இந்தியன் வங்கியில் வாகன கடன் வாங்க போறிங்களா..? அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க..!

Advertisement

Indian Bank Car Loan Eligibility in Tamil

இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் அனைவருக்குமே பயனுள்ளதாக அமையும் நண்பர்களே. ஆம் நண்பர்களே இன்றைய சூழலில் அனைவருக்குமே இரு சக்கர வாகனத்தில் செல்வதை விட நான்கு சக்கர வாகனமான காரில் செல்வது தான் பிடிக்கின்றது. ஆனால் கார் வாங்க பணம் அதிக அளவு தேவைப்படும். அப்படி நமக்கு தேவைப்படும் பணத்தேவையை பூர்த்தி செய்வதற்காக வங்கிகள் பல வகையான கடன்களை அளிக்கின்றது.

அப்படி அளிக்கும் கடன்களில் ஒன்று தான் வாகன கடன். அதனால் அதனை பெற்று உங்களின் ஆசையினை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். ஆனால் அப்படி வாகன கடன் பெற வேண்டும் என்றால் சில தகுதிகள் வேண்டும். இந்த தகுதிகள் வங்கிகளுக்கு மாறுபடும். அதனால் தான் இன்றைய பதிவில் இந்தியன் வங்கியில் வாகன கடன் வாங்க இருப்பவர்களுக்கான தகுதி அளவுகோல்களை பற்றி பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்தியன் வங்கியில் வாகன கடன் பெறுவதற்கு தேவையான தகுதியை அறிந்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> 2023-ல் இந்தியன் வங்கியில் 5 லட்சம் கார் லோன் வாங்கினால் வட்டி இவ்வளவு தானா அப்போ EMI எவ்வளவு

Indian Bank Car Loan Eligibility Criteria in Tamil:

Indian Bank Car Loan Eligibility Criteria in Tamil

  1. இந்தியன் வங்கியில் வாகன கடன் பெறுவதற்கு உங்களுக்கு நல்ல கிரெடிட் ஸ்கோர் தேவை.
  2. உங்களுக்கு 21 வயது முழுமையாக அடைந்து இருக்க வேண்டும்.

இந்தியன் வங்கியில் வாகன கடன் பெறுவதற்கு தகுதியான வாடிக்கையாளர்கள்:

  1. சம்பளம் வாங்கும் ஊழியர்கள்
  2. தொழில் வல்லுநர்கள்
  3. வணிகர்கள்
  4. சுயதொழில் செய்யும் நபர்கள்
  5. ஓய்வூதியம் பெறுவோர்
  6. இந்தியன் வங்கி ஊழியர்கள்
  7. வேறொரு வங்கியின் ஊழியர்களாகஇருப்பினும், குறைந்தபட்சம் 3 வருட பணி அனுபவத்தை காட்டும் தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.
  8. வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI-கள்)

NRI-களைப் பொறுத்தவரை கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே கார் கடன் வழங்கப்படும்:

  1. குறைந்தபட்ச மாத வருமானம் ரூ.40,000 ஆக இருக்க வேண்டும்.
  2. உங்களின் குடும்ப உறுப்பினர் மகன் அல்லது மகள், தாய், தந்தை அல்லது மனைவி உத்தரவாதம் வழங்க வேண்டும்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> SBI வங்கியில் புதிதாக Credit Card வாங்க போறிங்களா அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க

மேலும் இது போன்ற தகுதிகளை பற்றி தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும் 👉👉👉👉👉 Eligibility

 

Advertisement