Books Java Developer Must Read in Tamil
ஜாவா 1991 ஆம் ஆண்டு சன் மைக்ரோசிஸ்டம் நிறுவனத்தை சேர்ந்த ஜேம்ஸ் கோஸ்லிங் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு 1995 ஆம் ஆண்டு ஜாவாவின் முதல் பதிப்பு java 1.0 வெளியிடப்பட்டுள்ளது. ஜாவா பொருள் சார்ந்த நிரலாக்க மொழி (Object Oriented Programming Language) ஆகும். ஜாவா நவீன காலகட்டத்தில் அனைவரும் கற்றுவரும் மொழியாகும். அந்தவகையில் இப்பதிவில் ஜாவா டெவெலப்பர்களுக்கு பயனுள்ள வகையில் அவர்கள் படிக்க வேண்டிய புத்தகங்களை பதிவிட்டுள்ளோம். எனவே இப்பதிவை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே
👉 https://bit.ly/3Bfc0Gl
Head First Java Book:
ஹெட் ஃபர்ஸ்ட் ஜாவா புத்தகத்தை Kathy Sierra & Bert Bates என்ற நூலாசிரியர்கள் எழுதியுள்ளனர். இப்புத்தகம் ஆரம்பநிலையில் உள்ளவர்களுக்கான புத்தகம். இதில் உள்ள வினாடி வினாக்கள் மூலம் எளிதில் புரிந்து கொள்ளலாம். மேலும், இது ஆப்ஜெக்ட், த்ரெட், சேகரிப்பு மற்றும் மொழி பற்றிய அத்தியாவசியமான ஜாவா நிரலாக்க பாடங்களை குறிப்பிடுகிறது.
Java: A Begginer’s Guide Book:
இப்புத்தகத்தை Herbert Schildt என்ற நூலாசிரியர் எழுதியுள்ளார். இப்புத்தகம் மாணவர்கள் மற்றும் புதிய புரோகிராமர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. மாணவர்கள் மற்றும் புதிய புரோகிராமர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய அனைத்தும் இப்புத்தகத்தில் உள்ளது.
Effective Java Book:
எஃபக்டிவ் ஜாவா புத்தகத்தை Joshua Bloch என்ற நூலாசிரியர் எழுதியுள்ளார். இப்புத்தகம் நுழைவுநிலை மற்றும் இடைநிலை டெவலப்பர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் ஒரு ஜாவா புரோகிராமர் சந்திக்கும் நிரலாக்க சிக்கல்களை தீர்க்கும் வகையில் இப்புத்தகத்தில் விளக்கங்கள் உள்ளன.
கர்ப்ப காலத்தில் படிக்க வேண்டிய புத்தகங்கள் |
Head First Design Patterns Book:
ஹெட் ஃபர்ஸ்ட், Eric Freeman என்ற நூலாசிரியர் எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில் பயிற்சிகள் மற்றும் நினைவக வரைபடங்கள் போன்ற பயனுள்ள கருவிகள் உள்ளன. ஜாவாவின் வடிவமைப்பு முறைகளை தெரிந்து கொள்வதற்கு இப்புத்தகம் பயனுள்ளதாக இருக்கிறது.
Spring in Action Book:
இப்புத்தகத்தை Craig Walls and Ryan Breidenbach என்பவர் எழுதியுள்ளார். மேம்பட்ட ஜாவா புரோகிராமர்களுக்கு இப்புத்தகம் சிறந்தாக இருக்கும். உங்களின் ஜாவா அறிவை வளர்பதற்கான முக்கிய கருவியாகவும் இது இருக்கும்.
Clean Code Book:
இப்புத்தகம் Robert C. Martin (aka Uncle Bob) என்பவரால் எழுதப்பட்டுள்ளது. ஜாவாவில் க்ளீயரான கோடுகளை எழுதுவதற்கு இப்புத்தகவும் அவசியமாக உள்ளது.
Test Driven TDD And Acceptance TDD For Java Developers:
இப்புத்தகத்தை Lasse Koskela என்பவர் எழுதியுள்ளார். தனிப்பட்ட ஆட்டோமேஷன் டெஸ்டிங் புரோகிராம்களை பற்றி தெரிந்து கொள்வதற்கு இப்புத்தகம் சிறந்ததாக இருக்கும்.
Core Java Volume 1: Fundamentals:
இப்புத்தகத்தை Cay S. Horstmann என்பவர் எழுதியுள்ளார். இப்புத்தகம் ஜாவாவின் பல்வேறு அம்சங்களை பற்றி கூறுகிறது. ஜாவா டெவலப்பர்கள் பராமரிக்கக்கூடிய குறியீட்டை எழுதுவதற்கு இப்புத்தகம் பயனுள்ளதாக இருக்கும்.
கம்பெனியை நடத்துவதற்கு சிறந்த புத்தகங்கள்..! |
Java Concurrency in Practice Book:
இப்புத்தகத்தை Brian Goetz என்பவர் எழுதியுள்ளார். இப்புத்தகம் மேம்பட்ட ஜாவா டெவலப்பர்களுக்கான சிறந்த ஜாவா நிரலாக்க புத்தகங்களில் ஒன்றாகும். ஒத்திசைவு மற்றும் மல்டித்ரெடிங் பற்றிய விவரங்களை புரிந்து கொள்வதற்கு இப்புத்தகம் பயனுள்ளதாக இருக்கும்.
Thinking in Java Book:
இப்புத்தகத்தை Bruce Eckel என்பவர் எழுதியுள்ளார். பொருள் சார்ந்த நிரலாக்கத்தை கற்றுக்கொள்வதில் ஆர்வமாக உள்ளவர்களுக்கு இப்புத்தகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதுபோன்ற புத்தகங்களை பற்றி தெரிந்துகொள்ள | Books |
இதுபோன்ற புத்தகங்களை பற்றி தெரிந்