும் ஒவ்வொருவரின் தகுதிக்கு ஏற்றவாறு அளிக்கப்படுகிறது. எனவே நீங்கள் உதாரணமாக Axis வங்கியில் 3 லட்சம் ரூபாயினை தனிநபர் கடனாக வாங்கி இருந்தால் எவ்வளவு அசல், வட்டி கட்ட வேண்டும் என்பதை விரிவாக காணலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஆக்சிஸ் பேங்க் தனிநபர் கடன்:

கடன் தொகை:

Axis வங்கியில் தனிநபர் கடன் தொகையாக 50,000 ரூபாய் முதல் 40,00,000 ரூபாய் வரையிலும் தோராயமாக வழங்கப்படுகிறது.

வட்டி விகிதம்%:

உங்களது கடனுக்கான வட்டி விகிதமாக 10.49% முதல் 22% வரை அளிக்கப்படுகிறது.

கடன் காலம்:

தனிநபர் கடனாக நீங்கள் வாங்கிய கடனை 7 வருட கால அளவிற்குள் திருப்பி செலுத்தி விட வேண்டும்.

தேவையான ஆவணம்:

  • பிறந்த தேதி சான்றிதழ்
  • ஆதார் அட்டை
  • பாஸ்போர்ட்
  • ரேஷன் கார்டு
  • ஓட்டுநர் உரிமம்
  • வாக்காளர் அட்டை
  • பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
  • பான்

மேலே சொல்லப்பட்டுள்ள ஆவணங்கள் இல்லாமல் இந்த கடனுக்கான விண்ணப்பம் இருக்க வேண்டும்.

Axis பேங்க் 2 லட்ச வீட்டு கடனுக்கு 4,123 ரூபாய் EMI என்றால் மொத்த வட்டி எவ்வளவு 

3 லட்சம் தனிநபர் கடனுக்கான மொத்த வட்டி..?

கடன் தொகை: 3,00,000 ரூபாய் 

வட்டி விகிதம்%: 10.49%

கடன் காலம்: 5 வருடம் 

மாத EMI: 6,446 ரூபாய் 

மொத்த வட்டி: 86,801 ரூபாய் 

அசல் தொகை: 3,86,801 ரூபாய் 

குறிப்பு: நீங்கள் வாங்கிய கடன் தொகையை பொறுத்து வட்டி தொகை மற்றும் EMI தொகை மாறுபடும். 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement